Thursday, August 20, 2009

விசாரணையும் சாரூவும்


அமெரிக்க விமான நிலைய அதிகாரிகளால் வரம்புக்கு மீறிய கேள்விகள் கேட்கபட்டேன்.-சாரூக்கான்.

பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பெரிது படுத்தின. விசாரணை என்று வந்துவிட்டால் ராமன் என்ன சுப்பன் என்ன இல்லை சாரூக்கான் தான் என்ன ?

இங்கு மக்களால் அறியப்பட்ட மனிதர் நடிகர் அவ்வளவே , விமான நிலைய அதிகாரிகளை பொறுத்தவரையில் விமானத்திலிருந்து இறங்கிவரும் பயணி களுள் ஒருவர்.

சந்தேகம் அவர்களுக்கு சந்தேகத்தை தெளிய வைக்க வேண்டிய பொறுப்பு இவருடையது. மணி நேரம் ஆனால் என்ன நாட்கள் ஆனால் என்ன?

காசு இருந்தால் பத்து பேர் அறிந்திருந்தால் அவர் மனிதர் இல்லை மாமனிதர் ஆகி விடுவார் இது இந்தியர்களின் பொதுவான மனோபாவம். அதிலும் நான்கு பேர் சிரிக்க நான்கு பேர் அழ நான்கு பேரை சீ்ட்டின் நுனியில் உட்கார வைத்து சண்டை போட்ட நடிகர் இவர்.

இவரை போய் விசாரிக்கலாமா அமெரிக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரியாமல் போய்விட்டது.

இனி அமெரிக்க மண்ணையே மிதிக்க கூடாது என்று தான் நினைத்தேன் லட்சோப லட்சம் ரசிகர்களின் அன்பு என்னை திரும்பவும் இங்கு வர வைத்து விடும் போலிருக்கிறது என்ற பேட்டி வேறு.

இவர் போக வில்லையென்றால் அமெரிக்கா என்ன ஆகும்?

1 comment:

edmand said...

செலவில்லாமல் ரொம்ப சுலபமாக தனக்கு ஒரு நல்ல விளம்பரம் தேடிக் கொண்டார். சாதாரனமாக நடக்கும் ஒரு நடவடிக்கையை, அய்யோ அம்மா என்று கூச்சல் போட்டதன் மூலம் ரொம்ப கேவலமான முறையில் தனக்கு ஒரு அனுதாபத்தை தேடிக்கொண்டார் என்று தான் நான் நினைக்கிறேன்

LinkWithin

Related Posts with Thumbnails