Wednesday, January 05, 2011

மது மாணவர்களையும் அடிமையாக்கும்.


அவன்    அம்மா  பிள்ளை   . தனக்கு தெரியாதவர்கள் எதிரில் நின்றாலே  மௌ   ன ம்    தான் அவன் மொ  ழி.  .  விபரங்களுக்காக வினாக்கள் தொ டுத்தால் ஒரு சில  வார்த்தைகளில்  பதில்.

அ ந்த ஊ  ரில் பேர் வாங்கிய  ஆ ங்கிலபள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து கொ ண்டிருந்தான்.

இளமையின் துவக்கம் வெளிஉலகத் தொட ர்புகளுக்காய் வெளிவர அவன் வந்து சேர்ந்த இடம் குடியும் புகையும் உள்ள  நண் பர்கள் தான்.

வீட்டில் அவன் அமைதி பார்த்து  இவன்தான ய்யா பிள்ளை  என்று வியந்தவர்கள் உண்டு.

எப்பொழுதும் போல அன்றைக்கும் பள்ளி கிளம்பி நண் பர்களுடன் குடிக்க ஆ சைப்பட்டு மதுவை  தண்ணீர் குடிக்கும் பாட்டிலில் கொ ண்டு செல்ல   எப்படியோ  வகுப்பாசிரியை  தெரிந்து  பள்ளி முதுல்வருக்கு  விசயம் சொல்லப்பட்டது.

விசாரணை   யின் போ து கொ ஞ்சமும் பயம் கொ ள்ளாது டி.சி. கொடுங்கள் என்று மாண  வன் கேட்டது  பெற்றோ  ர்களுக்கு தெரிவிக்கப்பட ...

கெஞ்சிய  நிலை மையில் மன்னிப்பு கோ ரி பள்ளி முதல்வரிடம்  பத்தாம் வகுப்பு பொதுதேர்வு எழுதப்போகும் தன்னுடைய  பையனுக்காக நின்றுகொ  ண்டிருந்தார்கள்.

ஒரு சர்வே  முடிவு

இந்தியாவின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வசிக்கும் மாணவ-மாணவிகளில் சுமார் 45 சதவீதம் பேர் மது குடிப்பது “சர்வே” யில் தெரியவந்துள்ளது. இந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் பிளஸ்-2 படிப்பவர்கள் என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாகும்.

பிளஸ்-2 மாணவர்கள் எப்படி மதுவுக்கு அடிமை யானார்கள் என்பதற்கும் இந்த சர்வேயில் விடை கிடைத் துள்ளது. சமூக மாற்றங்களால் மாணவர்களிடம் ஏற்பட் டுள்ள அதிக பணப்புழக்கம், பெற்றோர்கள் கண்காணிப்பு குறைவது, படிப்பால் ஏற்படும் மன அழுத்தம், புதிய வகை கொண்டாட்டங்கள் போன்றவை மாணவர்களை குடிகாரர்கள் ஆக்கி விடுவதாக தெரியவந்துள்ளது.

15 முதல் 19 வயதுக்குள் தான் மாணவர்கள் குடிகாரர்களாக மனம் மாறுகிறார்களாம். பீர் மட்டும் குடிக்கலாம் தப்பு இல்லை என்ற தவறான வழிகாட்டுதல் மாணவர்களை மதுபான பழக்கத்தை உண் டாக்குகிறது.

என்ன காரணத்தை அடிப்படையாக வைத்து மாணவர்கள் மது குடிக்கி றார்கள் என்பதும் சர்வே மூலம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மன அழுத் தம் ஏற்பட்டு மனம் அப்செட்டாகும் போது மதுவை தேடிச் செல்வதாக 32 சதவீதம் இளைஞர்கள் கூறி உள்ளனர். தனிமை காரணமாக மது குடிப்பதாக 18 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

போர் அடிப்பதாக நினைத்தால் 15 சதவீதம் பேர் குடிக்கிறார்களாம். பிறந்த நாள் கொண்டாட்டம், புத்தாண்டு, கிறிஸ்துமஸ், காதலர் தினம் போன்ற சமயங்களில் மட்டும் மதுபானம் குடிப்பதாக 70 சதவீத இளைஞர்கள் கூறினார்கள்.

8 comments:

தமிழ் உதயம் said...

மதுவால் ஏற்படப்போகும் மிக பெரிய அனர்த்தங்கள், இனி வரும் ஆண்டுகளில் பெரும் பிரச்சனையாக எதிரொலிக்கும்.

Bibiliobibuli said...

விழிப்புணர்வை கொண்டுவரும் பதிவு.

இளையவர்களுக்கு சரியான வயதை காட்டும் ID காட்டினால் மட்டுமே இங்கே மது, சிகரெட் கடையில் வாங்கலாம். இதுக்காகவே பெரும்பாலும் தங்களை விட வயது கூடிய ஒருவரை தங்களோடு சேர்த்து வைத்திருப்பார்கள் மாணவர்கள்.

முதலில் இவர்களுக்கு மது கிடைப்பதற்குரிய வழிகளை தடை செய்யவேண்டும். அதுக்கு அரசு தான் ஆவன செய்யவேண்டும். ஆனால், இதெல்லாம் அரசுக்கு முக்கிய பிரச்சனையாக இருக்கும் என்றும் சொல்லமுடியாது?

கையேடு said...

அடேயப்பா.. பயங்கர வேகமா முன்னேறி வர்றோம் போல..

ஜோதிஜி said...

எனக்கு உண்மை தெரிஞ்சாகனும்? எப்டீ?

http://thavaru.blogspot.com/ said...

இந்த கவலை எனக்கும் உண்டு தமிழ்உதயம்.

http://thavaru.blogspot.com/ said...

"முதலில் இவர்களுக்கு மது கிடைப்பதற்குரிய வழிகளை தடை செய்யவேண்டும். அதுக்கு அரசு தான் ஆவன செய்யவேண்டும். ஆனால், இதெல்லாம் அரசுக்கு முக்கிய பிரச்சனையாக இருக்கும் என்றும் சொல்லமுடியாது?"

நிச்சயமாக ரதி.படிக்கும் மாணவர்களின் நிலைமை???

http://thavaru.blogspot.com/ said...

ஆமாங்க கையேடு இதுபோன்ற விசயங்களில் ஜெட்வேகம் தான்.

http://thavaru.blogspot.com/ said...

என்ன உண்மை அன்பின் ஜோதிஜி.

LinkWithin

Related Posts with Thumbnails