Sunday, November 30, 2008

கட்டு அவிழ்த்த மாடு

கடை முடித்து வீடு திரும்புகையில் இரவு மணி பத்தாகியிருந்தது. வீடு எங்கள் ஊர் குளக்கரை வரை நடந்து சென்று திரும்ப ...

தெரு முடிவின் எதிர் புறம் நேர் கொண்ட பார்வையுடன் விரைவான நடை தெரு பாதையின் நடுவில் வந்து கொண்டிருக்கும் அந்த சிகப்பு மாடு இரவு விளக்கின் வெளிச்சத்தில் ஆள் இல்லா அந்த நேரம் நான் பயத்தில் ...

எண்ணற்ற கேள்விகளாய் என் மனது ஏன் இந்த வேகத்துடன் மாடு வருகிறது ? யாருடைய வயலில் போய் மேயப்போகிறதோ தெரியவில்லை என்கிற கவலை வேறு (என் வயலும் அதற்குள் அடக்கம்)

நான் யோசிக்க... மாடு நெருங்க ...

நடையின் வேகம் குறைந்து நின்று நிமிர்ந்த என்முகம் நோக்கிய மாடு அதன் இலக்கை திசை திருப்பி இரவின் பரப்புக்குள் எங்கேயோ ...

சரியான வழிகாட்டுதல் இல்லா மனசும் இப்படிதாங்க நாம தேடி போற இலக்கானது இடையில வர்ற தடையினலா திசை மாறி போயிருதுங்க சரியான வழிகாட்டுதல் அவசியங்க ...

இல்லாட்டினா சரியான வழிகாட்டிய தேடிபோறது அவசியங்க

(தொடர்வோம்)

தடுமாறிய மனம்.

29.11.2008 காலை வாய்க்கால் பக்கம் சென்றேன். வாய்க்கால் இரு கிளையாக பிரியும் இடம் அதை ஒட்டிய சிறுபள்ளம்
ஒருவர் கீழ் குனிந்து அதை கைகளால் துலாவி கொண்டிருந்தார்.

அவரது செய்கையால் ஈர்க்கப்பட்ட நான் அவர் அருகில் சென்று என்ன என்று வினவ..

விறால் மீன் ஒன்று எனச்சொல்லி தன்கைகளால் துலாவி கொண்டே இருந்தார்.

விறால் மீனும் அவருக்கு போக்கு காட்டி அங்கும் இங்கும் செல்வதாக இருந்தது.

கடைசியில் ஒரு ஓரமாக ஒதுங்கியது எனக்கு தெரிய அவருக்கு தெரியவில்லை.

என் ஆசை நான் சொல்லவில்லை அது இருக்கும் இடத்தை..
நாம் பிடித்து கொண்டு போய்விடலாம் என்ற மனதுடன் அவர் தடுமாற்றத்தை பார்த்து கொண்டே நின்றேன்.

கடைசியாய் அது இருக்கும் இடம் அறிந்து தன்துண்டினால் அவர் பிடித்தார். தடுமாறிய மனதுடன் ஏதோ சங்கடம் ஆட்கொள்ள அந்த இடம் விட்டு நகர்ந்தேன்.

Saturday, November 29, 2008

நாடோடி

25,26.11.2008 கிழமைகளில் எங்கள் ஊர் பகுதிகளில் (தஞ்சை மாவட்டம்) அறிவிக்கபடாத ஊடரங்கு உத்தரவு. காரணம் மழை யும் ,மழையுடன் கூடிய அதிவேக காற்றும்.

நீங்கமற நிறைந்திருந்த தண்ணீர் , மின்சாரம் இல்லை மின்சாரம் சார்ந்த அத்தனையும் பயன் இல்லாமல் போனது.

இந்த மூன்று நாட்களிலும் நண்பர்களுடன் நான் நாடோடியாய்

பொழிந்து போன தண்ணீரில் எதிர் நீச்சல் போட்டு முன்னேறிய வளர்ப்பு மீன்கள். வளர்த்தவர்களை மறந்து
மற்றவர்களிடம் பிடிபட்டும். பிடிபடாத மீன்கள் வேறு இடம் நோக்கி விரைந்தது.

இரை தேடி வெளிவந்த உயிரினங்கள்தார் ரோடுகளில் சென்ற ஒரு சில வாகனங்களில் அடிப்பட்டு உடலை விட்டு உயிரை இடம் மாற்றி கொண்டது.

ரோடுகளில் சென்ற மனிதர்கள் இனம் கண்டுக்கொள்ள வைத்த
உயிரினப்பெயர்களை

“பாம்பு செத்து கிடக்கிறது, தவளை செத்து கிடக்கிறது” என திரும்பவும் ஞாபகப்படுத்தி கொண்டார்கள்.

தன்பணி முடித்த மரங்கள் நிம்மதியாய் தலை சாய்த்து படுக்கையில் வீழ்ந்தது.

ஒன்று இரண்டு கடைகள் வியாபாரிகள் திறந்து வைக்க எல்லாவற்றிலும் அவசரப்பட்ட மனிதர்கள் இதிலும் முன்டியடித்து பொருட்கள் வாங்கி தானும் தன்னைச்சார்ந்தவர்களையும் காப்பாற்றினார்கள்.

நாடோடியாய் நான் திரிஞ்சாலும் நேரத்திற்கு வீட்டுக்கு போய் சாப்பிட்டேன். எனக்கு சாப்பாடு போட மற்றவர்கள் இல்லாததால் எனது வீடு நோக்கி நான் போக வேண்டிய அவசியம்.

Friday, November 28, 2008

ஒழுக்கம்

விரும்பிய முடிவு

எல்லைக்குட்பட்ட செயல்

ஒழுக்கம்.

Monday, November 24, 2008

பறிக்க மனமில்லாமல்…..

24.11.08காலை குளத்தில் குளித்து விட்டு வீடு திரும்பினேன்.

இரத்த சிவப்புடன் செம்பருத்தி மலர் அதனுடைய பச்சை இலைகளிடைய மலர்ந்திருந்தது. கை நீட்டி பறிக்க எத்தனிக்க ..

காரணம் காலை ஒரு சிவப்பு செம்பருத்தி மலர் சாப்பிட்டால் இதயத்திற்கு நல்லது என்று நான் படித்த மருத்துவ குறிப்பால் தினமும்ஒரு செம்பருத்தி மலர் எனக்கு மருந்தாகியது. நோய் இல்லாமல் சாப்பிட்டால் அது மருந்தா தெரியவில்லை எனக்கு.

அதுநாள் வரை எதுவும் அறியாமல் அந்த மலரை பறித்த தின்ற எனக்கு இன்று மடடும் மனது என்னவோ செய்தது..

அது மலர்திருந்த அழகு அதனுடைய முழுமைகெடுக்க மனமில்லாமல்பறிக்கஎத்தனித்த கைகளை பறிக்காமல் இழுத்துக்கொண்டேன்.

இயற்கை கொடுத்த அழகை சிதைக்க நான் யார்? என்ற வினாவுடன் ...

என்னைப்பற்றி கவலைப்பட யார்?

23.11.08 காலை முதல் கருமேகம் சூழ்ந்த வானம் மதியம் நெருங்கும் சமயம் மழை ஆரம்பித்தது. எப்போதும் மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போக வேண்டும்.

மழை பெய்து கொண்டிருந்தது. கடையை மூடிவிட்டார்கள் மழை விடும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன் வீட்டுக்கு சென்றுவிடலாம் என்ற நினைவுகளுடன் காலம் தன்பணி செய்ய நேரம் ஆகிக்கொண்டிருந்தது.

மழைக்காக ஒதுங்கிய ஆடு துணையாக வந்தது. தனிமை எல்லா சமயங்களிலும் ஒத்துவராது என்பதை அனுபவித்து உணர்ந்தேன். பசி வேறு மனதில் ஏதோ ஏதோ நினைவுகளின் சங்கமம் வேறு

மழை நின்றபாடில்லை துணையாக நின்ற ஆடும்மழையில் நனைந்தபடி வேறுஇடம் நோக்கி நகர்ந்து விட..

சாலையில் அவர் அவர்கள் குடை பிடித்துகொண்டு மழையில் நனைந்துகொண்டு சென்றபடி இருக்க என்னுடைய பசி பற்றி யாரும் கவலை பட்டதாக தெரியவில்லை.

மழை நின்றபாடில்லை நானும் நனைந்துகொண்டே எனது வீடு நோக்கி…

Saturday, November 22, 2008

புகைப்பட தொகுப்பு

நிழலும் நிஜமும் 1

முடிவை நோக்கி


நிழலும் நிஜமும் 2

நாட் குறிப்பு 4

22.11.2008 முதல் நாள் எங்கள் வீட்டில் உள்ளவர்கள் சொந்தகாரர் வீட்டு விழாவிற்கு சென்றுவந்தார்கள். அவர்கள் வைத்து கொடுத்த வெற்றிலை சீவல் நிறைய இருந்தது. வெற்றிலைபோடுபவர்கள் யாரிடமாவது கொடுத்து விடலாம் என்று வேலைக்கு வரும்பொழுது வாங்கி வந்தேன்.

வரும்பொழுது எனக்கு முகம் தெரிந்தவர்கள் யாரவது தென்படுகிறார்களா அதுவும் வெற்றிலை போடுபவர்கள்
தென்படுகிறார்களா என…

தேடிய கண்களும் மனதும் தேடியபடியே..

பொருள் வீணாக போய்விடகூடாது என நினைத்து எடுத்துவந்தேன்.

தெரிந்தவர்களாக இருந்தால் பராவாயில்லை தெரியாதவர்களை அணுகுதலில் என்னிடம் தயக்கம்

எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாய், வெற்றிலையும் வாடியது.

Friday, November 21, 2008

உயிர்ப்பு

சூழலினால்
மூலக்கூறுகளின்இணைவு

உயிர்ப்பு

Thursday, November 20, 2008

நாட் குறிப்பு 3

19.11.2008 மதியம் 2.00 மணி எனக்கு சாப்பாடு போட்டாங்க எங்க வீட்டுல நான் சாப்பிடற எடத்துலேந்து பாத்தா தெரு வாச, கொல்ல வாச ரெண்டயும் பாக்கலாமுங்க

வானம் மப்பும் மந்தாரமுமா சிறுதுாறல் கொல்லவாச நிலப்படியில தாய்கோழி தன்குஞ்சோட உட்காந்து இருந ்ததுங்க அதுல ஒரு குஞ்சு தாயோட முதுவுல ஏறி நின்னுதுங்க அந்த குஞ்சு கீழ விழமா மெதுவா அதனுடைய போக்குக்கே வளைஞ்சுதுங்க தாய் கோழி காற்றோட போக்குக்கு அசையற நாணலா..

அதோட செய்கையில ஏதோ ஒரு லயம் இருந்ததுங்க.. உண ர தொிஞ்சுதுங்க என்னன்னு சொல்ல தொியலங்க..

Tuesday, November 18, 2008

நாட் குறிப்பு 2

17.11.2008 மதியம் 2.45 மணிக்கு எங்கள் ஊ ர் குளக்கரைக்கு நண்பனுடன் சென்றேன். அப்போது தான் அங்கு வழிப்போக்கர் ஒருவர் சாப்பிட்டு விட்டு பாதியளவு சாப்பாட்டுடன் அவருடைய சாப்பாட்டு பொட்டல த்தை போட்டு விட்டு சென்று விட ..

இரை தேடிய காகம் தன் இரண்டு குஞ்சுகளுடன் அங்கு வந்தது , தாய் காகம் தன் அலகால் இரையை க்கொத்தியவுடன்“கா..கா” என்று கத்தியபடி குஞ்சு தன்னுடைய அலகை திறந்தபடி நிற்க தாய் தன்னுடைய அலகால் இரையை அதனுடைய அலகுக்குள் தினித்தது

என் நண்பன் சொன்னான் எவ்வளவு அன்புடன் உணவு தருது பார் என்றான். நான் நினைத்து கொண்டது தாய் தன் குஞ்சுகளுக்கு வாழ தேவையான ஒரு நிகழ்வை கற்றுகொடுப்பதாக..

எங்கள் இருவருடைய பார்வையும் வேறாக இருந்தது , இதற்கு நான் வளர்ந்த விதமா.. அவன் வளர்ந்த விதமா.. சிந்தித் தபடியே

Monday, November 17, 2008

அன்புள்ள காதலா அன்புடன ...

பொங்கி பெருகும்
உனது ஆண்மை
உற்சாக துள்ளல்
உனது விழி
அமைதி
உனது முகம்
இதழ்களில் தவழும்
உன் புன்முறுவல்
நான் ரசிக்க
உன்னில் கண்டவை
சிரிக்க வைத்து
சிரித்து பேசி
நீ செல்ல
உனக்கு தெரியாமல்
உனை பின் தொடரும்
என் இதயம்
என்னில் தானா ...

Sunday, November 16, 2008

நாட் குறிப்பு

நாட் குறிப்பு

16.11.2008 மாலை மணி 6.00 கடையின் மேற்கூரையை பார்த்து கொண்டிருந்தகண்கள் கூரையின் மேற்புறத்தில் மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்த பல்லி தன் இரையை நோக்கி முன்னேறியது வருவதை அறியாமல் நின்று கொண்டிருந்த தட்டான் கண் இமைக்கும் நேரத்தில் பல்லியின் வாய்க்குள்.......

பல்லியின் பசி தட்டானின் உயிராய்இதில் நன்மை எது? தீமை எது? கேள்வியாய் மனது...

பரிணாமம்

சூழல் உயிர்
மூலக்கூறுகளின்
பல்வேறுபட்ட வளர்ச்சிநிலை பரிணாமம் .

Wednesday, November 12, 2008

வீரம்

உயிர் காக்க
தசை பலத்தின்
தொடர் எதிர்ப்பு வீரம் .

Sunday, November 09, 2008

கருணை

இரக்கம்
வாழ்க்கை அர்ப்பணிப்பு
கருணை .

Thursday, November 06, 2008

உனது வெற்றி உனக்கு உரியதே

உனது வெற்றி
உனக்கு உரியதே
எல்லோருக்கும் அல்ல
உன் தனிதன்மை
உனக்கு அமைத்த
வெற்றி
காலங்களால் நீ
வளர்ந்து
சூழ்நிலைகளால்
உரம் ஊட்டபட்டு
கனியும் நேரம்வந்தவுடன்
கிடைத்த வெற்றி
நான் எனும்
அகந்தையினால் அல்ல
ஆணவம் தலைமேல்
உட்காரும்
கவனி
உண்மை தெரியும்
அதுவரை நீ
நீயாக இருப்பாய்
புதுமைகள் மலர
உனை நோக்கு
உண்மையை அரவணை.

Wednesday, November 05, 2008

இரக்கம்

துன்பம் கண்டு
துன்புற்று உதவி
செய்யும் எண்ணம் இரக்கம்.

Sunday, November 02, 2008

பூகம்ப வேதனை

உயிர் அற்ற
சடலங்களுக்கிடையே
உயிர் தப்பிய
குழந்தையின் பசி
சோற்றுக்காய்
தாயை தேடும் கண்கள்
ஆதரவாய் உணவு நீட்டிய
பல கரங்கள்
குழந்தையின் கண்கள்
அன்பான தன்தாயின்
கரங்களை தேடி
வன்முறையாய் பசி
உணவு ஊட்டிய
கைகளில் அடக்கம்
அடங்கிய பசி
குழந்தையின்
அடுத்த தேடலாய்
தன்னோடு விளையாடும்
தம்பி பாப்பாவை நோக்கி
பூமி தாயின்
வினாடி கோபமாய்
குழந்தையின்
நிரந்தர வேதனை.

LinkWithin

Related Posts with Thumbnails