Saturday, January 16, 2010

இவர்களுக்கு பூசைகள் தேவையில்லை




















காலையிலிருந்து தினமும் பலபோ் வந்து குளித்துபோகும் கரையை சுத்தம்செய்ய ஆரம்பித்தான்.

குளிக்க வரும்போது ஆண்களும் பெண்களும் தூக்கியெறியும் துணிகள் கரை முழுக்க பரவி கிடந்தது.

சிறு சிறு முட்செடிகள் வளர்ந்து கிடந்தன. மாட்டின் கழிவுகளும் மனித கழிவுகளும் ஆங்காங்கு கிடக்ககுளிக்க வருபவர்கள் ஒதுங்கிபோய் குளித்து விட்டு போனார்கள்.

கரையின் சுத்தம் முக்கியம் கிடையாது தன் வேலை முடிந்தால் போதும் என்று கரையின் சுத்தத்தில் அக்கறை காட்டாது சென்றவர்கள் அதிகம். சில சேர்ந்து பேசினார்கள் கவலைப்பட்டார்கள் செய்யவில்லை சென்றார்கள். செய்யகூடிய மனசு உள்ளவர்கள் சிலநபர்களுக்கு சொந்த வேலைபளு காரணமாக செய்யமுடியாமல் போனது.

இவர்களுக்குள் தனி ஒரு ஆளாக நின்று அந்த கரையை சுத்தம் செய்தான் . மெல்லிய உடல்வாகு கலைந்த முடிகள் தன்னை பற்றிய கவலை என்பது இல்லாது வீட்டு வேலையாக இருந்தாலும் சரி வயல் வேலை யாக இருந்தாலும் சரி அந்த வேலை முடியும் வரை அந்த வேலையில் அவனுடைய உழைப்பு அவனை ஒரு பைத்தியகாரனாக உலகத்திற்கு காட்டியது. அவன் பெயர் கார்த்தி என்கிற கார்த்திகேயன்.

யாருடனும் அவனுடைய பேச்சு மிக அரிது. குறிப்பிட்ட சிலபேரிடம் மட்டுமே அவனது பேச்சு. வேலையில் காட்டும் அவனுடைய ஈடுப்பாட்டில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

உழைப்பால் அவன் பொருளாதாரத்தில் உயர்ந்து விடவில்லை பத்து மனிதர்களுக்கு மத்தியில் தன்னை

காசினால் பெருமைப்படுத்தி கொள்ளும் அவசியமும் இல்லாமல் இருந்தது.

குடும்பமாக இருந்தாலும் சரி தான் வாழ்ந்த சுற்றுபுறமாக இருந்தாலும் சரி அவனால் முடிந்தவரை பத்து பேருக்கு பயன்பட கூடிய வகையிலே வாழ்கிறான்.

தன் வேலை முடிந்தால் போதும் யார் எப்படி இருந்தால் என்று செல்லும் மனிதர்களுக்கு மத்தியில் அவன் மௌனமாய்வாழும் மனித தெய்வம் தான்.

இவர்களுக்கு பூசைகள் தேவையில்லை புகழ் தேவையில்லை .

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails