Monday, December 28, 2009

தேவ ராஜதந்திரமும் அரக்கமுட்டாள் தனமும்.

மார்கழி மாதம் காலையிலே ஆன்மீக பிரசங்கி ஒருவா் கோவிலில் பிரசங்கம் செய்தார். விரதங்கள் வழிபாடுகள் பற்றிய கருத்துகளை சொல்லிக் கொண்டிருந்தார்.

அதில் தேவர்கள் அமிர்தம் வேண்டி கடலை கடைய ஆட்கள் நிறைய தேவைப்பட்டார்களாம். தேவர்களை விட தாண்டி அரக்கர்கள் நிறையப் பேர் இருக்க அவர்களுடைய சக்தியை பயன்படுத்தி கொள்வதற்காக கடலை கடைந்தவுடன் கிடைக்கும் அமிர்தத்தில் பாதி என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுகடலை கடைந்தார்கள்.

அமிர்தம் வந்தது. மரணத்தை வெல்லகூடிய அந்த மருந்தை தேவர்கள் மட்டுமே உண்ண விரும்பி தேவர் ஒருவர்பெண் வேடமிட்டு அரக்கர்களை ஏமாற்றி அவர்களே அமிர்தத்தை உண்டதாக புராணம்.

என்ன அநியாயம் ?

அமிர்தம் பாதி என்று ஒப்பந்தம் செய்யப்பட்டு பாதி தராமல் ஏமாற்றியது ராஜதந்திரம்.

அதைப்பெறாமல் பெண்பித்தர்களாய் அலைந்து அமிர்தத்தை இழந்தது அரக்கர்களின் முட்டாள்தனம்.

கொஞ்சமும் புரியாமல் அய்யா தாங்கள் இப்போது சொன்ன அல்லது படித்த மேற் சொன்ன கதைக்கு என்ன அர்த்தம் என்று கேட்க...

நல்லது இப்படிதான் நடக்கும் என்பதற்கு உதாரணம் தேவர்களும் கெடுதல் செய்பவர்கள்கெட்டு அழிந்து போவதற்கு உதாரணமாகஅரக்கர்களை காட்டுகிறார்கள் என்று சொல்ல கொஞ்சம் தலை சுற்றியது.

இந்த கதைக்கு வேறு காரணம் ஏதோ இருக்க அவர் அவர்களுக்கு தோன்றியப்படிகாரணங்களை உருவாக்கி கொள்வதுதான் ஆன்மீகமா தெரியவில்லை.

Friday, December 25, 2009

ஓர் மாலைப்பொழுது


வெள்ளை மேகங்கள்

நிறைந்த வானம்

திட்டு திட்டாய்

இடை இடையே

கரு மேகங்களின்

தலைக்காட்டல்

சூரியன் மறைந்து

போன மாலை

காற்றசைவு இல்லா

மரங்களின் இருப்பு

பறந்து போன

காக்கைகள்

பறந்து அமர்ந்த

அத்துப் பூச்சி

இருட்டிய மாலை

இரைத்தேடிய

ஒற்றை கழுகு

Tuesday, December 22, 2009

நாட்டு கோழி

பெரிய இடம் பேரனுக்கு பொறந்த நாள் கொண்டாடினாங்க. குறிப்பிட்ட ஒரு நூறு பேருக்கு வாழ்த்த இல்லீங்க சாப்பிடஅழைத்தார்கள்.

பிரியாணி தயிர்சாதம் இனிப்பு பச்சடி நாட்டு கோழி வறுவல் முட்டை சாப்பாட்டு வகையறா முடிவு செய்யப்பட்டு சமையல்காரர் சமைக்க தேடப்பட்டார்.

சொந்த ஊரில் நன்றாக பிரியாணி செய்பவரிடம் கேட்டார்கள். எப்பா நாலு மரக்கா பிரியாணி...ஒரு மரக்கா தயிர் சாதம்..பாக்கி வகையறா செய்யனும் எவ்வளப்பா கேட்டார்கள்.

சமையல்காரர் ஆயிரம் ரூபா கொடுங்க என்று கேட்க..

இந்தாப்பா நூறு ரூபா புடி வந்து பேசிக்குவோம் .

எப்பங்க சமைக்கனும் கரெக்டா ஞாயிற்று கெழம வந்துருப்பா..

சரிங்க என்று சமையல்காரர் அகல..

ஞாயிறு அன்று பிரியாணி சமைக்கப்பட்டு வீட்டுகாரரிடம் ஒப்படைத்துவிட்டு சமையல்காரர் கிளம்பினார்.

நான் வறேங்க...

எவ்வளோ வாங்கியிருக்க..

நூறு ரூபா கொடுத்தீஙக..

இந்தா பாக்கி நாலு நூறு மடித்து கொடுக்க..

சமையல்காரர் அதிர்ந்து என்னங்க..

வச்சுகப்பா போதும்.

அதெல்லாம் கட்டுபுடியாவது கொடுங்க என்று கேட்க.. ஏதோ வேணுமுன்னா நூறு குறைச்சிகிட்டு பாக்கிய கொடு சார்.

தெரிஞ்சவர் கூப்பிட்டா நீ என்னப்பா இந்தா மேலும் ஐம்பது கொடுக்கப்பட..

என்னமோ போங்க உழைக்கறவனுக்கு காலம் கெடையாது சார் ஏமாத்தறவனுக்குதான் காலம். இன்னம் கொடு சார் என்று கேட்க..

உன்ன வந்து கூப்பிட்டாருல அவர வரசொல்றேன் பேசிகி்ப்பா என்று நகர்ந்தார்.

காசு இருந்து என்ன பண்ண மனசு இல்லயே என்று மனதில் நினைத்தப்படி இடம் அகன்றார் சமையல்காரர்.

Monday, December 21, 2009

காணாமல்போன உயிர்ப்பு


நினைப்பதும்

நடப்பதும்

முடிவுகள் வேறாய்

கிடைக்கும் முன்

முடிவில்

வாழ்ந்த வாழ்வு

கற்பனையாய்

மனதில்

ஏமாற்றமாய்

முகம் காட்ட

கண்களில்

காணாமல்போன

உயிர்ப்பு

விதைத்த நிலம்

பூச்சி விதை

விதைத்தவுடன்

நாட்கள்

எண்ணும் மனது

அறுவடைகாய்

விதைகள் முளைக்கும்

நம்பிக்கையாய்

மனதில்..

Friday, December 18, 2009

ஆடு மாடு பொட்ட போடலாம் ஆனா பொம்பள


பிரசவத்துக்கு போன உன் பொண்டாட்டி என்னய்யா ஆச்சு ?

நேத்து தான் புள்ள பொறந்துச்சு?

அட என்னய்யா..சந்தோசம்.

என்ன புள்ள?

அட போண்ண...பொம்பள புள்ள.. ஏற்கனவே பொறந்ததும் பொம்பள புள்ள..

நான் பாக்கவே போகலண்ண..

என்ன செய்ய போறோம் தெரியலவருத்தமா இருக்கு?

அட ..அட..போன வாரம் உன்னோட ஆடு என்ன குட்டி போட்டது.

அது ரெண்டுபொட்ட குட்டி போட்டுச்சுன்னுசந்தோசமா சிரிச்சுகிட்டே சொன்ன..

முகம் போற பல்லா தெரிஞ்சுது.

இப்பமட்டும் என்ன நீ பெத்த பொண்ணு...முகத்த இவளோ தூக்கி வச்சுட்டு பேசுற...

வருத்தத்த உட்டுபுட்டு போய்யா..போ..புள்ளைய போயி பாரு..

ஆடு மாடு பொட்ட போட்ட சந்தோசமா இருக்கீங்க..நீ சேந்து பெத்து போட்டு உம் பொண்டாட்டிய கோச்சு என்ன பண்ண போற..

எல்லாம் வெவரமாதான் இருக்கீங்க.

Tuesday, December 15, 2009

பெய்த மழை பொய்த்து போன எதிர்பார்ப்பு


இரண்டு மைல்களுக்கு அப்பால் கருத்த மழைமேகங்கள் ஒன்று திரண்டிருந்தன. குளிர்ந்த காற்று வீசியதால்மழை மேகங்களின் நகருதல் மிக வேகமாக இருந்தது.

கண்ணுக்கு எட்டிய தூரம் வெள்ளையாய் தெரிந்தது.

அவன் அந்த முதியவருடன் பேசி கொண்டிருந்தான். தம்பி மழை வந்துகிட்டு இருக்கு கிளம்புங்க என்றார்.

அவன் இரு சக்கர வாகனத்தில் கிளம்பினான். மழை வந்து கொண்டேயிருந்தது. இடையில் ஏரிக்கரை , ஏரிக்கரையின் ஒரு புறத்திலிருந்து மிக வேகமாக மழை வருவதை பார்த்து கொண்டே வண்டியை மிக வேகமாக ஓட்டினான்.

மிக வேகமாக மழை பெய்தபடி வந்துகொண்டேயிருக்க அவன் ஏரிக்கரையின் மறுபுறம் வந்து சேருவதற்குள் மழை அவனை வந்தடைந்தது.

நனைந்து போய் கோவில் அருகில் நின்று கொண்டான்.

நனையாமல் சென்று விடலாம் என்ற அவனுடைய எதிர்பார்ப்பு பொய்த்து போனது.

முயற்சிகள் தோற்கலாம்.

Thursday, December 10, 2009

எதிர்பார்ப்பு இல்லா வாழ்வை எதிர்பார்த்து.....எதிர்பார்ப்புகள் நிகழாத உறவுகள் அரிது. எதிர்பார்ப்புகள்ஆயிரங்கள் இல்லாவிடினும் அவர்களின் வாழ்க்கை தேவைக்கு தகுந்த மாதிரி எதிர்பார்ப்புகள் அமைவது உண்மை.

சாதாரண மனித அடிப்படை தேவைகளின் எதிர்பார்ப்புகளின் போது தான் அவன் தன்னையே இழந்து வேதனைகளுக்கு உள்ளாகிறான்.

அய்யா பசி என்றவனுக்கு கிடைக்கும் பதில் வார்த்தைகள் ஏளான பார்வையும் உடம்பு நல்லா தானே இருக்கு உழைச்சு திங்க வேண்டியது தானே சரி போ போ இப்பதான் எல்லாம் முடிஞ்சது என்பார்.

உடல் உழைப்பைசெலுத்திவேலையை பார்த்துவிட்டு தன்னுடைய ஊதியத்தை பெறுவதற்காக மணி கணக்காக எதிர்பார்த்து காத்து கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்?

அவர்களெல்லாம் முதல் ஆள்பவர்கள் முதலாளிகள் என்ன செய்ய ?

ஒருவரை சார்ந்த ஒருவரின் வாழ்வு குள்ளே எத்தனை விதமான எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் ஆகின்றன.

எதிர்பார்ப்புகள் இயல்பானவை என்றால் ஏமாற்றங்கள் இயல்பானவை அதைவிட பாதிப்புகள் மிகுந்த மன வேதனை தருபவை.

எதிர்பார்ப்பு இல்லா வாழ்வை எதிர்பார்த்து.....


Wednesday, December 09, 2009

விலை மகளிர் தான் வாடிக்கை.கல்வி உதவிதொகை வாங்குவதற்காக வருமான சான்றிதழ் வேண்டி கிராம நிர்வாக அலுவலர் நின்றான் அந்த சிறுவன்.

சார் இந்த பையனுக்கு குறைந்த வருவாய் போட்டு வருமான சான்றிதழ் கொடுங்க சார் என்றார் உதவியாளர்.

கஷ்டப்படுற பெரியகுடும்பம் சார் புள்ளங்க நிறைய பாத்து போட்டு கொடுங்க சார் என்று மேலும் கூறினார் உதவியாளர்.

யோவ்..அவன் அவன் பெத்து போட்டு போயிடுவான் அதுகெல்லாம நாம சர்டிபிகேட் தர முடியுமா.போ..போ..போயிட்டு அப்புறம் வர சொல்லு என்றார் கிராம நிர்வாக அலுவலர்.

மனதில் நொறுங்கி போனான் சிறுவன். அய்யோ என்ன இப்படி பேசிகிறார் என்று எண்ணியவாறு அண்ண சர்டிபிகேட் கொடுப்பாரா என்றான் உதவியாளரிடம்.

நீ போ நான் வாங்கி தர்றேன் என்றார்.

மனதில் தன் நிலைமையை நினைத்தவாறே வீடு திரும்பினான்.

இரவு பத்து மணி நல்ல குடிப்போதை ஏறியவுடனே பெண் சுகம் வேண்டும் அவருக்கு பேருந்து நிலையத்தில் நிற்கும் விலை மகளிர் தான் வாடிக்கை.

அன்றும் அப்படி தான் மதுவின் கிறக்கத்தில் விலை மகளிர் என குடும்ப பெண்ணை விபசாரத்திற்கு அழைக்க

எலா யார கூப்பிடற என்ற அந்த பெண் செருப்பை கழட்டினாள்.

யாரோ இவரை தெரிந்தவர் போய் தடுத்து அழைத்துப்போனார்.

வேறு யாருமல்ல மேற் சொன்ன கிராம நிர்வாக அலுவலர் தான்இந்த பெருமைக்கு உரியவர்.

இப்படியும் மனிதர்கள்.

Monday, December 07, 2009

காணாமல் போன பாம்பு


குளம் குளத்தின் ஓரமாய் சென்ற வாய்க்கலின் தினமும் இறங்கி கால் அலம்பும்இடம் அருகே பாம்பு ஒன்று காத்திருக்கும் தன்னுடைய இரைக்காக அங்குள்ள கல்லின் மீது தன்னுடைய உடலை சுருட்டியப்படி தலையை தூக்கியவாறு நிற்கும்.

நடக்கும் சத்தம் கேட்டவுடன் ஓடி மறைந்துவிடும். தினசரி பார்வையில் படும் அதைப்பற்றிய பயம் இல்லாது வாய்க்காலுக்கு வருவதும் போவதுமாக இருந்தேன்.

ஒருநாள் இன்னொரு பாம்பை பார்த்தேன் தலையை மட்டும் தண்ணீரின் வெளியே நீட்டியப்படி நின்றது. சத்தம் கேட்டவுடன் தலையை உள்ளுக்குள் இழுத்தப்படி மறைந்தது.

மறுநாள் செல்ல அந்தபகுதி வந்தவுடன் மனது மிகுந்த எச்சரிக்கை உணர்வை ஏற்ப்படுத்தியது. கண்களை உன்னிப்பாக்கி அந்தபகுதி யை ஆராய்ந்தப்படியேச் செல்ல முதல் நாள் தண்ணீரில் மறைந்து காணாமல் போன பாம்பு இன்றும் இரைக்காக படுந்திருந்தது தன்னுடைய நீண்ட உடலை சுருட்டியப்படி தலையை மேல் நோக்கியே வைத்திருந்தது.

சத்தம் கேட்டவுடன் மெதுவாய் ஊர்ந்து அருகில் இருக்கும் வளைக்குள் தன்னை இருத்தி கொண்டது. இரண்டு அடிகள் முன்னோக்கி ச்செல்ல அடுத்த பாம்பு வரவேற்றது வழக்கம் போலவே அதுவும் நகர்ந்து செல்ல மனது பயப்பட ஆரம்பித்தது.

அன்று முதல் அந்தபகுதி வந்தவுடனே மனதின் பரிதவிப்பு தொடங்கிவிடும். பயமும் எச்சரிக்கை உணர்வும் கலந்த கலவையாக அந்தபகுதிக்கு செல்வது போவதுமாக இருக்கபாம்பு குடும்பம் தொடர்ந்து அந்தபகுதியில் வாழ்ந்து கொண்டுதான் இருந்தது.

Friday, December 04, 2009

சரிதானா?
எண்ணங்கள்

தோன்றா மனது

பெரிய சுமையாய்

என்னுள்ளே

அறியாது

புரியாது

ஒன்றுமே இல்லாது

மார்பின் மையம்

சுமையாய்

மனம் என்ன?

எண்ணங்கள் என்ன?

குழப்பமில்லை

மகிழ்ச்சி இல்லை

மார்பின் மையம்

சுமையாய் இருக்க

எண்ணங்கள் தோன்றா

மனது சரிதானா?


Tuesday, December 01, 2009

அவரும் அப்படிதான்


தொழில் சார்ந்த வெற்றிகள் ஒருவரின் வாழ்க்கையை மேம்படுத்தி அவர்களின் வாழ்க்கை தரத்தை சமுதாயத்தில் நிலைத்திட செய்யும். தோல்விகள் அவர்கள் வாழ்ந்த சூழலைப் பாதித்து மனதிற்கும் வாழ்க்கைக்கும் பெரிய இடைவெளியை ஏற்ப்படுத்தி அவர்களை நிலைகுலைத்துவிடும்.

தொடர் போராட்டமாய் வாழ்வு தொடர் வெற்றிகளும் தொடர் தோல்விகளும் காலங்கள் தோறும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

வளர்ந்த சூழல் வாழ்வு அமைந்த விதம் அவ்வப்போது மேலும் வளர ஊக்குவிப்பவர்கள் அமைந்த வாழ்க்கை வெற்றிகரமான வாழ்வாக மலர்ந்து விடுகிறது.

சூழல் சரியாக அமையாதவர்களின் வாழ்வு அவ்வளவாக மலர்ந்து விடுவதில்லை.

அவரும் அப்படிதான் தந்தை விட்டுப்போன தொழில் நன்றாக செய்தார்கள் நன்றாக செழித்து வளர்ந்தது. வசதி மேம்பாடு அவரை யாராவது மதிய வேளைகளில் சாப்பிட கூப்பிட்டால் ஏ.சி. அறையில் தான் நான் சாப்பிடுவேன் என்பார். அப்படியே செய்தார் தானே தொழில் சிறந்தவன் என்று மார்தட்டவும் தவறவில்லைதான் அவர்.

ஆரம்பிக்க கூடாத இடத்தில் கடை ஆரம்பித்தார் பெரும் செலவு செய்து ஆரம்பித்த கடை சரியானப்படி கல்லா கட்டவில்லை. விட மனமில்லாமல் தொடர்ந்து நடத்தப்போய் பெரும் நட்டம் வந்தது இருந்த தொழிலும் கைவிட்டு போனது. பெரும் கடன் வந்தது.

வாழ்ந்த விதம் சமாளிக்க முடியாமல் குடும்பம் நிர்வாகமே நடத்த திறமையின்றி போனார். மனைவி பிள்ளைகள் பிறந்த இடம் சென்றனர். இவரது அண்ணன் வீட்டில் இவரது சாப்பாடு என்று ஆனது.

எங்கு சென்றாலும் கார் தான் என்று இருந்தவர் தன்னுடைய பிள்ளைகளின் சைக்கிளை ஓட்டி கொண்டு இருக்கிறார்.

வெளியில் அதிகம் செல்வது கிடையாது. செய்த தொழில் அவ்வப்போது கிடைக்கும் கமிசன் தொகையில் தான் அவரது வாழ்வு. பல லட்சங்கள் கடனாளியாக இன்னமும் நகரத்தின் வீதிகளில் அவர்.

அவரை தெரிந்தவர்கள் அய்யோ பாவம் என்று சிலபேர் இவனுக்கு வேணும் என்று சில பேர் காதுபடவே பேசி…

LinkWithin

Related Posts with Thumbnails