Wednesday, June 24, 2009

நகர்வலம் புறப்பட தயாரானார் ராமர்

வானத்தின் நீலம் கலர் சாயம் முகத்தில் அடிக்கப்பட்டது. ரத்தசிவப்பு கலர் சாயம் உதடுகளில் பூசப்பட்டது. கலர் மணிகள் மாலைகள் சிறியதும் பெரியதுமாக கழுத்தில் மாட்டப்பட்டது. கலர் கலராய் மினுக்கும் ராஜா காலத்திய ஆடைகள் அணியப்பட்டது.
பட்டாபிஷேகம் கிடையாது கிரீடம் சூட்டப்பட்டது.

இதோ தயாராகிவிட்டார் இந்த யுகத்து ராமர். பாவம் ராமர் அரசராயிருந்தவர் இந்த யுகத்து ஆண்டியாகிவிட்டார்.

வீடு வீடாய் கடை கடையாய் ஏறி இறக்கினர். ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் அதிகபட்சம் ஐந்து ரூபாய் கிடைத்தது. காலையில் ஒன்பது மணிக்கு போட ஆரம்பித்த வேசம் கிட்டதட்ட ஒரு மணி நேரம்கழித்து பத்து மணிக்கு நகர்வலம் புறப்பட தயாரானார் ராமர் நான்கைந்து மணி நேரங்கள் செலவழித்து நகர்வலம் முடிக்க அசந்து போய் மர நிழலில் ஒதுங்கி வேசம் கலைத்தார் ராமர்.

சேர்ந்த சில்லரைகளை எண்ண ஆரம்பித்தார் வேசராமர். இருபதைந்து ரூபாய் கொண்ட சில்லரை குவியல்கள் இருந்தது. ஒன்று இரண்டு மூன்று என ஆறு குவியல்கள்
ஆகா ..இன்றைக்கு ராமன் போட்டபடி நூற்றைம்பது என்று தனக்குள் பேசியப்படிவேச ராமர் அடுத்த ஏரியா நகர்வலத்துக்கு புறப்பட தயாரானார்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails