Wednesday, June 10, 2009

அவர் வேலைக்கு செல்லவில்லையென்றால்

அவர்காலை ஐந்து மணிக்கு வேலைக்கு சென்றால் பெரும்பாலும் வீடு திரும்ப இரவு பதினொன்றை ஆகிவிடும். திரும்பவும் காலை ஐந்து மணிக்கு செல்ல வேண்டுமென்றால் காலை நான்கு மணிக்கே கிளம்பவேண்டும்.

பிள்ளைகள் நிறைந்த குடும்பம் சொற்ப ஊதியம். இடைப்பட்ட அத்துனை நிர்வாகமும் அவருடை பொண்டாட்டி கையில் தான். வீட்டினுடைய அத்திவாசிய பொருட்களிலிருந்து மற்ற நல்லது கெட்டது அனைத்தையும் சமாளிக்க வேண்டும்.

அன்றைய தினம் அவர் வேலைக்கு செல்லவில்லையென்றால் மறுநாள் வீட்டினுடைய தேவைகள் நிறைவேற்றம் மிகவும் கஷ்டம். அதனால் எதைப்பற்றியும் கவலைபடாது வேலைக்கு சென்றுவிடுவார்.

இரவு வீடு திரும்பியவுடன் இரவு சாப்பாட்டிற்காக முகம் கால் கை அலம்பி உட்காருவார். சாப்பாட்டை கொண்டு வந்து வைப்பார்கள் நாலு உருண்டை உள்ளே போயிருக்கும் அவர் மனைவி

ஏங்க..நாளக்கு அரிசி வாங்கியாகனும். நடுவலுவன் நோட்புக் கேட்டுகிட்டே இருக்கான்.

செய்வோம் முதலாளி கிட்ட கேட்டு இருக்கேன்.

அப்புறம் அந்த கல்யாண தேவை வருது அதுக்கு பட்டம் கட்டணும்.

செத்தநாலி சும்மா இருடீ ...

செய்ய வேண்டியத சொன்னா ஏங்க இப்படி

இப்ப நான் சாப்பிடனுமா ..வேண்டாங்கிறியா ..சொல்லு

அதற்கு பிறகுகனத்த மௌனம் நிலவும் இருவரிடமும் அப்படியே படுக்கை சென்று விடுவார்கள்.

சில நாட்கள் சண்டையும் நடக்கும்.

இதுவும் குடும்பம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails