Sunday, June 22, 2008

வெறுப்பு

மாற்றங்கள் இல்லா
செயல்
விருப்பமின்மை வெறுப்பு .

Saturday, June 21, 2008

கருத்துமோதல்கள்

என்னுடைய கருத்துக்கள் யாவும் உன்னுடைய பார்வைகளுக்கு எதிரானதாக அமைந்துவிட்ட காரணத்தினால் உன்னுடைய சுயம் காயம்பட்டதால் என்மீது உன்கோபம்.

நீ போட்டிருந்த திட்டங்கள் அதை நிறைவேற்றுவதற்காக நீ போட்ட வேடங்கள், வேடங்கள் புனைந்து கொண்டு நீ செய்த செயல்கள் யாவும் தவறாக அமைந்துவிடுமோ என்ற பயம் காரணமாக என்மீது உன்கோபம்.

நீ செய்த செயல்கள் தகுந்தகலங்கள் வந்தவுடன் வெளிப்படும் விளைவுகளை எடுத்துரைக்க உன்னுடைய எதிபார்புகளுக்கு எதிராக அமைந்ததால் என்மீது உன்கோபம்.

நீ செய்யும் செயல் உன்னுடைய பார்வையில் மிகவும் சரியான ஒன்றாக தெரிய என்னுடைய பார்வை என்பது உன் நலனில் அக்கறை எடுத்து சொல்லப்பட்டது என என் மனதுக்கு தெரியும், உனக்கு தெரியுமா ?

சொல்கின்றபொழுது எல்லாம் உனக்கு தவறாக தோன்றலாம், எதிரானதாக தோன்றலாம் எதிர் எதிர் கருத்து மோதல்களின் விளைவாகத்தான் ஓர் செயலின் முடிவாக மற்றொரு செயலின் தொடக்கமாக அமைகிறது.

சங்கிலி தொடர் என ஓர் செயலின் விளைவுகள் பல செயல்களாக விரிந்து நிற்க இது உன்னுடைய வாழ்க்கை என்பது உனக்கு தெரியுமா ?

கருத்துமோதல்கள் தொடர்நிகழ்வாக அமைதுவிடுகையில் ஓர் செயல் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் உட்படுமா அல்லது சரியான பலனை தருமா என்பது அச்சத்திற்குரியதே. சரியான நேரத்தில் சரியான அளவில் ஏற்படும் கருத்துமோதல்கள் சரியான விளைவுகளை தரும் என்பதையும் மறந்துவிடலாகாது.

கருத்துமோதல்கள் வாழ்வின் அவசியமாக நம்முடைய கருத்துமோதல்கள் இயல்பனவையே.

என்மீது உன்கோபமும் நியாமானதே.

(தொடர்வோம்)







Saturday, June 14, 2008

சர்வாதிகாரம்

சுய விருப்பு வெறுப்பு
ஆளுமை
சர்வாதிகாரம் .

Thursday, June 12, 2008

புகைப்பட தொகுப்பு III

சிந்தனை

மலர்வது எப்பொழுது ?
நிழல் தேவை




Saturday, June 07, 2008

கோபம் கொண்டிரு

என் மீது கோபம் ...

ஏன் இந்த கோபம் ? கோபத்திற்கான காரணம் நான் உன் வழியில் வந்துவிட்டதனாலா அல்லது உன்னுடைய வாழ்வதற்கான ஆதாரங்களை அழித்துவிட்ட காரணத்தினாலா ?

உன் வழியில் வந்ததற்காக என் மீது கோபம் என்றால் அது எந்தவகையில் சரியான செயலாக இருக்கமுடியும். வாழ்க்கையின் பயனப்பாதைகளில் யார் யார் பாதையில் வேண்டுமானாலும் வரவேண்டிய நிர்பந்தங்கள் உண்டு.

உன் பாதையில் என் பயணமோ அல்லது உன்னோடு சேர்ந்த என் பயணமோ மிக மிக குறுகிய காலநிகழ்வே மேலும் இயல்பான ஒன்றே.

உன்னுடைய வாழ்க்கைக்கான ஆதாரங்களை அழிக்க முற்படும்போது அல்லது ஆதாரங்கள் தொடர்ச்சியாக கிடைக்கசெய்யாது தடுக்க முற்படும்போது என் மீதான உன்னுடைய கோபம் என்பது ஏற்றுகொள்ளபட வேண்டியதே.

மிக நிச்சயமாக நீ கோபம் கொண்டிருக்க வேண்டும். கோபம் இல்லையேல் நீ நான் உயிர் வாழும் தகுதி இந்த உலகில் நமக்கு குறைவே.

அளவுக்கு மீறிய கோபம், அடிக்கடி நாம் படும் கோபம் பற்றி சிந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஆனாலும் நாம் கோபம் கொண்டிருக்க வேண்டும்.

உயிர் வாழும் தகுதிக்காக மட்டுமே கோபம் கொண்டிருப்போம்.

(தொடர்வோம்)

Friday, June 06, 2008

சாந்தம்

சலனமில்லா
எதிர்க்கொள்ளல்
சாந்தம் .

Wednesday, June 04, 2008

ஓயாத எண்ணங்கள்

உற்று பார்க்கிறேன்
தொடர்புடையவற்றை
தொடர்பு செய்து
எண்ணங்களின்
பின்னால் செல்கிறேன்
பிரித்து அறியமுற்பட
அறியாது தோற்கும்
நிகழ்வாய் என்னுள்
விழிக்கிறேன்
இமைக்கும் நேரம்
தோற்கிறேன்
ஓயாது என்னுள்
எல்லா காலங்களையும்
நிகழ்ந்து
நிகழ்வது
நிகழ போவது
என
திரும்பவும் திரும்பவும்
எண்ணங்களால் இழுக்கப்பட்டு
எரிந்து சாம்பாலாகிறேன்
திரும்பவும்
உயிர்த்து எழுகிறேன்.

Tuesday, June 03, 2008

ஆணவம்

என்னால் மட்டுமே
முடியும்
எண்ணம் ஆணவம் .

அதிகாரம்

சரியாய் அறிந்து
வழிநடத்தும் தகுதி
அதிகாரம்.

Monday, June 02, 2008

பேராசை

தேவை முடிவு
எல்லாம் எனக்கு
பேராசை .

ஆசை

தேவை
கைக்கொள்ளும் எண்ணம்
ஆசை

கோபம்

எதிர்பார்ப்பு ஏமாற்றம்
சகிப்புதன்மை முடிவு
கோபம் .

Sunday, June 01, 2008

காமம்

காதல் நெகிழ்வு
உணர்ச்சி
காமம் .

LinkWithin

Related Posts with Thumbnails