மரங்களில் ஏறி
இலைகளில் மறைந்து
காகங்களின் தாக்குதலுக்கு
தப்பித்த ஓனான்கள்
காகங்களின் பறத்தலுக்கு
ஓனான்களின் ஓட்டம்
பலவீனம்
இலைகளில் மறைந்து
தப்பித்த ஓனான்களின்
ஓட்டம் நிற்காமல்
இன்னொரு புதர் நோக்கி
சிறுசமவெளி கடக்க
உயிர் உண்டு சொல்லிய
ஓனானின் உள்அறிவு
ஓட்டமெடுத்த ஓனான்
நாற்கால்கள் பரப்பி
வேகமெடுக்கையில்
காந்திருந்த காகம்
பறந்து கொத்த...
இன்னும் வேகம்
உயிர் தேவை ஓட....
ஊமை வெயிலில்
காய்ந்த உடல்கள்.
1 comment:
நல்லாயிருக்குங்க
Post a Comment