Friday, March 05, 2010

வாரம் ஆயிரம்

அந்த நாடார் காவல் நிலையத்துக்கு அலையாய் அலைந்து கொண்டிருந்தார். கள் இறக்கி விக்க அனுமதி கேட்டு தான் இந்த அலைதல். கால்கள் நொந்தும் அனுமதி கிடைக்கவில்லை.

கோடை பிறக்கவும் தனது வீட்டை புதுப்பிப்பது அல்லது பிள்ளைகளுக்கு சடங்கு சுத்துவது தான் எண்ணம். அந்த எண்ணம் நிறைவேறதான் காவல் நிலையத்துக்குதினமும் நடந்தார்.

அரசியல் புள்ளிகள் சிலரை வைத்தும் அனுமதி கோரினார்.

எல்லாம் பேசினார்கள் வாரம் ஆயிரம் மாமூல் தனியாக கொடுத்துவிட வேண்டும் என்று நாடாரிடம் பேசப்பட்டது.

கலக்குற தண்ணியோட மாத்தரய போட்டு இன்னும் அஞ்சு லிட்டர் தண்ணி எச்சா ஊத்தினா இவங்க கேக்கற காச குடுத்துபுடலாம் என மனதில் நினைத்தவாறே

“தர்றேங்க” என்றார்.

இந்த கோடையில் ஏதாவது நல்ல செலவு பண்ணிவிடவேண்டும் என்ற திடம் தெரிந்தது.

யோவ் நாடாரே நாங்க அனுமதி கொடுக்கற பத்தி ஒண்ணும் இல்ல எல்லா ஸ்டேசன் அனுமதி கொடுதாங்கன்னு சொன்ன நீ செய்யலாம். இல்லாட்டினா...

அய்யா எப்ப வர்றேங்க...

இந்த பக்கமா வர்றப்ப ஏட்டு அய்யாவ பாத்துட்டு போய்யா..

சரிங்க..

அந்த மதுரவீரன் என்ன நினைச்சிருக்கோ தெரியல என்று நினைத்தாவாறே அவ்விடம் அகன்றநாடாருக்கு கோடைக் காலம் வறட்சியாகவும் தெரிந்தது வளமையாகவும் தெரிந்தது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails