Sunday, May 31, 2009

இன வாதமும் இப்படிதான்.

அவன் மட்டும் தனியாக சென்றுக் கொண்டிருந்தான் அவன் நடந்தது அவன் வசிக்கும் பகுதியல்ல அவன் பகுதியிலிருந்து வெகுதொலைவு அங்குள்ளவர்களை அவனுக்கு நன்றாய் தெரியும் அடக்கமாய் நடந்து சென்றான்.

இவன் வயது ஒத்தவர்கள் நான்கைந்து பேர் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்கிண்டலடித்தார்கள் கண்டும் காணாதது காதில் வாங்காதது போல் விரைவாக நடந்து அந்த பகுதியை விட்டுவெளியேறினான்.

இன்னொரு சமயம் நான்கைந்து பேருடன் சென்றான் அந்தபகுதியில் பார்வைகளை படரவிட்டவாறே சாதாரணமாய் பார்த்தவர்களை கூட பயமுறுத்தும் பார்வையால் பார்த்தான்.

இங்கு இவனது பலம் அதிகமாய் இருந்தது. இன வாதமும் இப்படிதான் . இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம் சௌக்கியமே.
பலம் என்பதற்கு கீழ்தான் பலவீனம். மேல் மட்டத்தில் உள்ளவர்கள் எடுக்கும் மிக சரியான முடிவே வெளியில் உள்ள இந்தியர்களை காப்பாற்ற வழிப்பிறக்கும்.

Saturday, May 30, 2009

ஆதரவு என்று பெயரில் இலங்கைக்கு கொடுக்கப்பட்டலஞ்சம் .

ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்காது வாழ்விக்க வழிசெய். இரக்கம் காட்டாது உதவி செய். அவர்கள் வாழ்வில் எத்தனையோ உதவிகளை ஒருவருக்கு ஒருவர் செய்திருக்கலாம்நேற்று வாழ்ந்தவர்கள் இன்று பிறர் மனதை கைகளை எதிர்நோக்க வேண்டிய கட்டாயம்.

ஏனென்றால் அவர்கள் தன் உரிமைக்காக போராடி தோற்றவர்கள். காயங்களுக்கு மருந்துதான் தேவை ஆறுதல் அல்ல. புள்ளி விபரங்கள் சொல்லலாம் கஷ்டப்படவில்லை என்று அங்குள்ள ஒவ்வொரு உயிருக்கும் தெரியும் தான் பட்டது என்னவென்று. எத்தனை போராட்டங்கள் எத்தனை துன்பங்கள். நிதம் செத்துமடிவதை விட போராடி தோற்று போ.

வஞ்சகர் வலை பின்னல் ஒரு இனத்துக்கு எதிராகஉலக நாடுகள் திரளும் அவலம் வேதனை. ஒன்றினைய அவர்களின் வஞ்சக கணக்கு சில பல லட்ச உயிர்கள் அவர்களின் தேவை. ஆதரவு என்று பெயரில் இலங்கைக்கு கொடுக்கப்பட்ட லஞ்சம் .

வரலாறு மாறும் நிச்சயம் மாறும் அடக்கபட்ட ஒன்று சக்தி பெற்றே தீரும் .

Friday, May 29, 2009

ஈழத் தமிழினம் அடுத்தகட்டத்தை நோக்கி..

ஈழத் தமிழினம் அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும். அதற்கு ஒட்டுமொத்த தமிழினமும் மூன்று தளங்களில் தீவிரமான செயல்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.

முதலாதவதாக மறு நிர்மாணம் மற்றும் வளர்ச்சி. முகாம்களில் சிக்கியுள்ளோரை விடுவிப்பதோடு மறு நிர்மாணம் மற்றும் வளர்ச்சியில் தன்னுடைய முழு கவனத்தையும் ஈழத் தமிழினம் செலுத்த வேண்டும்.

இரண்டாவதாக நல்லெண்ண நடவடிக்கைகள் ஒருபுறம் வளர்ச்சியை முன்னெடுக்கும் அதே நேரத்தில் மறுபுறம் நல்லெண்ணச் செயல்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.தமிழர்-சிங்களர் இடையேயான இனவெறிப் பதற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடு்க்க வேண்டும். அதிகாரமும் உரிமைகளும் பகிர்ந்தளிக்கப்படுவதற்கு இன அடிப்படைவாதத்தை முன்வைத்து அரசியல் ரீதியாக உருவாக்கப்படும் தடைகளைத் தகர்க்க இது முக்கியமானது.

மூன்றாவதாக சகலதளங்களிலும் தமிழர்களுக்கு சம உரிமைகள் அதிகாரப் பகிர்வுகளை உள்ளடக்கிய அரசியல் தீர்வு. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் தமிழர்கள் சர்வதேச அளவில் இதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.

-தினமணி-

Thursday, May 28, 2009

புலிகள் விஷயத்தைத் தாண்டி ..

புலிகள் விஷயத்தைத் தாண்டி மனித உரிமைகள் தொடர்பான இந்தியாவின் அனுகுமுறையும் மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

இலங்கையின் கடைசிக்கட்ட ப்போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதையும் சர்வதேச போர் மரபுக்கு எதிராக சிங்கள ராணுவம் செயல்பட்டதையும் ஐக்கிய நாடுகள்சபை மற்றும் அமெரிக்க உளவுசெயற்கைக்கோள் காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன.

இதன் அடிப்படையில் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளி என அறிவித்து அவர்மீது சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த அமெரிக்கா முயன்று வருகிறது. இதன் முதல் கட்டமாக அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து தீர்மாணம் கொண்டுவருகின்றன.

அமெரிக்காவும் பிரிட்டனும் இந்தவிஷயத்தில் அக்கறைகாட்ட பக்கத்துநாடான இந்தியாவோ இலங்கையின் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் குறித்து சிறு எதிர்ப்பைக்கூட காட்டவில்லை.

-ஜீ.வி-

Wednesday, May 27, 2009

ஒரு வேளை அந்த ஒற்றைப்பிரபாகரன்

இத்தனை லட்சம் தமிழர்கள் அழிவுக்கு சிங்களவர்களுக்கு உளவுச்சொல்லி ஈழப்பிழைப்புக்கு பதிலாக ஈனப்பிழைப்பு பிழைத்த டக்ளஸ் தேவானந்தாவையும் கருணாவையும் நினைத்துப் பாருங்கள். மலத்தை மிதித்து விட்டது போன்ற அருவருப்பு ஏற்படவில்லையா?

ரணிலுக்குப் பதிலாக ராஜபட்ச வந்தது தமிழின அழிவுக்கு முதற்காரணம்.

ஆயுதம் வழங்கிய “ரப்பர் முத்திரை” மன்மோகன் சிங் துணைக்காரணம்.

நாளைக்கொரு மனிதச் சங்கிலி ஒருவேளை தொடங்கி மறுவேளை வரும்வரை உண்ணாநோன்பு என்று பல்வேறு நாடகங்களை அரேங்கேற்றிக் கொண்டிருந்த கருணாநிதி இன்னொரு துணைக்காரணம்.

நான்காம் விடுதலைப்போர் முடிவுற்றதாக ராஜபட்சவோ மன்மோகன் சிங்கோ கருணாநிதியோ கருணாவோ கருதமாட்டார்கள். நான்கின் வளர்ச்சி ஐந்து என்பதை அவர்கள் அறியாதவர்கள் இல்லை.

ஒரு வேளை அந்த ஒற்றைப்பிரபாகரன் இல்லையென்றே ஆகிவிட்டாலும் ஓராயிரம் பிரபாகரன்களை காலம் உடனடியாக உருவாக்கும். எந்த விடுதலைப் போராட்டமும் இலக்கை அடையாமல் முற்றுப் பெற்றதாக வரலாறு கிடையாது.

- தினமணி சுருக்கம்-

ஆண் ஒன்று பெண் ஒன்று

இரவு தூக்கத்தில் இருக்கும்போதே கைகளால் தடவுவான் உடல் தட்டுபடுகிறதா என்று அப்படி தட்டுபடவில்லை என்றால் “அப்பா..எப்பா” என்பான் உடன் அவனது அப்பா ஏன்டா தம்பி என்றால் திரும்பவும் தூங்க ஆரம்பிம்பான் இல்லாவிட்டில் உடனே அழகைதான்.

அவருக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று இரண்டு குழந்தைகளும் மிகவும் கம்மியான இடைவெளி அதனால் மூத்த குழந்தையை பார்த்து கொள்ளமுடியாமல் தன்னுடைய மாமனார் வீட்டில் வளர விட்டிருந்தார். வாரம் ஒரு தடவை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை போய் பார்த்து வருவார்.

ஊருலிருந்து வரும்போது மெலிந்துமுகம் களை இழந்து காணப்படுவான். வந்து பெற்றோர்களுடன் தங்கியதும் ஆள் மாறிவிடுவான் சிரித்துகொண்டே இருப்பான்.

வார லீவு முடியும் ஊரில் கொண்ட விட்டால் அவன் அசந்து இருக்கும் நேரத்தில் வந்துவிடுவார். வந்து அப்பாவை தேடுவான் அழுவான் தூங்கி போவான்.

இன்றும் இரவுகளில் அவன் அப்பாவை கைகளுக்கு தட்டுபடுகிறரா என்று தேடுவான்.

Monday, May 25, 2009

பிரபாகரன் இறப்பு செய்தி உண்டாக்கிய மன அயர்ச்சி

இன்றைய செய்திதாள்களி்ல் பிராபகரன் மறைவை எல்டிடிஇ ஒத்துக்கொண்டதாக சிறியப் செய்தியாக ஓரத்தில் அச்சிடப்பட்டிருந்தன.

இருக்கிறார்? இல்லை? தொடர் குழப்பத்தின் விளைவாக ஒருவிதமான
மன அயர்ச்சிக்குதள்ளப்பட்டிருக்கிறார்கள் மக்கள்.

என்ன அவர்இருந்தால் இலங்கை தமிழனுக்கு நல்லது இல்லாட்டினா இலங்கை தமிழன் அய்யோ பாவம் என்ற மனநிலையை உருவாக்கியுள்ளது.

வாழ்க்கையின் முகமூடிகள்

மாறும்
கால சூழல்கள்
மாற்றம் பெறும்
பார்வைகள்
நிசம் என
நினைப்பவை யாவும்
கனவுகளாய்
கசந்தவைகள்
வாழ
கற்றுக் கொடுக்க
வாழ்வு
காட்சிகள் மாறி
வேடங்கள் மாறும்
உண்மையும்
பொய்மையும்
இன்பமும்
துன்பமும்
வாழ்க்கையின்
முகமூடிகள் தான்.

Sunday, May 24, 2009

பார்த்த பைத்தியங்கள்.

தலைமுடி அழுக்கடைந்து தொங்கியது பேண்டின் கொக்கிகளை போடாமல் வேட்டி மாதிரி எடுத்து சொருகியிருக்க கடை வாயில் எச்சில் ஒழுகியப்படியே இருக்கும். பேச்சு இல்லை மிக மெதுவான நடை எல்லாபக்கங்களிலும் கண்கள் சுழன்றபடி கையில் எப்பொழுதும் ஓர் பிளாஸ்டிக் கப். நடக்கும் நடந்தப்படியே இருக்கும். டீக்கடை அருகே செல்லும் டீ அருந்தபவர்களிடம் சென்று கப்பை நீட்டியப்படி நிற்கும் சில பேர் கண்டுகாணாமல் டீ குடிப்பார்கள். சில பேர் ஊற்றுவார்கள் டீயை வாங்கி கொண்டு அப்பால் செல்லும். திரும்பவும் ஊர் சுற்றும் இலக்குகள் இருப்பதாக என் பகுத்தறிவுக்கு எட்டவில்லை.

சட்டைமேல் சட்டை என நான்கைந்து சட்டைகள் அழுக்கடைந்தவை. அழுக்கேறி நிறம் மாறியிருந்த பேண்ட் நான்கைந்து சாக்கு நிறைய காகிதங்கள் பழைய துணிகள் காலி தண்ணீர் பாட்டில்கள் எங்கெல்லாம் குப்பைகள் நிறைய கிடக்கின்றதோ அங்கு நின்று தான் கொண்டு வந்த சாக்கில் திணிக்கும் சாக்கு மூட்டைகளுடன் பயணம் தொடரும் நீண்ட மௌனம் நடந்து கொண்டே இருக்கும்.

ஒரு பை மட்டும் கையிலிருக்கும் மிகவும் சுத்தமாக அலங்காரம் செய்யும் எல்லா பெண்களையும் போலவே இருபது அடி நடக்கும் நிற்கும் எதிராளி இல்லாமல் ஆண் இனத்தை திட்டும் “என்னடா அப்படி பாக்குற..என்று ஆரம்பித்து பு...வில்முடியும்” திரும்பவும் நடக்கும் திட்டும் பயணம் தொடரும்.

Saturday, May 23, 2009

குடும்ப போருக்கு சங்கு ஊதப்பட்டது.

நான் எங்க வீட்டுல இந்த வேலையெல்லாம் பாத்தது கிடையாதுங்க அந்த வீட்டுக்கு வந்த புதுப்பெண் சொன்னாள்.

என்ன தெரியாது.தெரியாதுன்னு சொல்லாத வேலையை பாக்க கத்துக்க என்றான் புருசன்.

அதெல்லாம் போவ போவ சரியாயிருண்டா.. நீ போடா… நான் சொல்லி தர்றேன் என்றாள் மாமியார்.

இதெல்லாம் சும்மா ஏமாத்துற வேல எல்லா வேலை பாக்க தெரியும் சும்மாவது சொல்லறது இந்த வேல தெரியாதுன்னுட்டு என்றாள் நாத்தனார்.

இரவு வீடு திரும்பிய கணவனிடம் ஏங்க உங்க தங்கச்சி என்ன அது இது சொல்லிகிட்டே இருக்காவே என்றாள் புதுப்பெண்.

என்ன செய்யனுங்கற சொல்லு என்றான் கணவன்.

நீங்க போயி கேட்டுறாதீங்கநான் சும்மா சொல்லி வக்றேன் உங்ககி்ட்ட என்றாள் புதுப்பெண்.

இவன் மனசுல வேகம் வந்தது என்னடா இது இவ்வள கஷ்டப்பட்டு நாம குடும்பத்துக்கு செய்றோம் என்று நினைத்தவாறு வேலை சென்றான்.

சில நாட்கள் கழிந்தன உம்முன்னு புதுப்பெண் நின்றுகொண்டிருந்தாள்.

ஏன்டீ..கணவன்

ஒன்னுமில்ல புதுப்பெண்

சொல்றியா இல்லையா..கணவன்

என்ன ஒரு மாதிரி பேசிகிட்டே இருகாங்க புதுப்பெண்.

யாரு..

உங்கதங்கச்சி…

தங்கச்சி உரக்க கத்தினான் கணவன்.

குடும்ப போருக்கு சங்கு ஊதப்பட்டது.

ஒவ்வொரு தமிழனும்

இலங்கையில் போர் முடிந்ததாக இலங்கை அரசு அறிவித்துள்ள சூழ்நிலையில் முகாம்களில்தங்கவைக்கப்பட்டுள்ளதமிழர்கள் படும் துயரங்கள் பற்றி பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட ஆரம்பித்துள்ளன.

தமிழினம் படும் துயரங்களையும் அவலங்களையும் சர்வதேச சமுதாயத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும். இது ஒவ்வொரு செய்தி ஊடகங்களின் தலையாய கடமையாகும்.

உலகெங்கிலும் பரந்து வியாபித்துள்ள ஒவ்வொரு தமிழனும் தனக்கு வந்த துயரென நினைத்து தன்னுடைய வீட்டுக்கு வந்த துயெரென நினைத்து முடிந்தவர்கள் ஏதோ ஒரு வழியில் தன்னுடைய ஆதரவை உதவிகளை செய்யவேண்டும்.

பசிக் கொடுமை நோய் கொடுமை இரண்டிலிருந்தும் மீட்டு அவர்கள் வாழ தேவையான அடிப்படை உரிமைகளை பெற்றுதர வேண்டும் இது சர்வதேச சமுதாயத்தின் கடமையாகும்.

Thursday, May 21, 2009

சூழல்கள் சொல்லிதந்தவை

முரண்பாடு
ஆசைகளின்
வேற்றுமை
நாம் பார்க்கும்
பார்வைகள்
சூழல்கள்
சொல்லி தந்தவை
சரியை
தவறென்றும்
தவறை
சரியென்றும்
நம்முடைய நினைவு
நமக்கான பாதை
நமக்கு
பிறர்க்கானது
அல்ல
பிறர்க்கானப்பாதை
நாம்
போகாதிருக்க
முரண்பாடுகள்
யாவும்
சமன்பாடுகளாய்
உடன்பாடுகள்
அமைதியுடன்
நாம்.

இந்தியாவுக்கும் விடுதலைபுலிகளுக்குமான போர்

இலங்கையுடன் என்பதைவிட இந்தியாவுக்கும் விடுதலைபுலிகளுக்குமான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக கருதுகிறார்கள். பிரபாகரனுடைய இறப்பில் இன்னமும் மர்மங்கள் நீடிக்கும் நிலைமையில்பிரபாகரன் மரணம் அடைந்து விட்டார் என இலங்கை அரசு அறிவித்த நாள் முதலாய் இந்தியாவி ன் ராஜ்ய தூதர்கள் கொழும்புக்கு சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.

கிட்டதட்ட எல்லாம் முடிந்துவிட்ட சூழலில் இனி எதைப்போய் மீட்டு தரப்போகிறார்கள்இறந்த எத்தனையோ உயிர்கள் இனி நமக்கு வாழ்வு உண்டா என்ற வினாவுடன் உயிரை தக்கவைத்து கொண்டிருக்கும் உயிர்களுக்கு இவர்களின் பதில் என்ன?

“புலிகளை கொன்ற தெய்வத்துக்கு நன்றி” எனப் போஸ்டர்கள் சென்னையில் காங்கிரஸ் கட்சியின் விசுவாசியில் ஒட்டப்பட்டிருக்கும் அவலம்.
இவர்களும் ஓர் இனத்தின் மனிதர்கள்தானா?

நம்மால் ஆதரவு கொடுக்க முடியவில்லை என உலகெங்கிலும் துடித்த இதயங்கள் லட்சம் , கோடி . ராஜ்ய உறவுகள் என்பவை ஒரு தனி மனிதனின் லாப நஷ்ட கணக்குகள் கிடையாது. உயிரை தக்கவைக்க போராடும் பல லட்ச மக்களின் கஷ்ட நஷ்டங்களுக்கு உட்பட்டவை என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.

Wednesday, May 20, 2009

பிரபாகரன் மரணம் பற்றிய செய்தி இயல்பு மாறுகிறது.

இன்றுசெய்திதாள்கள் அத்தனையும் பிரபாகரன் மரணம் பற்றியசெய்தியை அடக்கியே பிரச்சுரம் செய்திருந்தன. நேற்றைய பரபரப்பு மக்களிடையே காணப்படவில்லை. செய்தியின் உண்மை நிலைமை அறிய ஆர்வம் காட்டினார்கள்.

செய்தியின் தன்மை மாறி ஆராய்ந்து அறியக்கூடிய செய்தியாக மாறியது. பிரபாகரனின் மரணம் பற்றி இலங்கை அரசின் முன்னுக்கு பின்னான தகவல்கள் அதைப்பற்றிய இவர்களின் சந்தேகங்கள் என செய்தியின் இயல்பு மாறியுள்ளது.

உண்மை என்னவென்பது இரு தரப்புகளுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கும். அதுவரையில் இச்செய்தியின் அனுமானங்கள் அனுமானங்களாகவே தொடரும்.

நாள் ஆக ஆக செய்தியின் முக்கியதுவம் குறைந்து நாம் நம்முடைய வேலைகளில் கரைந்துவிடுவோம்.

எதுவாக இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன கிடைக்க வேண்டும் என்பதை அறிந்து உயர்மட்டத்தில் உள்ளவர்கள் செயல்பட்டால் நன்றாக இருக்கும்.

உங்களில் ஒருவனாய் ஒரு தமிழன்.

ஆறுதல் சொல்ல
மனமில்லை
ஆதரவுகரம் நீட்ட
வழியில்லை
நினைத்து
நினைத்து
வெம்பும் மனதினாய்
நீங்கள் படும்
துயர் நினைக்க
துயரங்களுக்கு
விடியல் என்றோ
தெரியவில்லை
உயிர் வாழ
உயிர் இழந்து
வாழ்கின்றோம்
ஓர் இனத்தின்
அழிவில்
ஓர் இனம்
வாழ முடியாது
பொறுமை கொள்வோம்
காலம் வரும்

அதுவரையில்
உங்களில்
ஒருவனாய்
ஒரு தமிழன்

Tuesday, May 19, 2009

வாழ்ந்திருக்கும் விடுதலைபுலிகளின் இயக்கதலைவர்.

செய்தி எதுவாக இருந்தால் என்ன? வாழ்ந்திருக்கும் விடுதலைபுலிகளின் இயக்கதலைவர் அல்லது மடிந்திருக்கும் இயக்கதலைவர் நேரடியாக தோன்றாத வரையில் அவரைப்பற்றிய அனுமானங்கள் மக்களுக்கு தெரியப்படுத்தும் செய்தியாக பாவித்து மிக சிறந்த வியாபாரமாக ஊடகங்களால்ஆக்கப்படுகின்றன் .

பொறுமைகாத்து அடுத்துநடக்கும் நிகழ்வுகளை கண்கொண்டு பார்ப்போம் காதுகளால் கேட்டு அறிவோம்.

உரிமைகைளை கொடுக்க மறுத்து உரிமைகள் மீறும் இடத்தில் தான் பேராட்டம் தொடங்குகிறது. அது மக்கள் போராட்டமாகவோ அல்லது ஆயுத தாங்கிய போராட்டமாகவோ இருக்கலாம். விடுதலைபுலிகளின் இயக்கம் தோன்றுவதற்கான ஆதி இது. இலங்கை அரசின் ஒரு தலைபட்சமானமுரண்பாடான கொள்கைகளினால்தான் தன்னுடைய நாட்டிற்குள்ளே இலங்கை அரசுக்குபோரை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்ப்பட்டது.

விடுதலைபுலிகளை எதிர்த்து இலங்கை அரசுடன் கைக்கோர்த்த இயக்கங்கள் தன் இன மக்களுக்காக என்னமாதிரியான உரிமைகளை பெற்று தரப்போகிறார்கள் என்பதை வரும்காலங்கள் தான் பதில் சொல்லும் அது வரையில் பல கண்ணுக்கு தெரியா கசப்பான அவலங்கள் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உண்டாகும் இது உண்மை.

எதிரி இருந்தவரையில் எதிரிதான் இலக்கு எதிரி இல்லாதபோது இனி அவனோடு சேர்ந்து இருந்தவர்கள் இலக்கு என இலங்கை அரசு நடக்கும். எல்லாவற்றையும் பொறுத்துகொள்ளும் சக்தி தமிழர்கள் ஆகிய நமக்கு வேண்டும்.

அல்வா கொடுத்த அதிபர் ராஜபக்சே

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தொலைகாட்சியே வாழ்க்கை ஆகி விட்ட சூழலில் சேனலுக்கு சேனல் பிரபாகரன் மரணம் என்று நொடிக்கு நொடி காட்டினால் யாருடைய மனது பதற்றம் அடையாமல் இருக்கும் அய்யோ ..மரணமா ..என்று பதற்றம் அடையா இதயங்கள் சிலவாகதான் இருக்க முடியும்.

இன்று19-05-09 காலை எழுந்தவுடன் என்ன உண்மை ? பொய்யா? தெரிந்தவர்களுக்கு விவாதங்கள் நடைப்பெற்று கொண்டிருந்தது. செய்திதாள்கள் அத்தனையும் கொட்டை எழுத்துகளில் வீரமரணம் , சகாப்தம் முடிவடைந்தது, மரணம் அடைந்தார், விடுதலை புலிகளின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் என்று அச்சடித்து இன்றைய வியாபார கணக்கை பார்த்துவிட்டார்கள்.

பிரபாகரன் மரணசெய்தியை இலங்கை அதிபர் ராஜபக்சே அதிகார பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்த்து காந்திருந்த அத்தனை தொலைகாட்சி சேனலுக்கும் அல்வா கொடுத்து விட்டார்.

ஒரே செய்தி தாளில் முன்பக்கம் பிரபாகரன் மரணம் நடுபக்கத்தில் பிரபாகரன் நலமாக இருக்கிறார் என்ற நிகழ்வும் நடக்கதான் செய்தது.

பல்வேறு அனுமானங்கள் பல்வேறு செய்திகள் ஆனால் விடுதலைபுலிகளின் இயக்கதலைவர்…. பொறுத்திருப்போம்.

Monday, May 18, 2009

பிரபாகரன் மரணம் உண்மையா ? பொய்யா?


பிரபாகரன் மரணம் உண்மையா ? பொய்யா? ஊடகங்கள் செய்தி எந்தளவிற்கு நம்புவது? ஒவ்வொரு தமிழனின் இதயத்தையும் சுளீரென்று மின்னல் தாக்கியது போல் உணர்த்த பிரபாகரனின் மரண செய்தி உண்மையா? பொய்யா?
அறிந்தவர்கள் பதிவிடுங்கள்.

தமிழ்நாடு தமிழனோட நிலைமை

என்னது பிரபாகரன் இறந்துவிட்டரா?

நேத்து இங்கிலீஸ் சேனல்ல போட்டாங்க..நீ பாக்கலையா..

இல்லையே..

டேய் ..அதெல்லாம் நீ நம்பாத உளவுதுறை “ரா” வோட வேலையா கூட இது இருக்கலாம்.

எல்லாம் வருத்தம் தான் இருக்கு..

ஆனாலும் நாம செய்ய கூடியது என்ன? சாமானியன் நம்மாலால என்ன செஞ்சுடு முடியும்?

நிலைமை பத்தி தெரிஞ்சவன் மனசுல வருத்தம் இருக்கத்தான் செய்யுது.

இங்க கத்தறவன் கவனிக்கபடுறான் இது நிஜம்.

முடியாதவன்வாழ்ககைய ஓட்டியாகனும் சுயநலம் வாய் மூடி மௌனமாயி வாழ வேண்டி இருக்கு..

தமிழனுடைய எல்லா மனசுலயும் வருத்தம் இல்லாம இல்ல முடிஞ்சவன் கத்துறான் முடியாதவன் வருத்தபடுறான் .

பறந்து விலகி..

இணை சேர
சண்டைப் போட்ட
நார்த்தங்குருவிகள்
ரெண்டு

ஒன்றுஒன்றின் மீது
தாவி அமர்ந்து
கொத்தி கொத்தி
சண்டைப்போட

அருகில் வந்தமர்ந்த
அண்டங்காக்கை
சண்டைப்போட்ட
நார்த்தங்குருவிகள்

தனக்கு இரை
என நினைத்து
கொல்ல முயற்சித்த
அண்டங்காக்கை

பறந்துவிலகிய
நார்த்தங்குருவிகள்
திரும்பவும் சண்டையிட்ட
பறந்துவிலக

உணவு இல்லை
ஏமாற்றமாய்
தன்வழி சென்ற
அண்டங்காக்கை.

Friday, May 15, 2009

நல்ல பைல் யாரிடம் இருக்கும்?

பள்ளிசான்றிதழ்களை வைக்க நல்ல பைல் வாங்க வேண்டும் நினைத்தான் அதற்காக தான் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் ஐந்தும் பத்துமாய் சேர்த்து ஒர் நூற்று இருபது பெட்டி பைல் ஒன்று வாங்கினான்.

நீண்டகாலம் பயன்பாட்டில் இருக்கவேண்டிய ஒன்று என்னு நினைத்து வாங்கியது. இவனுடைய தெரு பையன் ஒருவன் நேர்முகத்தேர்வு செல்வதற்காக நல்ல பைல் யாரிடம் இருக்கும் என்று விசாரித்து இவனிடம் வந்து சேர்ந்தான்.

புது பைல் அது. ஏதும் ஆகிவிட்டால் இவனது சூழலில் வாங்குவது கடினம் அடுத்த பயன் பாட்டிற்கு நேரடியாக இவனிடம் வந்து நின்றுவிடுவார்கள் என்ற நினைப்பில் தர முடியாது என்பதை நயமாக கூறிவிட்டான்.

காலம் சுழல இவன் படிப்பு பாதியிலே குடும்ப சூழல் காரணமாக நின்றுவிட அவன் டெக்னிக்கல் கோர்ஸ் முடித்து வெளிநாடு சென்றான்.
இன்றைய நிலைமை இன்னமும் பெட்டி பைல் இவனுடைய சான்றிதழ்களை பாதுகாத்தபடி இருக்க இவனும் அப்படியே இருக்க அவனால் பத்து பைல் கடை வைக்கும் பொருள் ஆதாரத்துடன் வாழ்க்கையில் நிமிர்ந்து நின்றான்.

Thursday, May 14, 2009

பந்தயக் குதிரைகள்

தனியார் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1 மாணவ மாணவியர்கள் மட்டும் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.பல இடங்களில் முற்பகல் மட்டும் இவர்களுக்காகச் செயல்படுகிறது.

பிளஸ்-2 தேர்வுக்குரிய பாடங்களை கோடை விடுமுறையில் நடத்தி முடித்துவிடுகிறார்கள் . சில தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 அரையாண்டுத் தேர்வு முடிந்ததும் பிளஸ்-2 தொடங்கி விடுகிறது.

அரசுப்பள்ளிகளில் நல்ல நாளிலேயே தில்லை நாயகமாக இருக்கின்றன. தனியார் பள்ளிகளிலாவது இத்தகைய நல்ல கல்வி கிடைக்கட்டும் என்ற தவறான கருத்து பொதுமக்களிடம் உள்ளது.

தங்கள் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்றார்கள் என்றும் இத்தனையாவது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி தம்பட்டம் அடிக்கவும் விளம்பரத்தின் வாயிலாக மாணவர்களை வைத்து பணம் சம்பாதிக்கவும் தான் என்பதை பொதுமக்கள் அறிவதில்லை.

இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வெறும் கேள்வி பதிலை மட்டுமே மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் மூளைத்திறன் மழுங்கடிக்கப்பட்டு விடுகிறது. மனவெறுமையை இட்டு நிரப்ப சிலர் போதைப் பழக்கத்துக்கு ஆளாகிறார்கள். சிலர் இரக்கமற்ற முரடர்கள் ஆகிறார்கள்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாதா என்றும் ஆதங்கப்படுவதுதான் நமது தலைவிதி என்று நினைத்துவிட முடியாது.

-தினமணி-

Wednesday, May 13, 2009

வேலையில் நீடிக்க இந்தியாவுக்கு மாறணும்.

பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு நகரான காஸ்டரில் உள்ள ஜவுளி நிறுவனம் கேர்மேன். அங்கு நிதி நெருக்கடியை சமாளிக்ககும் விதமாக ஆட்குறைப்பு சம்பளக் குறைப்பு நடவடிக்கைகளில் அந்நிறுவன உரிமையாளர் மோரல் ஈடுப்பட்டு வருகிறார்.

அங்கு பணியாற்றும் 9 ஆயிரம் ஊழியர்களுக்கு மோரல் விதித்துள்ள நிபந்தனை பெங்களுரில் உள்ள தனது கிளை அலுவலகத்துக்கு அந்த ஊழியர்கள் இட்மாற்றம் செய்யபடுவார்கள் . அதை ஏற்றால் வேலை பிழைக்கும் தவறினால் வேலையில் இருந்து வெளியேறலாம் என்பது தான் அந்த நிபந்தனை.

பிரான்சில் ஊழியர் பெறும் சம்பளம் ரூ.85000 பெங்களுரில் இடம் மாறினால் ரூ.4900 ஆகக் குறைக்கப்படும் என்று மோரல் அறிவித்துள்ளார்.

இது பிரான்சில் ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tuesday, May 12, 2009

இறந்திருந்த வண்ணத்துப்பூச்சி


கடந்து செல்லும் பாதையில் தன்னுடைய இறக்கைகள் விரிய இறந்திருந்த வண்ணத்துப்பூச்சிகாற்றின் வேகத்திற்கு ஏற்ப முன்னும் பின்னும் அசைய பார்ப்பவர்களின் கண்களுக்கு உயிராய் அந்த நேரம்அந்த வண்ணத்துப்பூச்சி.

அந்நேரம் அதனுடைய உறவுகள் உணர்வுகள் விட்டு பிரிந்த அதனுடைய உயிர்ப்பு அதனுடைய உடல் மட்டும் என்னுடைய கைகளில் தஞ்சம் புக...

இங்கும் அங்கும் அசைய என் கைகளில் வண்ணம் ஒட்டி விளையாடியது. உயிர் இருக்க பூவில் அமர உயிரற்று என் கைகளில அமர்ந்தது.

உயிர்ப்புடன் இருக்கையில் பறந்து அமரும் பூ வருகே செல்ல பறக்கும் திரும்பவும் அமரும்அருகே செல்ல பறக்கும் இந்நேரம் பூக்கள் அருகில் இருந்தும் அமரவில்லை சலனமில்லா அமைதி அது.

அதன்உடலை உள்காற்று அதனை விட்டு போனவுடன்வெளிகாற்று அசைத்தது, புரட்டியது எதிர்வினை இல்லை.

வெளிகாற்றின் போக்குக்கு ஒத்துழைத்தது இறந்திருந்த வண்ணத்துப்பூச்சி. உள்காற்று வெளியேற விறைத்து நின்ற உணர்வு கொம்புகள் கால்கள் ,விரிந்தபடியே இருந்த இறக்கைகள் இயக்கம் நின்று போக அதனுடைய உயிர்ப்பும் நின்று போனது.

மகனை கொன்ற தந்தை ஐபிஎல் கிரிக்கெட் கொடுத்த பிரசாதம்.

மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்தவர் மேக்நாத் காம்ளே.தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

வேலை முடித்து நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு வீடு திரும்பினார். சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றார். அவரது மகன் டெல்லி-கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியை பார்த்துக்கொண்டிருந்தார்.

தூங்குவதற்கு இடைஞ்சலாக இருக்கிறது டி.வி.யை ஆப் செய் கூறி உள்ளார். டி.வி.யை ஆப் செய்ய முடியாது என்று மறுத்தமகன் தந்தையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

ஆத்திரம் அடைந்த தந்தை சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து மகனின் நெஞ்சில் குத்தினார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

அளவு முறை இல்லாமல் போனால் எதுவும் சங்கடமே..

Monday, May 11, 2009

கன்னி கோபி

அவனுக்கு பெண் பார்த்து கொண்டிருந்தார்கள்.

என்னப்பா பெண் பார்க்கிற சமாச்சாரம் என்னாச்சு.. நண்பன்

பாத்துகிட்டே இருகாங்க ஜாதகம் ஒத்துவரல என்றான்.

நீ ஏதாவது பொண்ண பாக்க வேண்டியதானே ..

நீ வேற நமக்கு அந்த கொடுப்பின இல்லப்பா.. அப்படி புடிக்கறதா இருந்தா இன்னநேரம் எத்தனையோ அஞ்சாவது படிச்சப்பவே வருசத்துக்கு ஒரு பொண்ணா மனசுல
நின்னுதுங்க

அதெல்லாம் சொல்லாத உனக்கு எப்ப மீச மொளச்சுதோ அதுக்கப்பறம் வந்த பொண்ணுங்கள சொல்லு..

அது ரேவதி நித்யா ரேகா ன்னு பல பேருங்க இப்பயும் ஒரு பொண்ணு இருக்கு பேரு தெரியல..

என்ன செய்யறதுகல்யாணம் ஆவ வரையிலும் நான் கன்னி கோபிதாங்க என்றான்.

Sunday, May 10, 2009

தெரிந்த கதை

ஒரு முனிவரும் அவேரோட சீடரும் நீண்ட பயணம் மேற்கொண்டார்கள். பயணத்தோட இடையில் ஆறு குறுக்கிட்டது.

ஒரு பெண் ஆற்றைக் கடக்க வழி தெரியாமல் கரையில் நின்று கொண்டிருந்தது. இவர்களை ஆற்றை கடக்க உதவுமாறு வேண்டிக்கொள்ள சீடன் பெண்ணை தொட்டால் பாபம் அதனால் நான் உதவ முடியாது என்று சொல்லிவிட முனிவர் தன்னுடைய தோளில் அந்த பெண்ணை சுமந்து ஆற்றை கடந்து மறுகரையில் இறக்கிவிட்டு முனிவரும் சீடனும் தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார்கள்.

சீடனுக்கு மனதில் குறு குறு என்று இருக்க நமக்கு பெண்ணை தீண்டுவது பாபம் பார்ப்பது பாபம் என்று சொல்லி கொடுத்து விட்டு இவரே எதிர்மாறாக நடக்கிறாரே என்று சஞ்சலம் அடைந்தவனாய் எப்படியாவது குருவிடம் கேட்டுவிடவேண்டும் என்று நினைத்தவாறு மௌனமாய் குருவுடன் பயணத்தை தொடர்ந்தான்.

இவனது மௌனம் கண்ட குரு என்ன என்று கேட்க தன்னுடையசந்தேகத்தை கேட்டான் சீடன் குருவிடம்
ஆற்றை கடந்தவுடனே அந்த பெண்ணை இறக்கி விட்டு விட்டேன். நீ இன்னமும் சுமந்து கொண்டு வருகிறாயே என்று சீடனிடம் கேட்டார்.

சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை அவனது முகத்தை பார்த்து புரித்து கொண்ட குரு சீடனிடம் எப்பொழுது நான் ஆற்றின் மறுகரையில் அந்த பெண்ணை இறக்கிவிட்டோனோ அப்பொழுது மனதிலிருந்தும்மறந்து விட்டேன். நீ இன்னமும் மனதில்தூக்கி வருகிறாயே என்று சொன்னார்.

மனச குப்பையா வச்சுக்க கூடாதுன்னு சொல்லவர்றாங்க போலிருக்கு..

Saturday, May 09, 2009

ஞமலி போல் வாழேல்

பாரதியார் இயற்றிய புதிய ஆத்திசூடியில்

“கோல்கைக் கொண்டுவாழ்” என்பதற்கு ஆட்சியை அயலானிடம் விடாமல் சுயாட்சியைப் பெறுவாயாகஎன்பது பொருள். இதில் கோல் என்பது ஆட்சியைக் குறிக்கும்.

“ஞமலி போல் வாழேல்” என்பதற்கு நாயைப் போல் வாழாதே பிறர் உண்டு எஞ்சிய எச்சிலைத் தின்று வாழ்வது நாய். அது போல் நீயே உழைத்து உண்ணாமல் பிறருடைய உழைப்பினால் வந்ததை நுகர்ந்து சோம்பேறியாக வாழாதே என்பது அதன் பொருள்.

Thursday, May 07, 2009

நெஞ்சு வலி வந்தால்தான் இதயம் நினைவுக்குவரும்

விருப்பப்படுவதை செய்வதற்கும் செய்வதை விரும்புவதற்கும் வித்தியாசம் உண்டு. செய்வதை விரும்பும் போது தேக்கம் ஏற்பட வாய்ப்பில்லை. விரும்புவதை மட்டுமே செய்யும்போதுதான் தேக்க நிலை ஏற்படும்.

பொதுவாகவே விரும்புவதை மட்டும் செய்யும் பழக்கம் நமக்கு அதிகம். அதே நேரத்தில் எது விருப்பமானது என்பதை தெரிந்து கொள்ளவே நீண்ட நாட்களாகி விடுகிறது. நாம் விரும்புவதும் கொஞ்ச நாட்களில் அலுத்துபோய் விடுகிறது.

எதுவாக இருந்தாலும் இருக்கும் நிலையில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்ற வாக்கியத்தை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

-சுவாமி தாயனந்த சரஸ்வதி-

விரும்பி சாப்பிட்ட சாப்பாடு சங்கடத்த கொண்டு வந்தது.

விரும்பி விரும்பாமலோ சில செயல்களை சில நபர்களுக்கோ சில சந்தர்ப்பங்களுக்கோ உட்பட்டுதான் செய்தாக வேண்டும்.

இதயம் நல்லாருக்கும் வரையில் நம்முடைய நினைவுக்கு வருவதில்லை. நெஞ்சு வலி வந்தால்தான் இதயம் நினைவுக்கு வரும். மகிழ்ச்சி தெரியாது துன்பம் தெரியும்.

Wednesday, May 06, 2009

முதல பொண்ணு போட்டோ கேளு


நம்ம பையனுக்கு பெண் இருந்த பாருங்க வர்ற சீசன் முடிச்சிடுவோம் பையனி்ன் அப்பா தனக்கு தெரிந்த நண்பரிடம் சொன்னார்.

நம்ம ஊருல அவரு வீட்டு பொண்ணுக்கு பாத்துகிட்டு இருக்காங்க வந்து பாக்க சொல்லவா என்றார் நண்பர்.

பையன் அப்பா சொல்லி அனுப்புங்க என்றார்.

பையனிடம் எப்பா பொண்ணு வீட்டிலிருந்து போட்டோ கேட்டு அனுப்பி இருக்காங்க உன் போட்டோ குடு என்றார்.

பொண்ணோட போட்டோ வந்திருச்சா என்று கேட்டான் அப்பாவிடம் பையன்.

எல நீ கொடுத்தனுப்புடா பாப்போம் இது அப்பா.

இது முறையா என்று கேட்டான் பையன்.

நான் சொல்லிட்டேன் நீ கொடுடா போட்டோ என்றார்.

முதல பொண்ணு போட்டோ கேளு அப்புறம் பாப்போம் பையன்.

எல நான் சொல்றேன் நீ கொடுடா..

யேவ் என்ன ய்யா ஊரு உலகத்துல பொண்ணு போட்டோவத்தான் பஸ்ட் பாப்பாங்க நீ என்னன்ன என் போட்டோ கேக்குற..

நீயாவது பொண்ண போயி பாத்தியா அது இல்லாம என் போட்டோ கொடுத்து அனுப்புங்கிற என்றான் பையன் வேகமாக..

கேட்டாங்கண்ணு கேட்டேன் அப்பா

நீ எனக்கு பொண்ணு பாக்க வேண்டா ஒண்ணும் பாக்க வேண்டா போய்யா என்று கத்தியபடி இடம் அகன்றான்.

பையனின் அப்பா அப்படியே நின்றார்.

Tuesday, May 05, 2009

டிஸ்லெக்சிக்

டிஸ்லெக்சியா என்பது கோர்வையாக வாசிக்கவும் வரிசைப்படி எழுதவும் முடியாத நிலை. பத்தில் ஒரு குழந்தைக்கு இந்த குறைபாடு இருக்கிறது. மற்ற எல்லா வகையிலும் இந்த குழந்தைகள் உச்சத்தில் இருப்பார்கள். வாசிக்கும்பொழுது எழுதும்பொழுது தவறு நிகழும்.

டிஸ்லெக்சியா மூளைக் குறைபாடு அல்ல. முப்பரிமாணத்துக்கு அப்பாலும் பார்க்க முடிகிற திறனை அவர்களின் மூளை பெற்றிருப்பதால் ஏற்படும் தடங்கல்.

யா, னை என்ற இரு எழுத்துக்களை உச்சரிக்கும் அதே நேரத்தில் தும்பிக்கை உள்ள விலங்கின் உருவத்தை மனக் கண்ணில் கொண்டு வர இயலாத நிலை.

1880 ல் இது தொடர்பான ஆய்வுகள் தொடங்கியது. அமெரிக்க பள்ளிகளில் 17 சதவீதம் டிஸ்லெக்சிக் குழந்தைகள்.
எடிசன் பிகாசோ சர்ச்சில் ஃபோர்டு முதல் இன்றைய டாம் க்ருஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் அபிஷேக்பச்சன் வரை டிஸ்லெக்சிக் சாதனையாளர்கள் பட்டியல் நீளமானது.

அன்புள்ள காதலா அன்புடன் 7

அலையும்
எனது உயிர்ப்பு

அவனது
இதயம் தேடி

வந்து செல்லும்
என் மூச்சு

ஏக்கத்தின்
வெளிப்பாடாய்

அவனது
நினைவுகள்

சுருங்கி விரியும்
விழிகளுக்குள்

அகப்படும்
அவன் உருவம்

அடிவயிறு குழைய
என்னில் மாற்றம்

வேகமாய் நடந்த
பாதங்கள்

இடைவெளிகள்
குறைந்து விடுகையில்

என்னில் வியர்த்து
நான்…

அவனது இதயம் தேடி
அன்புடன்.

Monday, May 04, 2009

இந்த காலத்து பொண்ணுங்க ரொம்ப ஸ்பீடு

செல்போன் வாங்குடா வண்டி வாங்குடா என்று தன்னுடைய நண்பனை நிர்பந்தம் செய்தான் அவன்.

எதுக்குடா செல்போன் வண்டியெல்லாம் போக்குவரத்துக்கு சைக்கிள் இருக்கு அநாசிய செலவு பண்ண கூடாது.

டேய் நீ நல்ல வேலையில இருக்க உன்னால இந்த வசதியெல்லாம் செஞ்சுக்க முடியும். நீ காச மிச்ச பண்ணி முடிக்க வேண்டிய பெரிய செலவும் ஒண்ணும் கெடயாது. இந்த காலத்தோட வேகத்துக்கு இதெல்லாம் அவசியம் நாம அத அநாசியமா பயன்படுத்தாம இருந்தா போதும் யோசிப்பா என்றான் இவன்.

எத்தனையோ பேர் சொல்லி பார்த்தார்கள் அதெல்லாம் அநாசியம் என்று பதில் அளித்துவந்தான் இவன்.

சில மாதங்கள் ஆனது. பெண் பார்க்க ஆரம்பித்தார்கள் இவனுடைய நண்பனுக்கு ஜாதகம் வெளியில் சென்றது.
வந்தான் நண்பன் டேய் எந்த கம்பெனி செல்போன்டா வாங்கலாம் என்றான்.

ஆச்சரிமாய் பார்த்தான் இவன் என்னடா மாற்றம் இது என்று கேட்டான் நண்பனிடம்.

நீ வேற இந்த காலத்து பொண்ணுங்க ரொம்ப ஸ்பீடா போறாங்க நாம ஒரு செல்போன் கூட இல்லாட்டினா அவ்வளதான். பொண்ணு வேற பாக்குறாங்கடா என்றான்.

அப்படி போடு அரிவாள என்னடா எவ்வளவோ சொல்லி பாத்தும் கேக்காதவன் இப்படி கேக்குறானு பாத்தா சங்கதி இப்பதான் தெரியுது என்றான்.

அநாசியம் அவசியம் ஆனது.

Sunday, May 03, 2009

ஸ்கார்ப்பியோ காருடன் வரதட்சணை கேட்ட மாப்பிள்ளைக்கு மொட்டை.

அரியானா மாநிலம் அகெரா கிராமத்தை சேர்ந்தவர் இஜாஸ்கான். டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் படித்து கொண்டு இருந்த அவருக்கும் அரியானா மாநிலம் பரத்பூரை சேர்ந்த இலியாஸ் என்பவரின் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை பரத்பூரில் திருமணம் நடந்து முடிந்ததும் மருமகனுக்கு புதிததாக வாங்கிய மாருதி ஆல்ட்டோ காரின் சாவியை மாமனார் இலியாஸ் கொடுத்தார். அதற்கு இஜாஸ் ஸ்கார்ப்பியோ காரும் ரூ.15 லட்சம் பணமும் தந்தால் தான் வாங்குவேன்.அதற்கு குறைந்து எதையும் வாங்க மாட்டேன் என்று கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மணப்பெண் உறவினர்களும் ஊர் மக்களும் இஜாசையும் அவரது தந்தையும் அடித்து உதைத்தனர். இருவரின் தலையையும் மொட்டை அடித்து பணய கைதியாக சிறை வைத்தனர்.

ஊர்பஞ்சாயத்து கூடி ரூ.8 லட்சம்பணம் தந்தால் தான் இருவரையும் விடுவிப்பது என்று முடிவு செய்தது. வேறு வழி இல்லாமல் ரூ.8 லட்சம் கொடுத்தது இருவரும் மீட்கப்பட்டனர். திருமணமும் முறிந்தது.

Saturday, May 02, 2009

அவரு செத்தா சுடுகாடு நீ செத்தா?

ஊருல இல்லாம போய் சம்பாதிச்சு என்னாச்சு பாத்திய அவரு பயன் படுத்திக முடியாம போவுது பாரு.

ஊருல ஒரு நல்ல கெட்டது கலந்துகிட்டது கெடயாது.

அவங்க புள்ளங்க கூட அவரு நம்ம ஊருல சேத்து வைச்ச சொத்த பயன் படுத்திக முடியாம எல்லா வெளியில போயிட்டாங்க இங்க என்னன்ன ஊருக்கு நரி நாட்டான்மை கடைக்கு ரெண்டு ஆடாங்கற கதை அவங்களோட சேத்தவங்க தான் பயன் படுத்துறாங்க அவரு சொத்தஎன்ன செய்ய ..

நீ வேறப்பா கடைசி காலத்துல ஊருல வந்து நிம்மதியா இருக்கலான்னு வந்தாரு பால போன தெய்வம் கொஞ்ச நாள்யே படுக்கைல போட்டுச்சு அவரு செத்து சுடுகாடு போயிட்டாரு

எல்லாரும் போற எடம் தான் அது அதுக்குள்ளே எவ்வள ஆட்டம் ஆடுறோம்

பாவம் அவரு கஷ்ட பட்டும் கடைசியில நிம்மதியில்லமா போயிடுச்சு

வாழ்க்கையில நடக்கறத யாரும் நிர்ணயம் பண்ண முடியாதுப்பா.

உணவை தேடி

கண்களின்
எதிர்பார்ப்பு

கைகளின்
பரபரப்பு

கால்களின்
வேக ஓட்டம்

உணவை தேடி
சிறுவர்கள்

குப்பை தொட்டியில்
எச்சில் இலைகளுக்காய்..

Friday, May 01, 2009

அமாவாசையில் நல்ல பாம்புகளை தேடியவன்.

மற்ற பையன்கள் மாதிரி அவன் அணிவதற்கு துணிகள் கிடையாது. பள்ளிகூடம் என்றால் ஒரு சீருடை தான் பள்ளிவிட்டு வந்தவுடன் துவைத்து போட்டு விட வேண்டும் இல்லையென்றால் மறுநாள் பள்ளி விடுமுறை அவனுக்கு மட்டும்தான்.

குடும்ப தலைவரின் உழைப்பு இருந்தும் வறுமையில் வாடும் குடும்பம் அது. இவன் மற்றவர்களை பார்ப்பான் ஏங்குவான். ஏக்கங்கள் அனைத்துமே கனவுகளாக கற்பனைகளாக வலம் வந்தன இவன் மனதில் காசு இருந்தால் கனவுகள் உண்மையாகும்.ஆனால் உண்மை நிலைமை வறுமை.

இவன் கதை கேட்டான் முதிர்ந்த நல்லபாம்பின் தொண்டையில் ரத்தினம் இருக்கும் அமவாசையில் தன் தொண்டையில் உள்ள ரத்தினத்தை கக்கிவிட்டு இரை தேடுமாம். அந்த ரத்தினம் பல லட்சம் ரூபாய் மதிப்பு இருக்குமாம் என்று தன் மனதில் படிய வைத்தான்.

உண்மையில் அமாவாசையில் இவனுக்குரிய எல்லைகளில் முதிர்ந்த பாம்பை தேடுவான் ரத்தினத்தை எடுத்து தன்னுடைய வறுமையை போக்க ஆனால் பாம்பு கேட்ட கதையில் வந்தது நேரில் வரவில்லை.
சொன்னவர்கள் அவனுக்கு சொல்லவில்லை உழைப்புதான் ரத்தினம் என்று எதார்த்த வாழ்க்கையில் வாழ்க்கையோட சிரமங்கள் கற்று கொடுத்தன உழைப்புதான் வாழ்வு என்று அவன் அறிந்து கொள்ளும் வரையில் அமாவாசையில் நல்ல பாம்புகளை தேடுவான்.

LinkWithin

Related Posts with Thumbnails