Thursday, December 27, 2012

புகைப்படதொகுப்பு

சூரியன் மறைவு-1

                                                      சூரியன் மறைவு-2
                               
                                                     சூரியன் மறைவு-3

                                                        அட..நீங்க  எங்களையா...

                                                     கோடையும் குளியலும்

                                     இதெல்லாம் யாரு மதிக்கிறா..எங்க ஊருல...

Tuesday, December 25, 2012

தஞ்சாவூரும் தண்ணீர் பஞ்சமும்

வயலில் நட்ட  நெற்பயிர்கள் முக்கால்வாசி  சூழலை தாண்டி வந்து  நெற்மணிகள் கருபிடிக்கும் சூழலில் உள்ளது. தட்டு  தடுமாறி இதுவரை  நட்டவயல்களுக்கு தண்ணீர் கிடைத்துவிட்டது.

இனிதான் தண்ணீர் மிக அவசியம்  என்ன ஆகப்போகிறதோ என்கிற கவலை விவசாயிகள் மனதில் தோன்ற ஆரம்பித்துவிட்டது.


போர்செட் பம்புகள் வைத்திருப்பவர்களுக்கு கவலை இல்லை. வாய்க்கால் பாசனம் செய்பவர்கள் தண்ணீருக்காக போர்செட்காரர்களை அணுகி வியாபாரம் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

ஒரு ஏக்கருக்கு ரூ 1500 அல்லது மூன்று மூட்டை நெல் என்கிறப்படி பேரம் பேசிகொண்டுள்ளார்கள். இது ஏற்றதாழ்வுகளுக்கு  மற்றும் மனிதநேயத்துக்கு உட்பட்டது.

மழை இதோ பெய்துவிடும் அதோ பெய்துவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்துகொண்டே  இருக்க  ஒரு மழையுடன் தன்  இருப்பை வெளிகாட்டி வானம் மூடிகொண்டது.

குறுவை சாகுப்படி போர்செட் விவசாயிகளுக்கு பெருத்தலாபத்தை தனியார் வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு  விளைந்த இடத்துக்கே போய் எடுத்து கொண்டு  கொடுக்க சாதாரண வாய்க்கால் விவசாயிகளுக்கு சம்பா கை கொடுத்துவிடும் நம்பிக்கையில் கடன் வாங்கி செய்தவர்கள் நிறையவே  இருக்கதான் செய்கிறார்கள்.

 இன்னும் சில  மாதங்களில்  இயற்கை என்ன செய்யபோகிறது? அரசாங்கம் என்ன செய்யபோகிறது என்று   பார்ப்போம்.

Thursday, December 20, 2012

எவரெஸ்ட் சிகரம்

477 புகைப்படங்களை இணைத்து உருவாக்கிய 2 பில்லியன் பிக்சல் உடைய இந்த புகைப்படம் ஆச்சரியமூட்டியது.

ரசிக்க....


http://www.dailymail.co.uk/sciencetech/article-2250676/Mount-Everest-The-incredible-interactive-BILLION-pixel-image-created-David-Breashears.html  இங்கே செல்லவும். 

Wednesday, December 19, 2012

மாயன் காலண்டரும் மனித வக்கிரமும்


நேற்று சொந்த வேலையின் காரணமாக தஞ்சை சென்றேன். அதில் ஒரு வேலை பேண்டின் அளவை கூட்ட குறைக்க தெருவோர தையல்காரர்கள் இருக்கும் பகுதிக்கு சென்று ஒரு தையல்காரரை அணுகி என்னுடைய வேலையை முடிக்க கொடுத்து காத்திருந்தேன்.

சாப்பாட்டு நேரம் ஆகையால் பக்கத்து கடை தையல்காரர் தன்னுடைய வீட்டிற்கு மிதிவண்டியை ஏறி மிதிக்க எத்தனிக்கையில் எதிர்புறமாக தன்னுடைய தாய் தந்தையுடன் ஓர் இளம்பெண் வந்து கொண்டிருந்தாள்.

மிதிவண்டியில் அமர்ந்திருந்த தையல்காரர் தைத்துகொண்டிருந்த தையல்காரரிடம்
என்னப்பா வர்ற 21ம் தேதி உலகம் அழியப்போகுதாமே அதுக்குள்ள அனுபவிக்க வேண்டியதெல்லாம் அனுபவிச்சுருப்பா..

என்ன சொல்றே நீ...என்று கேட்க

அந்தா வர்ற பொண்ண புடிச்சு.........(மோசமான உடலறவு) வர்ணித்து சொல்ல ..

அடுத்த அடுத்த செய்திகளால் அந்த பகுதி தடம்மாறிப்போனது.

இப்படியும் மனிதர்கள்.

Friday, October 26, 2012

நாட்கள் மாதங்கள் கடந்து.....

நாட்கள் மாதங்கள் கடந்து  திரும்பவும் வலைப்பதிவின் பக்கம் நடைமுறை வாழ்க்கை நிகழ்வுகளில் காணாமல்  போன சுய நடவடிக்கைகள்   ஒருபுறம் நல்லநட்புகளின்  பதிவுகளை படிக்காமல் இருந்தது என நீண்ட........  பிறகு



Friday, May 11, 2012

பாவம் இந்து மதம்…!!!??



இந்து மதம் தழைத்தோங்க பிறந்தவர்களின் சண்டை சச்சரவுகளில் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது.

இவர்களெல்லாம் இந்து மதத்தை காப்பாற்ற பிறந்த புண்ணியாத்மாக்கள்.  பாவம் இந்து மதம்…!!!??

கதவை திறந்து வைத்ததில் மதுரை  ஆதீனமாக மாறிவிட்டார்.

கௌ   ரவமான சொற்களினால் நீ ஒழுங்கா…நான் ஒழுங்கா… சொற்போர் நடத்திகொண்டுள்ளார்கள்.

தமிழகத்தின் தலையாய பிரச்சனையாக ஊடகங்களினால்  இப்பிரச்சனை பேசப்படுவது  எங்கே போய் சொல்ல....



Monday, April 30, 2012

கலைஞரும் ஈழமும்



கடந்த சில நாட்களாக  செய்திதாள்களில் தொடர்ச்சியாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  ஈழம் பற்றிய அறிக்கைகள் தினசரி வந்த கொண்டேயிருக்கிறது.

இவரது அறிக்கைகளை  படிக்கையில் ஏதோ மனது குறுகுறுக்கிறது.

தன்னுடைய சொந்த லாபத்துக்காக அன்று பேசாதவர் இன்று எவ்வாறு பேசலாம்?   என்று எதிர்ப்பு அறிக்கைகள் கொடுத்தும் இருக்கிறார்கள்.

இன்றைக்கும் அவருடைய சொந்தகணக்குகளின் பின்னணியில் தான் இத்தகைய அறிக்கைகள் அல்லது தமிழகம் தன்னை மறந்துவிட கூடாது என்பதற்காக வாய் திறக்கிறாரா தெரியவில்லை.

நம்ஈழதமிழ் மக்கள் அனுபவித்து முடித்துவிட்டார்கள் இனியும் என்ன இருக்கிறது அனுபவிக்க???

கருணாநிதி அரசியல் செய்கிறார் ஏனென்றால் அவரது தொழில் அது?  தொழிலில் லாபம் மட்டுமே பார்க்ககூடியவர் அவர்.

Saturday, March 31, 2012

பெற்றோரின் கண்ணீரில்




மகனே…
நீ பிறந்த அன்று
தோட்டத்தில்வைத்தோம்
ஒரு தென்னங்கன்று
எங்கள் வியர்வையில்
நீ உயர்ந்தாய்
நாங்கள் வார்த்த தண்ணீரில்
தென்னை வளர்ந்தது
எங்கோ இருந்து நீ ஈட்டும் பணம்
உணக்கு இன்பம் தருகிறது
இங்கே இருக்கும்தென்னைமரம்
எங்கள் இருவருக்கும்
சுக நிழலும் சுவைநீரும் தந்துதவுகிறது
ஒரு நாள்…
நீ ஈ மெயிலில் மூழ்கியிருக்கும் போது
எங்களை ஈ மொய்த்த செய்தி வந்துசேரும்
இறுதிப் பயணத்தில்
நீ இல்லாமற் போனாலும்
தென்னை ஓலை
எங்கள் கடைசி மஞ்சமாகும் !

(படித்தது)

Wednesday, March 21, 2012

ஜனத் தலைவர் யார்?


இது பாரதி சொன்னது... யாவன் ஒருவன் தனது ஜனன தேசமாகிய இந்தியாவானது இந்த வறிய நிலையில் இருப்பது பற்றி இராப்பகல் வருந்துகிறானோ  ,

யாவன் ஒருவன் இந்த முப்பது கோடி இந்தியரும் வயிறாற உண்பதற்குஉணவும் உடுக்க உடையுமின்றித் தவிக்கிறார்களே  என மனமிரங்கி கண்ணீர் சொரிகிறானோ

யாவன் ஒருவன் பொதுஜனங்களுக்கு வந்த சுக துக்கங்களும் கஷ்ட நஷ்டங்களும் தனக்கு வந்ததாக எண்ணி அனுதாபிக்கிறானோ

யாவன் ஒருவன் இந்தத் துன்பங்களை நிவர்த்திப்பதன் பொருட்டுத் தனது உயிரையும் இழக்கத் தயாராய் இருக்கிறானோ  ..

அவன் ஒருவனே ஜனத் தலைவன்.



இன்று….

தன் மானத்திற்காக தொண்டனி்ன் உயிரை ப்பறிப்பவன்.

தன் குடும்ப வாரிசுகாக  தன் கட்சியினரையே  கட்சியை விட்டு நீக்குப்பவன்.

சுவிஸ் வங்கியோ இன்னும் வேறு ஏதேனும் வங்கியிலோ கணக்கு வைத்திருப்பவன்.

நிலம் பறி்ப்பவன்

ஆட்கடத்தல் அடித்தடி கொலை  செய்பவன்.

இவர்களே இன்று ஜனத்தலைவர்கள்.

இது இந்தியா…..

Tuesday, January 24, 2012

முதுமை




காலப் பெருவெளிக்குள்
இழுத்துவரப்பட்ட
வயதுகளின் சாயல்கள்
நரைத்த முடி
சுறுங்கிய தோல்
தளர்ந்த நடையென
ஓரிடத்தில் அமர்ந்த
யோசிப்பில் தொடங்கிய
இளமைகால சிந்தனைகளின்
சீர்தூக்கல்கள்
நியாய அநியாய
மனோ பாவங்களின்
வெளிப்பட்ட வேதனையும்
இன்பங்களுமாய்
போகும் பொழுதுகளில்
நகரும் வாழ்வாய்
முதுமை.

.ஒரு சொல் முடிந்த அத்தியாயம்


சமீபத்தில் எங்கள்பகுதிகளில் அதிகம் பேசப்பட்ட செய்தி தமிழக முதல்வரின் தோழியின் விரட்டியடிப்பு தான்.



எங்கள் பகுதிகளில் உள்ள அ.தி.மு.க வின் உடன் பிறப்புகள் அகம் மகிழ்ந்து கிடப்பது தான் உண்மை.

ஒழிந்தது சனியன்….

பார்க்கதான் பட்டை போட்ட நல்லவர் திவாகரன் மிக மோசமான ….பொறுக்கி  அ.தி.மு.வி னாராலே பேசப்படும் அவலம்.

இவ்வளவு  அவமானங்களையும் பொறுத்து கொண்டதன் பின்னனி தமிழக முதல்வரின் உயிர்தோழி  , தோழியின் உறவினர்கள் அரசில் எதையும் சாதிக்கவல்லவர்களாய்  இவர்கள் இருந்தது தான்.

இவர்களின்  விரட்டலில் யாரும் கவலைப்பட்டவர்கள் என்பது கிடையாது.

இவர்கள் செய்தது நம்பிக்கை துரோகம் இவர்களை விட்டு வைக்ககூடாது என்பதே இப்பகுதி மக்களின் ஆவலாய் உள்ளது.

இன்னமும் சூடு குறையாமல் அவர்களைப்பற்றிய செய்திகள் வாசிக்கப்படுகின்றன.


இருக்கும் இடம் அறிந்து தன் எல்லைகளை  அறியாததால் வந்த வினை  அதிகார மையத்தின் ஒரே சொல்  இவர்களை புரட்டிப்போடும் வல்லமை கொண்டதாகிவிட்டது.

பலமணிகள் காத்து கிடக்க தரிசனம் தருவார்கள் .
ஆனால் இன்றைய  நிலைமை தன் இடம் தெரிந்தால்  தனக்கு ஆபத்து. 

பாவம் இவர்கள்…..

Monday, January 02, 2012

வருட தொடக்கமும் வாழ்வும்


இருள்விலகாத பனி  சில நூறுகாக்கைகளி்ன் பறத்தலில் தொடங்கிய காலை யை   ரசித்தப்படி தொடங்கிய புத்தாண்டு.

சபதங்கள் போட்டு குறிக்கோள்கள் வைத்து இலக்கை   அடைய
முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் எங்காயாவது இறைவனை தரிசிக்கும் நடைமுறை என்னவோ சிலவருடங்களுக்கு முன்னால் தவிர்க்கப்படாத ஒன்று.



சிலவருடங்களாய் முக்கியம் பெறாதபுதுவருட தொடக்கம். நாளெல்லாம் திருநாளே சிந்தனையாய் கழியும் நாட்கள்.

குடும்ப நிர்வாகம் காசுக்கான அலைதலில் கரையும்வாழ்வில் செக்குமாட்டு சிந்தனை களை  தவிர்க்க முடியாத நேரங்களில்நொந்தவாழ்வாய்  எண்ணங்களின் பின்னடைவு.

தனி ஆளாய் இயற்கையை   ரசிக்கையில்நமக்கு மட்டும் ஏன் இப்படி ? வினாவினை தவிர்க்க முடியாத மனது.



நிறையவே அறிய ஆவலாய்.....

LinkWithin

Related Posts with Thumbnails