Friday, January 30, 2009

வெளிநாட்டு விபரங்களை அறிய உதவும் இந்திய அரசு

வெளிநாட்டு வேலையின் விபரங்கள் வெளிநாட்டில் குடியேறுவதற்கான விதிமுறைகள் மற்றும் வெளிநாடு செல்வதற்கான அனைத்து விபரங்களையும்
இந்திய அரசால் நிறுவப்பட்ட இலவச ஹெல்ப்லைன்

எண்1800113090* தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு

www.moia.gov.in info@moia.nic.in

நீ பாட்டுக்கும் போற வர்ற …

உன்ன நம்பியெல்லாம் நான் பொண்ணு பாக்க முடியாது.

நீ பாட்டுக்கும் போற வர்ற …
நான் பாட்டுக்கு உனக்கு கல்யாணத்த பண்ணி வச்சுப்புட்டு கல்யாணம் பண்ணியும் இப்படியே சுத்திகிட்டு இருந்தீன்னா

நான் யாரோட முகத்துல முழிக்கிறது.

கத்தினாள் தாய்.

அவனுக்கென்ன நாம எதோ பெத்து வழத்துவுடதான் முடியும்.நாம இருக்குற வசதிக்கு சோறு போட்டு துணிமணி எடுத்துகுடுக்கறதே பெருசு.

இவன் ஒரு பயலா… சரிதான் போறத்துக்கு இவனுக்கு கீழ உள்ளவங்கல நினைச்சு பாக்கமாட்டேங்கிறான்.

தந்தையோட அட்வைஸ்.

தலைகுனிந்தவாறே பையன் மௌனமாய்.

Thursday, January 29, 2009

டேய்..லூசு விட்டு இழுடா..

டேய்..போ..போ.. என்று சுளீர் தன் கையில் வைத்திருந்த குச்சியால் குளத்தின் உள்ளே இறங்க மறுத்த நாயை ஓங்கி அடித்தான் சிநுவன்.

இழுடா..டேய்..லூசு விட்டு இழுடா..மாணிக்கம்.

இந்தா..போ..போ.. என்ற நாயை விரட்ட..

முரண்டு பிடித்த நாய் குளத்திற்குள் இரங்காமல் பின்னுக்கு வந்தபடி .

கயிற லூசு விடுடா..என்று கத்தினான் சிறுவன்.

அதற்குள் தன் தலையை லவகமாக வெளியே இழுத்து விட்டால் போதும் நாய் ஓட..

டேய் ..இந்தா என்று கையை நீட்டியப்படி ச்சு..ச்சு..என்றான் சிறுவன்.

திரும்பி பார்த்த நாய் அந்த இடம் நிற்காமல் ஓடியது.

நான்தான் சொல்லறேன் நீதான்டா கயிற இழுத்து புடிச்சுபுட்ட..

எங்கடா போய் புடிக்கறது மாணிக்கம்.

நான் சொன்ன நீ கேக்கல எனக்கு புடிக்க தெரியாது நீ புடின்னு சொன்னேன்.

இந்த குரங்கு குட்டிய பாத்துகடா.. என்று சொல்லியபடியே நாயை தேடி ஓடினான் சிறுவன்.

Wednesday, January 28, 2009

நினைத்து கொள்ளல் காதல் நிஜமல்ல..

நழுவியஉடைதனை
சரி செய்யும்
அவள் கரங்களின்
செய்கை இயல்பு

தோழி பேச்சின்
இடையே
ஓரக்கண்ணால்
ஒரு பார்வை
கடக்கும் பொழுது
எழும் சத்தம்

சத்தம் கேட்டு
திரும்புகையில்
அலையும்
அவள் பார்வை

விருப்பமானவன்
நிற்க
விரும்பிய அவளின்
தவிப்பு ஈர்ப்பு

தொடர் நடிப்பு
தொடர் ஈர்ப்பு

நினைத்து கொள்ளல்
காதல்நிஜமல்ல..

Tuesday, January 27, 2009

புதுப்பெண் இரையானாள்.

ச்சீ..த்தூ.. நீயும் பொண்ணா..

கோபமாய் இரைந்தாள் அந்த முதியவள்.

செய்யா குற்றத்திற்காக திட்டு வாங்கிய அந்த புதுப்பெண் நொந்து நூலாகினாள் மனத்திற்குள் உடைந்தாள் மௌனமாய் குமுறினாள்.

தவறாய் புரிந்து கொண்ட விசயம் தன்னோடு நெருக்கமானவர்களிடம் கோபம் காட்ட பயம்.

தன் கோபம் வெளிக்காட்ட பலவீனமாய் தெரிந்த புதுப்பெண் இரையானாள்.

பாவம் புதுப்பெண்ணிற்கு சண்டை போட தெரிந்தாலும் வந்தவுடன் சண்டையா ? நம்மை பற்றி என்ன நினைப்பார்களோ என்ற பயம் சண்டைகாரி என்று நினைத்து விட்டால்என்ன செய்ய..

தன் நிலைமை நினைத்து தனக்குள் அழுதவாறே மௌனமாய் அவள்.

Monday, January 26, 2009

டேய் அத வாங்கிட்டு வா

சக நண்பன் சக தோழன் அவன். அந்த கூட்டத்தில் மற்றவர்களை விட வசதி குறைவு அவனுக்கு அதனாலயே மற்றவர்களுக்கு அவன் இகழ்ச்சி.

யார் சின்ன வேலை செய்ய வேண்டியதாக இருந்தாலும் அதிகாரம் படைத்தவர்களாய் மாறி டேய் அத வாங்கிட்டு வா எப்பா செத்த இத வாங்கிட்டு வா என்று கட்டளைகளை பிறப்பித்து கொண்டே இருப்பார்கள். ஏனென்றால் அவன் சக தோழன் சக நண்பன் .

அவனுடைய முன்னேற்றத்துக்கு அவர்களால் உதவ முடியும் என்ற சூழல் இருந்தபோதிலும் சமயங்கள் வரும்போது மௌனி ஆகிவிடுவார்கள் எல்லாம். அந்த நண்பர்கள் யாருக்கு உதவி தேவை என்றாலும் அவன்தான் முதல் பலிகடா.

பலிகடா நண்பன் யாரும் தன்னை தப்பாக நினைக்க கூடாதே என்று யார் சொன்னாலும் கேட்கிறேன் என்பது அவருடைய வாதம்.

எல்லோருக்கும் நல்லவராக தன்னை காட்டி கொள்ளும் பண்பு.
அவருடைய முன்னேற்றம் பற்றி கவலைபடாமல் எடுப்பார் கைப்பிள்ளையாய் செயல்படும்விதம் அவருடைய நண்பர்கள் எல்லோரும் ஏறுமுகமாய் இவர் இறங்குமுகமாய் வாழ்வின் கடை நிலையில் இருந்து கொண்டு கஷ்டபடுகிறார்.

Saturday, January 24, 2009

டென்சன் ப்ரீ

எங்க நீங்க டென்சனா இருந்தா தீத்துகறத்துக்கு என்ன செய்வீங்க..

நமக்கு..

நமக்கு இல்ல உங்களுக்கு..

ஆமா..ஆமா.. என்ன குவாட்டரு ஸ்நாக்ஸ் வாங்கி பொறுமையா உட்காந்து குடிக்கறதாப்பா

நீங்க என்ன சொல்லவர்றீயோ..

எனக்கு பொண்டாட்டியோட பேசிட்டு அப்புறம் அப்படியே..


சரி ..சரி புரியுதுங்க

அவர் நாம சொல்லறத கேட்டுகிட்டே இருக்காரு.. அவரு எதுவுமே சொல்லல..

நான் அப்படியே சைக்கிளோ பைக்கோ கிடைச்சுதுனா மெதுவா ஓட்டிட்டு போறதுதான் டென்சன் ப்ரீ.

நம்ம கூட்டத்துல அவரு ஒருத்தருதான் பாக்கி அவரையும் கேப்போம்.

நமக்கு தனிமை தான். வயல் வயல் சார்ந்த எடம் தான் ...

ஆமா நீங்க..

Thursday, January 22, 2009

புகைப்பட தொகுப்புஅந்தகாசுக்கு சோழி இருக்குங்க..

எப்பா நாளக்கு நீ பாட்டுக்கு ஏமாத்திபுடாத காலையில வீட்டுக்கு வேலக்கு வந்துரு..

காத்தால ஒம்பது மணிக்கு வந்துறேங்க..

சரி..சரி ..வந்துடுப்பா..

மறுநாள் காலை ஒன்பது மணி என்ன வேலங்க எனக்கு ...

அந்த மரம் இருக்குல்ல அதுல கிளய கழிச்சு வேலிய அடைக்கனுப்பா

அப்புறங்க..

அங்க புல்ல செதுக்கி ஒழுங்கு பண்ணிருப்பா..

சரிங்க.

பாத்துட்டு இரு இந்தா வந்துறேன்.

போயிட்டு வாங்க.. நான் பாத்துக்குறேன்

வேலை முடிந்தது வந்துட்டாங்களா..

இந்தாவந்துருவாங்கப்பா.... வீட்டுகார அம்மா

வீட்டு கொழம்பு காகறி அரிசி வாங்கி்ட்டு போவனும்மா.. வந்துருவாங்களாம்மா..

வந்துருவாங்க..வந்துருவாங்க உட்காரு..

என்னப்பா வேல முடிச்சிட்டியா..

முடிச்சுட்டேங்க..

நாளக்கும் வந்துரு வேல இருக்கு அதோட
சேத்து இன்னய சம்பளத்த வாங்கிக்கலாம்

இல்லங்க அந்தகாசுக்கு சோழி இருக்குங்க..

நா இல்லேன்னு சொல்லல...

நாளக்கு வா சேத்து வாங்கிக்கலாம்.

உழச்ச கூலியும் கெடக்காம புள்ளங்தீனி வூட்டு அரிசி என்ன செய்ய என்றப்படி பாத்து ஏதாவது இருந்தா கொடுங்க...

Tuesday, January 20, 2009

அப்ப உனக்கு வர பொண்டாட்டி

ரொம்ப அழகான பொண்ணுங்கள கட்ட குடுதாங்க …

ஏன்டா..

நீங்க வேறங்க வீட்டு வேல யில டிமிக்கி குடுத்துறாவோ.. ஒரு வேல சரியா செய்ய தெரியலிங்க

எப்படிடா சொல்ற.. எங்கடா பாத்த அழகான பொண்ணுங்கள வேல செய்யாம இருக்கறத..

நான் பாத்த எடத்துல என்னோட சொந்தகார பொண்ணுங்க வீட்டுலதாங்க

எல தான் பொண்டாட்டி அது மாதிரி இருக்கோன்னும் இந்த மாதிரி இருக்கனும் கனவு கண்டுகிட்டு நிறையபேரு இருக்கிறாங்க..நீ என்னடான்னா

நீங்க வேன்னா கொஞ்சம் ஆராஞ்சு பாத்தீங்கன்னபத்துல எட்டு பேரு அழகா இருக்கோன்னுட்டு டிமிக்கி தர்ற ஆளுதான்.

அப்ப உனக்கு வர பொண்டாட்டி எந்த மாதிரி…

யார் எப்படியோங்க எனக்கு வேண்டாங்க அழகு பொண்ணு ஏதோ மீடியமா கிடைச்சா போறுங்க..

எல அது இல்லடா விசயம் எல்லாமே பெத்தவங்க கையிலதான்டா இருக்கு…

Monday, January 19, 2009

தம்பீ ரொம்ப வெவரமா பேசுது

என்னப்பா புது மாப்ளே எப்படி இருக்கே..

இன்னும் ஒரு மாசமா.. என்ன எல்லாம் கல்யாணம் ஆன மாறி போயிருவாங்க..

நான் மாற மாட்டேங்க..

இந்தமேரி சொன்னவங்க எத்தனையோ தம்பி. ஒருத்திக்கு கயிறு ஏர்ற வரதான்
நாங்களும் பாக்கதான போறோம்.

பாருங்க..பாருங்க..

பாருங்கன்னு சொல்லாதியோ தம்பீ ஆரம்ப நல்லாதான் இருக்கும் கொஞ்சநாட் போனதான் தெரியும்.

ரொம்ப பயமுறுத்த வேண்டா தகுதி வந்தா தான் கல்யாணமே வரும்.

நான் ஏன் தம்பி உன்ன பயமுறுத்த தனியா சுதந்தரமா இருந்துட்டு அதுகுள்ள போறப்ப கிட்டதட்ட வெலங்கு போட்ட மாதிரி தான்.

தனியா இருந்தப்ப ஒரு ரூட்டுன்னா.. வாழ்க்கைய பகிர்ந்துக்க போறப்பா அதும் தனி ரூட்டுதான்.

தம்பீ ரொம்ப வெவரமா பேசுது நல்லா இருங்க தம்பி...

சரிங்க..

அமைதி அலை.

எதையும்
விட்டு தள்ளும்
வேதனையோடு
பற்றி கொள்கிறேன்
ஆசைகளுக்கு
அணைக்கட்டு
எண்ணங்களின்
ஆராவாரம்
அடங்காமல்
எண்ண வெள்ளம்
பேரழிவு
அமைதியின்மை எனும்
புதிய ஆறு
உருவகம் பெற
வாழ்க்கை கடலில்
சங்கமித்த பின்
வாழ்வின் போக்கில்
வரும்
அமைதி அலை.

Sunday, January 18, 2009

பிரபஞ்சத்தின் போக்கு எங்கே செல்கிறது?

மிதிவண்டி முன்னேற மறுக்கும் காற்றின் எதிர்திசையில் சில அடிகள் முன்னேற பல நிமிடங்கள் ஆகும்.

காற்றின் போக்கில் மிதிவண்டியின் வேகம் கூடும் காற்றின்போக்கில் காற்றுகாலம் என்னவோ மழைகாலமாக மாறிய விந்தை.

முன் வருடங்களில் பிய்ந்து போன பூ இதழ்கள் உதிர்ந்த சருகுகள் பச்சை இலைகள் வீதியெங்கும் பரவி கிடக்கும் அழகு. காற்று காலத்தின் முத்திரை தெளிவாய் தெரியும்.

இவ்வருடம் என்னவோ எதுவுமே நடைபெறா செயலாய் சூரியன் தலைக்காட்டா மேக கூட்டமாய் இரவானால் நட்சத்திரங்கள் காணாமல் போக கருமேகங்கள் கனமழை பெய்த அற்புதம்.

பிரபஞ்சத்தின் போக்கு எங்கே செல்கிறது? விடை தெரிந்ததாய் சில காரணங்களை அறிவியல் உலகம் சொல்ல விடை தெரியா யாரும் அறியா காரணங்கள் எத்தனை எத்தனை என வரும் காலங்கள் தெளிவாய் உணர்த்தும்.

அறியா புதிராய் பல்வேறு மாறுதல்களின் கையிருப்பு பிரபஞ்சத்தின் உள்ளே..

Saturday, January 17, 2009

காணமல் போன கன்னியும் காளையும்

கூட்டத்துல யாராவது சின்னபசங்க இருந்தா வாங்கப்பா வந்து இதுல ஒரு சீட்டு எடுத்து கொடுங்க என்றார் ஊர்பெருசு.

டேய் தம்பி..போடா போய் எடுத்துக்கொடு இன்னொரு பெருசு.

உருட்டி போடப்பட்ட சீட்டுகளில் லபக் ஒன்றை எடுத்து ஊர் பெருசிடம் நீட்டினான் சிறுவன்.

பிரித்து பார்த்த பெருசு கதிர்வேல் பாண்டியர் பையன் நடராஜனுக்கு சீட்டு உழுந்துறுகுப்பா..

அவர் வீட்டுலதான் முதமாடு அவுக்கனும் கன்னிப்பொங்கலுக்கு என்று கத்தினார்.

அவங்க வீட்டுல மாடே இல்லேங்க என்னங்க செய்யறது என்று கத்தினார் கூட்டத்தில் ஒருவர்.

வழக்கம் போல எலுமிச்சபழமோ இல்லாட்டி கோழியே காவு வாங்கிட்டு மத்தவீட்டுகளேந்து மாடு அவுத்துட்டு மந்தைக்கு வாங்கப்போ..

கூட்டம் முடிஞ்சுது எந்த சண்ட சச்சரவும் இல்லாம சந்தோசமா மாடு அவுத்துடுங்கப்போ என்றது பெருசு.

நீ வேறண்ண எங்கண்ண இங்க மாடு இருக்கு..அதெல்லாம் பாஞ்சு இருபதஞ்சு வருசத்துக்கு முன்னடிதான் எவ்வளோ மாடு எவ்வளோ சப்பரம் என்னத்த சொல்ல..

பொண்ணுங்க எவ்வளோ எட்டிபாக்கும் இப்பெல்லாம் எங்கண்ண என்று பெருமூச்சு விட்டார் பெருசு.

காலங்கள் மாறபாரம்பரியத்தின் சுவடுகளைதான் நாம் திரும்பி பார்க்கலாம்.

Friday, January 16, 2009

ரெண்டுவாட்டி தான் அடிச்சேன்

ஒத்த வயதுடைய சிறுவர் சிறுமியர்கள் குளத்தில் குளித்து கொண்டிருந்தார்கள்.

ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை வாரி இறைத்து விளையாடினார்கள். ஒரு சிறுவன் ஒரு சிறுமியின் மீது தொடர்ச்சியாக தண்ணீரை வாரி இறைத்தான்.

இறக்காதேடா..

திரும்பவும் தொடர்ந்தான் சிறுவன்.

கம்மனாட்டி ..சொல்லறத கேளுடா..

மீண்டும் வேகமாக இறைத்தான் சிறுவன்.

கம்மனாட்டி.. தேவடியா பெத்த மவனே .. சொல்லிட்டே இருக்கேன் ப்ளார்..பட்.. என்னடா என்று அடித்தாள் .

ஏன்டி தம்பியஅடிச்ச.. சிறுவனுடைய அண்ணன்.

ஏன் எம்மேல தண்ணிய அடிச்சிட்டே இருத்தான். அதான்..என்றாள் சிறுமி

நான் ரெண்டுவாட்டி தான் அடிச்சேன் அழுதப்படியே சிறுவன்.

வாதங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன. தேவடியா பெத்த மவனே என்பதற்கான அர்த்தம் அந்த சிறுமி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சிறுவர் சிறுமியர் அத்தனைபேரும் சேரி பகுதியில் வாழ்பவர்கள். பழகும் சூழல் பொறுத்தே வெளிவரும் வார்த்தைகளும் பழக்கவழக்கங்களும்.

Thursday, January 15, 2009

வளர்ந்து அழியும்

விரிந்திருக்கும்
பிரபஞ்சம்
தோன்றும் உலகம்
அழியும் உலகம்
எல்லைகளுக்கு
உட்பட்டு
எல்லைகளுக்கு
உட்படாமல்
இடைவிடா மாறும்
இயக்கம்
தோன்றிய உயிர்
வாழும் தேவை
உருவம்
உருவ மாறுபாடு
உணவு தேவை
செயல்
செயல் மாறுபாடு
மாறி கொண்டிருக்கும்
இயக்கம்
அழிவு
தோற்றம்
வளரும்
வளர்ந்து அழியும்.

சொல்ல போறியா இல்லையா..

புடிக்குதா .. புடிக்கலையா .. சொல்லு

ஊகும்…

கேட்டுகிட்டே இருக்கேன்ல.. சொல்ல போறியா இல்லையா..

என்னது..

என்ன மடப்பய நெனைச்சுட்டிருக்கியா.. நீ

அதெல்லாம் ஒண்ணும் கெடயாது.

அப்புறம் என்ன நல்லதோ..கெட்டதோ.. உடனே சொல்லிட வேண்டியதானே..

இல்ல உங்க மனசு வருந்த படுமேன்னு..

இவ்வளோ நாழி உன்னுட்ட கேட்டுகிட்ட இருக்கேன் பாரு ..அது மட்டும்

இல்ல அது வந்து..

எது போயி ..எது வந்து..

தேவைபட்டப்ப உடனே பேச கத்துக்க..தேவைபடும் போது பேசமா இருந்தீன்னா உனக்குதான் சங்கடம் .

Tuesday, January 13, 2009

பொம்பள ஆடுன குடும்பம்

பொம்பள குடும்பத்துல அகம்பாவம ஆடக்கூடாது. அந்த குடும்பம் அதோ கதி தான்.

ஏன் ஆம்பள அகம்பாவம ஆடுனா குடும்பம் உருப்புட்டுறுமா..

எடி அதுக்கு சொல்லவல்லடி..

ஆம்பளய அன்பால அடக்குற குணம் பொம்பளக்தான்.
அதான் சொல்றேன் பொம்பள அன்பா இருந்தா எப்பேர்பட்ட ஆம்பளய திருத்துத்திபுடலான்டி..

பொம்பள ஆடுன குடும்பம் அத்தனையும் அவுட் தான்டி..

எவ்வலோ பொம்பள அன்பா இருந்தும் சரியில்லாத ஆம்பள ய என்ன சொல்லவர்றீயோ..

அதெல்லாம் கணக்குல சேத்துக்கபுடாது.

Sunday, January 11, 2009

நம்பிக்கை தோன்றுவதில்லை தோற்றுவிக்கப்படுகின்றன.

கோயிலுக்கு போவல..

போ மாட்டியா..

எப்பா..அங்க ஒரு சாமி..அங்க ஒரு சாமி..

அந்த சாமி இருக்கலப்பா..கும்புட்டியா..

கும்புடலயா..

கும்புடலேன்னா என்னடா தம்பி பண்ணும்.

யான முட்டும்..

எப்ப..எப்பா யான முட்ட போவுதே..

உன்ன..என்ன யான முட்டாதே..

நா கும்புட்டேன் அந்தசாமி..

கல்லு பாம்பு இருக்குல்ல அது கொத்திபுடும்.

கல்லு பாம்புன்னா ..

கல்லுல இப்படி போவுல்ல அந்த பாம்புதான்.

இரண்டரை வயது பையன் தன்னுடைய அப்பாவிடம் நிகழ்த்திய உரையாடல்.
நம்பிக்கை தோன்றுவதில்லை தோற்றுவிக்கப்படுகின்றன.

Saturday, January 10, 2009

சுவாசத்தின் முடிவைநோக்கி .......

வலைச்சுவர்களால்
குறுக்கபட்டு
மீனவர்களால்
பிடிக்கப்பட்ட மீன்கள்

மீனவனின் கூண்டுக்குள்
இங்கும் அங்கும்
அங்கும் இங்குமாய்
துள்ளியபடி

நீந்தியது
தண்ணீர் இல்லை

வாய் திறந்து
வாய் மூடி
செவுல் திறந்து
செவுல் மூடி
நீந்தியது
தண்ணீர் இல்லை

நீந்துவது
மீனின் இயல்பு
துள்ளலாய்
கூண்டுக்குள்
சுவாசத்தின்
முடிவை நோக்கி
நீந்திய மீன்கள்

Friday, January 09, 2009

செய்ய வேண்டியத கரெக்டா செஞ்சுபுடனுங்க....

என்ன நெல்லுங்க இது…

கோ43.

டயத்தோட மருந்து அடிச்சியலா..

அதெல்லாம் போட்டாச்சுங்க..

எதயுமே அந்த நேரத்தோட செஞ்சா தான். வருது வரல அதபாக்கபுடாது.

அதுக்கு செய்ய வேண்டியத கரெக்டா செஞ்சுபுடனுங்க

கரெக்டா செஞ்சும் கெடக்க வேண்டியது கெடக்காம போயிருதே என்ன செய்ய..

அதெல்லாம் இருக்கத்தான் செய்யும் விசனப்படாம ஏத்துக்க வேண்டியதான்.

அதவெச்சு கணக்குபோடறதால ஏமாத்தம் அதிகமா போயிருது .

உழைச்ச உழப்பு வீணா போவது. வந்துரும் மனச உடாம இருக்கனும். ஏத்தம் வந்தா என்ன ஏமாத்தம் வந்தா என்னன்னு இருங்க.

இதான் பயிரு நல்லாருக்கே..அப்புறம் என்ன கவல..

கவல ஒண்ணும் கெடயாது வர்றேங்க..

வாங்க..வாங்க..

Thursday, January 08, 2009

பெரிய படிப்பும் பலகார கடையும்.

பெரிய படிப்பு படித்து கொண்டிருக்கும் மாணவிகள். தன்னுடன் ஒன்றாக படிக்கும் மாணவியின் வீட்டிற்க்கு வருகை தருகிறார்கள்.

வருகை தருகிறவர்கள் வெறுங்கையுடன் வந்தால் நன்றாக இருக்காது என்ற விருதோம்பல் விதிக்கு ஏற்ப இனிப்பு வாங்க பலகார கடையை நோக்கி செல்கிறார்கள்.

அந்த சமயம் வேலைக்கார பையன் கடையை கவனித்து கொண்டிருந்தான். அவனுக்கு கிலோ கணக்கு தெரியும் கேஜ் கணக்கு தெரியாது.

மாணவிகள் குழு அங்கு சென்று சாங்கிரியை காட்டி ஒன் கேஜ் எவ்வளவு? என்று கேட்க

என்னதுங்க…

ஒன் கேஜ் ஸ்வீட் எவ்வளவு?

வேலைக்கார பையன் ஓரளவு அனுமானித்து நாம தமிழ்யே சொல்வோம் என்று நினைத்து

ஒரு கிலோ எழுவது ரூபா என்றான்.

ஆப் கேஜ் கொடுங்க என்று இனிப்பை வாங்கி சென்றார்கள்.

ஏண்ண இங்கலீஸ் பேசி கிட்டே இருங்காங்க..அப்பதான் அவங்க படிக்கிறாங்கனுட்டு நமக்கு தெரியுமா என்று கேட்டான்.

அவங்க பேசிட்டு போவட்டும் ஆனா எங்கிட்ட வந்து தமிழ்ல கேக்காலமுல்ல என்றான்.

Wednesday, January 07, 2009

டேய்..அங்க பாருடா …

மார்கழி குளிர் அதிகாலை 5.15 தன்னுடைய ஆடைகளை அவிழத்து நிர்வாணமாய் குளிக்கதயாராகும் சிறுவர்கள்.


தெளிவான வானம் ஒளிரும் விண்மீன்கள். வானத்தில்நகரும் ஓர் ஒளிப்புள்ளியை காட்டி..

டேய்..அங்க பாருடா நட்சத்திரம் நவுருது பாருங்கடா என்று தன் சகாக்களை நோக்கி கத்தும் சிறுவன்.

எலா .. நட்சத்திரம் இல்லடா அது.

நட்சத்திரம் நவுராதுல்லடா..

உனக்கு இப்ப ஒண்ணும் தெரியாதுடா..அடுத்த வருசம் என்னன்னு தெரியுண்டா..

ஏன்?

நீ இப்ப அஞ்சாவது தான படிக்கிற ஆறாவது வந்தப்பறம் தெரியுண்டா..

அப்ப என்ன இது ?

ராக்கெட்டு..

என்னது ராக்கெட்டா..

துண்டு கட்டியிருந்த ஒரு பையன்
தம்பியலா இது ராக்கெட் கிடையாது , நட்சத்திரமும் கிடையாது.

சாட்டிலைட்டுடா..

சாட்டிலைட்டுன்னா .. என்றான் ஒரு நிர்வாண சிறுவன்.

சாட்டிலைட்டுன்னா..சாட்டிலைட்தான் சொன்னது துண்டு

எலா அது எதா இருந்தா என்ன.. வாங்கடா குளிக்க போவோம்.

Tuesday, January 06, 2009

அன்புள்ள காதலா அன்புடன்...3

ஒருமுறை
அவன்முகம் நோக்க
உற்று பார்க்கும்
அவன் விழிகளின்
மலர்ச்சி
தலை சாய்க்க
சொல்லும் என்மனது
மறுமுறை பார்க்கும்
எனது விழிகள்
புன்னகைக்கும்
அவனது முகம்
என்னில்
அவன் சிரிப்பு
அவன் பேச்சு
சொந்தம் கொள்ள
முயல்கிறேன்
கையசைக்கிறேன்
விலகுகிறான்
வேதனையான
என் இதயத்தில்
அவன் விழிகளின்
மலர்ச்சி மட்டும்
மகிழ்ச்சியாய்
நினைவுகளோடு..

Monday, January 05, 2009

தப்பு எது? ரைட் எது?

“பணத்தை தவறான வழியில் தேடுவது மிகப்பெரிய குற்றம்”

நாட்காட்டி வாசகம்.

பணம் இல்லேன்னா யாரு மதிக்கிறா …

வரும் வழி எந்த வழியா இருந்தா என்ன ?

தப்பு எது? ரைட் எது?

பணம் இருந்தா வாங்க..வாங்க..

பணம் இல்லாட்டினா ஊகும் மரியாதை.

இப்ப சொல்லுங்க தவறான வழி என்பது என்ன?

Sunday, January 04, 2009

தல பசி வயித்து பசி காமப்பசி

சுத்தமான தண்ணிய குடிங்கண்ண.. உடம்புக்கு கேடு.

ஆமாண்ண நீங்க வேற கடையில வாங்கி குடிக்கற தண்ணி மட்டும் கேடு கெடயாத..

உண்மதாண்ண ….

தல பசி வயித்து பசி காமப்பசி இந்த முனும் அளவோடு இருக்கனும் இல்லாட்டி சிக்கல் தான்

நான் சொல்லறத சொல்லிட்டேன் அதக்கப்பறம் உங்கவிருப்பம்.

ஒண்ணும் புரியலேண்ண..

யோசிங்க புரியும்.

Saturday, January 03, 2009

இலட்ச தீபம்

இந்தா போட்டுருக்கு பாருடி ..

டோக்கன் இலவசம் போர்டு..

வாடி.. வாடி .. இந்த வழியாதான் போவணும்.

சீக்கரம் வாடி..

இலவச டோக்கன் வாங்க விரைவாய் நடந்த பெண்கள்.

சார் .. டோக்கன் வேணுமா.. டோக்கன்..

மடிப்பு களையா உடையுடன்தம்பதி எவ்வளவு?

எதாச்சும் செலவுக்கு கொடுத்துட்டு போ சார்..

கைமாறும் பணமும் டோக்கனும்.

இந்தம்மா .. நான் கோயிலு ஸ்டாபு.. இவங்க தெரிஞ்சவங்க..பத்து விளக்கு ஏத்தணும்.

இல்ல சார் .. மூனு விளக்குதான் அலவுடு சார்.

நான் கோயில் ஸ்டாப் சொல்லேறேன்..அஞ்சு விளக்காவது ஏத்தணும் இவங்க..

சார் அதட்டாத.. நானும் கோயிலு ஸ்டாபுதான்.. இப்படி அதட்டற..

சரி..சரி ஏத்தவிடு இவங்கள..

போம்மா..போம்மா .. நிக்காத ..நிக்காத

போ..போயிட்டே இரு.. பிரசாதம் வாங்கிட்டு சாமி பாத்தவங்க போங்க..

இந்த சாமி. .

கைமாறும் இருபது ரூபா நோட்டு..

இந்தாங்கோ …விபூதி பொட்டலம் பூ ஒரு எலுமிச்சை பழம்.

வர்றேன் சாமி.. வாங்க..

என்னங்க விசேசம் கோயில்ல..

என்னமோ லட்ச தீபம் ஏத்துறாங்க..

எதுக்குங்க...

தெரியலிங்க..நீங்க எதுக்கு வந்தீங்க..

எல்லா வந்தாங்க ..நானும் வந்தேங்க..

அப்ப சரிங்க.

Thursday, January 01, 2009

பணம் இல்ல என்ன செய்ய..

பத்து லட்சம் பணம் சிங்கையில் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு வீட்டுக்கு அனுப்புனாருங்க அண்ணன். தம்பிக்கு கொஞ்சம் கதயும் கவிதயும் தெரியுமுங்க

அதனாலயே இவரோட நண்பரு வட்டதுல இவரு கவித நல்ல எழுதுவாரு கதயும் எழுதுவாரு பேரு.

தம்பிகாருக்கு மனசுல கனவெல்லாம் வர ஆரம்பிச்சாச்சு தன்ன நம்பலங்க தன்னோட எழுத்த நம்பினாரு .

நம்புனவருக்கு பட்டு கம்பள விரிச்சி வரவேற்பு நடத்துனுச்சு சினிமா.

அண்ணன் கஷ்டப்பட்டு எல்லாத்தையும் கட் பண்ணி நம்பிக்கையோட பணம் அனுப்புனாரு சிங்கையிலிருந்து பணம் வரவர தம்பிகாரு இந்த பணத்த ஜீட் விட்டார்.

அவரும் செட்டில் ஆகலங்க.

அண்ணன் வந்தாரு கதயெல்லாம் தெரிஞ்சுது. சரிபட்டு வராதுன்னுட்டு கல்யாணம் பண்ணிகிட்டு லோக்கல் போய் வேலக்கு சேந்தாரு.

தம்பிகாருக்கு பணம் இல்ல என்ன செய்ய.. பிரிடா சொத்தன்னு பிரிஞ்சாங்க.

அப்பிடியும் தம்பிகாரு சுதாரிக்காம தன்னோட பங்க காலி பண்ணிட்டார்.

பத்தல பசி ..அண்ணன் பங்க வெல பேசினார்.

எதையும் முறையா பதியல ..கிராமத்துல எல்லா வாக்கு தாங்க என்ன செய்ய..

அண்ணன் வந்து சண்ட போட்டாரு ..

பேசுனவங்க எதாச்சும் குடுத்துட்டு போப்பான்னு சொல்ல..

சண்டயோட ஊ ருக்கு போய் கல்யாணம் பண்ண பொண்டாட்டி சின்ன புள்ளங்கள விட்டுட்டு தூக்கு மாட்டிட்டாரு.

சாதாரணமா எழுதிட்ட இந்த வாழ்க்கையில் அண்ணனுடைய மனப்போராட்டம் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியா மிகப்பெரிய சோகங்கள்.

பசிதிருந்த நாய் தப்பிய புறா

சிறகுகள் முழுவதுமாய் வளர்ச்சியடைந்து பறக்க கற்றுக்கொண்டிருந்த புறா. கொஞ்சம் பறப்பது மரக்கிளையில் அமர்வது பறப்பதுமாக இருந்தது.

அண்டங்காக்கை ஒன்று இந்த புறாவை பார்த்தப்படி அமர்ந்து இருந்தது. புறாவின் பலவீனம் தெரிந்து துரத்தியது அண்டங்காக்கை அதனிடமிருந்து தப்பித்து வேறொரு மரக்கிளையில் அமர்ந்தது. முழுமையாக பறக்க கற்றுக்கொள்ளததால் திரும்பவும் அண்டங்காக்கையின் இலக்கானது.

இம்முறை புறா மரக்கிளையில்அமராமல் தரையில் பறந்து இறங்கியது.

இன்னொரு சோதனை தாயாராக இருந்தது. கற்றுக்கொள்ளும் வரையில் சோதனைதான் போலும் தரையில் அமர்ந்து உடனேயே ஒரு மூன்று கால் நாயின் இலக்கானது புறா. ஒரு கால் ஊனம் அந்த நாய்க்கு, அதனால் வெளியில் அதிகம் செல்லாமல் கிடைப்பதை உண்டு வாழ்ந்தது.

புறா எங்கு அமர்ந்ததோ அதற்கு மிக அருகில் தான் நாயின் இருப்பிடம் குபீர் என்று ஒரு பாய்ச்சல்….

பட..பட வென்று சிறகுகளை அசைத்தப்படி கண்இமைக்கும் நேரத்தில் தப்பித்து உயரே பறந்ததுபுறா.

நாய் பசிதிருந்தது


இந்நிலப்பரப்பில வாழ விருப்பட்டால் சோதனை களை சந்தித்தால்தான் வாழமுடியும்

LinkWithin

Related Posts with Thumbnails