Monday, April 19, 2010

என்னுடைய பெண் அல்ல அவள்

அன்று காலை வழக்கம் போலவே கல்லுாரி கிளம்பி சென்றாள் அந்த பெண். தன் ஊருக்கு அருகில உள்ள கல்லூரியில் எம். எஸ்சி  இறுதியாண்டு படித்து கொண்டிருந்தாள்.

கல்லூரி நாட்கள் முடிந்துவிட்டன.  அவளது அப்பா அரசாங்க  சம்பளம். தன்னுடைய பெண்களை மேற்படிப்பு வரை படிக்கவைத்து மூத்த பெண்ணுக்குசமீபத்தில் தான் திருமணம் செய்து வைத்தார்.  தானுன்டு தன் வேலையுண்டு என்று இருந்தவர்.

மௌனத்தின்  மதிப்பை யார் அறிதலும் கொஞ்சம் கடினம் . அந்த பெண் கல்லூரி போவதும் தெரியாது வருவதும் தெரியாது. மௌனமாய் அமைதியாய் அவளுடைய நடவடிக்கைகள்.
சரியாக ஐந்து மணிக்கெல்லாம்  வந்துவிடுவாள் அன்று வர தாமதமானது .

வீட்டில் அவளுடன் செல்பவர்களை விசாரிக்க ஆரம்பிக்க பெண் ஓடிவிட்டாள் என்று தெரிந்தது.  தகுதியான பையனா  என்றெல்லாம் தெரியவில்லை அவர்களுக்கு யாரோ  டிரைவர் என்றார்கள்.

சொந்தமும் சுற்றமும் கூடியது.   விசாரித்த வகையில் அவர்கள் வீட்டிற்கு எதிர்வீட்டில் வசிப்பவர்களின் உறவு கார பையனாம் அவன்   என்று சொல்லப்பட காவல் நிலையத்தில்  புகார் செய்தார்கள்.

இரண்டு நாளில் பிடித்து கொண்டுவரப்பட்டார்கள். இனி என்னபயன்?  எனக்கு பெண் அல்ல  என்று   எழுதி கொடுக்கமாறு காவல் நிலையத்தில் இவர்பணிய பெண்ணை பெற்றவருக்கு  பெண்ணால்  எழுதி கொடுக்கப்பட்டது.

பெண் வீட்டார் இரண்டு நாட்களாய் பட்டபாடு அவர்களுக்கு தெரிந்த ஒன்று. பலவிதமான பேச்சு வெளியில்  பலவிதமான அனுமானங்கள் எழும்பியது.

பெண்ணை பெற்றவர்களுக்கு ஏன் இந்த மனகஷ்டம். தன்னுடைய மூத்த பெண்ணை நல்லஇடத்தில் திருமணம் செய்வித்தார்கள்.  வசதிக்கு குறைவு கிடையாது.  அப்புறம் ஏன் ?

அந்த பெண்  ஏன் இவ்வாறு? கேள்விகள்  எழும்ப விடைகள் எங்கே? அவர் அவர்களின் மனதிற்கு தெரியும். வாழ்க்கை வட்டம் தான் இந்த பெண்ணிற்கு  அமைந்த வாழ்க்கை என்ன சொல்லி தரப்போகிறதோ ?

வாடிய முகமாய்  தாடியுடன் யாருடனும் நின்று பேசவே அச்சப்பட்டவராய் பெண்ணுடைய அப்பா.

2 comments:

ரவி said...

ஏன் சார் ?

அந்த பெண் செய்தது தவறு என்று சொல்லுகிறீர்களா என்ன ?

ஆசைப்பட்டவனோடு அவளது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள அவள் தகுதியற்றவளா ?

சங்க காலத்தில் இன்றைய நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்ற கான்ஸெப்டே இல்லையே ? களவியல் என்றால் என்ன ?

அம்பலும் அலரும் என்றால் என்ன ?

சமூதாய பொதுப்புத்தி ? Nevermind.

http://thavaru.blogspot.com/ said...

திரு.செந்தழல் அவர்கட்கு

அந்த பெண் செய்தது தவறு இல்லை.

ஆசைப்பட்டவனோடு வாழ்க்கை அமைத்து கொள்வதில் தவறில்லை. ஆசைப்பட்டவன் எப்படியாகபட்டவன் என்பது முக்கியம்.

சங்ககால மனிதர்களின் மனப்போக்கு இன்று காண்பது அரிது. சமுதாய மாற்றங்களை வைத்தே மனித மனம் மாறுபாடு அடைகிறது. இன்றைய சமுதாயத்தின் போக்கு...?

LinkWithin

Related Posts with Thumbnails