Wednesday, August 18, 2010

ஐந்தாம் வகுப்பு சிறுவனுடன் நேர்காணல்

தம்பி அந்த  கோயில்ல  உக்காந்து இருக்கேன் வந்து பிக்கப் பண்ணிக்க என்று தன் நண்பனிடம் சொல்லிவிடைப்பெற்று அங்கிருக்கும் கோவில் கட்டையில் அமர்ந்தான்.

நண்பன் வரும் வரை பொழுது போக வேண்டுமே  என்று கைப்பேசியை  வைத்து நோண்ட ஆரம்பித்தான். இதை கவனித்து கொண்டிருந்த  மாடுமேய்த்து கொண்டிருந்த  சிறுவன் கொஞ்ச  கொஞ்சமாய் அவனை   நோக்கி முன்னேறினான்.

அவன்   சிறுவனை  நோக்கி  திரும்புகையில்   வாயெல்லாம் பல்லாக புன்னகை செய்தான்.

கைப்பேசியில்உள்ள  நிழற்படகருவியினால்  அவனை படம் பிடிக்க வெட்கமாய் சிரித்தான்.

அவன்   சிறுவனுடன் நேர்காணல் நடத்த ஆரம்பித்தான்.

எத்னாவது படிக்கிற…?

அஞ்சாவது.

எங்க ?

அதே அங்க  என்று பக்கத்திலிருக்கும் பள்ளியை காண்பித்தான்.

உம் பேரு ?

பிரவீன்.




டீச்சரா.. சாரா உனக்கு…

டீச்சரு..

எத்தன டீச்சரு  உம்பள்ளிகூடத்துல..

ஆங்..எங்க டீச்சரு பேரு லித்திகா.. இன்னொரு டீச்சரு..

இன்னொரு டீச்சரு பேரு..

தெரியாது.

100 ல்ல  99  போச்சுன்னா எவ்வளப்பா..

சில   நிமிடங்கள் மௌன    ம்.

என்னப்பா எவ்வளவு..

98            .. இது சிறுவன்.

என்னது 98 ....?  அப்ப 50 ல்ல 29  போச்சுன்னா..

 வினாடியும் தாமதிக்காது தெரியல  என்றான்.

சினிமா பாப்பியா ?

பாக்கமாட்டேன்.

எந்த நடிகர புடிக்கும்?

அர்சுன்.

நடிக ?

நடிகன்னா...

அதான் நடிகரோட  சேந்து ஆடுவாங்களே

சே..அதெல்லாம் புடிக்காது.

சாப்பாடு கட்டிட்டு போயிடுவியா...

பள்ளிகூடத்துல போடுவாங்க...

உனக்கு பத்துமா...

நான் நிறைய வாங்கிப்பேன்.

பள்ளிகூடத்துல    யூனிபார்ம்  உண்டா..

உண்டு நான் இன்னும் எடுக்கல..

ஏன்?

அப்பா வேல பாத்த  எடத்துல  காசு வல்லேன்னு சொன்னாங்க..

லீவு நாள்ல என்ன வௌ  டுவ..

கபடி..

யோவ் வாய்யா   என்று நண்பன்  கூப்பிட்டவுன்  சிறுவனிடம் விடைப்பெற்று பறந்தான்.

1 comment:

Ragavachari B said...

yentha koil adhu?
chinna pasanga kitta teacher peru ketta avan vetkapadran pola...

LinkWithin

Related Posts with Thumbnails