Friday, January 28, 2011

உணர்வுத்தீ


பசி பொ றுக்கா
குழந்தை
முகம் பார்க்கும்
மனைவி
தேவை களின்
பெருக்கம்
மீனாய் காசு
வலை  வீசி
மீன் பிடிக்க
சிறு படகில்
கடல் உ ள்ளே..
தரையில் தெரியும்
கோ டு
தண்ணீ ரில்
தெரியாது போக
அது
அ வ ர்கள் எல்லை யாம்
தோட்டாக்களை
துப்பிய துப்பாக்கி
அலை களினால்
இல வசமாய்
சவ ப்பயண  ம்
கரையோ ரம் ஒ துங்கிய
மீனவ னின் சவம்
கையலாகத  அ ரசின்
சாட்சி!!

இதோ இன்னொ ரு கை தமிழக மீனவர்களுக்காய் #TNFisherman


தமிழக  மீனவர்களுக்கு ஆதரவாய்  இ லங்கையின் இனவாதத்தை  எதிர்த்தும் என்னுடைய  கருத்துகளை    ட்வீட் செய்ய    கும்மி , ராஜன் மற்றும் செந்தழல் ரவி மூவ ரின் உழைப்பில் உருவான  ஆல்இன்ஆல்  வழி
#TNFisherman ட்விட்டரில் ஒரு உணர்வுத்தீ

 பதிவின் வழியாக உந்துதல் பெற்றுஏன் இப்படி…!  தெகாவின் ட்வீட் செய்யவது எப்படி என்பதை   நான் டிவிட்டின கதை: #tnfisherman         

பதிவின் மூலம் அ றிந்து  என்னுடைய  கருத்துகளை   பதிவு செய்ய   முதலில் கருத்துகள் வெளிவரவில்லை .


 மன சு சங்கடப்பட்டு  சிறிது நேர போராட்டத்திற்கு  பின் இ ணை   ந்தது.

என்கைகளும் இ ணை   ந்து விட்டது.

ஆ மாம்   நீங்கள்.....


தமிழக மீனவர்களைக் காப்பதற்காக ஒரு இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கான லிங்க் இது. 
http://www.savetnfisherman.org/ 


பேஸ்புக்கில் இருக்கும் ஒரு இணைப்பு
 http://www.facebook.com/pages/Save-Fishermen-from-Sri-Lankan-Navy/167109543335671


ட்விட்டரில் #tnfisherman தொடர்பான ட்விட்டுகளை காண
 http://twitter.com/#!/search?q=%23tnfisherman



Thursday, January 27, 2011

சிவாச்சாரியார்களின் குசும்பு கும்பாபிஷேகம்.


கிட்டதட்ட  65    ண்டுகளுக்கு பிறகு நடந்த   குடமுழுக்கு   நீராட்டு விழா.   ஏற்கனவே குடியிருந்த  சிவன் , சிவன் பொ ண்டாட்டி சௌ  ந்தரநாயகி, தொ ந்தி கண பதி, ரெண்டு பொ ண்டாட்டிகாரர்  சிவன் மகன் முருகன் அ ப்புறம்  சனி கோ ள்காரர் இ வர்களுடன் நவ க்கிரக கோள்காரர்கள் , துர்கை , குரு தெட்சிணாமூர்த்தி புதிததாக குடியேறினார்கள்.
ஏற்கனவே குடியிருந்தவ ர்களுக்கு  அ வ்வப்போ து விள க்கு எரியாது இ ருளில் முழ்கிவிடுவார்கள்.  இதில் புது குடியேறி களுக்கு என்ன நிலைமை ஆகப்போகிறதோ  எதிர்காலத்தில் தான் தெரியும்.
சாமிய குளிப்பாட்டுற ஆசாமியே  அ ப்ப அப்ப சாமிய  குளிப்பாட்ட மறந்துருவாரு… எதித்து கேக்க ஆ  சாமி அவ ங்க  கல்லு தானே… கட்டாயம் காசு வரும் கல்லுக்கு குளிப்பாட்டி    பூ வச்சு  பொட்டு வச்சு முதல் மரியாதை   உண்டு.
யாக ச்சாலை    பூசையின் இரண்டாவது நாள்.அக்கினி குண்டங்களை  சுற்றி சிவாச்சாரியார்கள் உட்கார்ந்திருக்க ஒரு சிவாச்சாரியார்  மை க் பிடித்து மந்திரம் சொ ன்னார்.  இ டையே ..இடையே..   கீழே குனிந்தப்படி மந்திரங்களை   வாய் சொ ல்ல கை ஏதோ  செய்ய 
என்னடா  கிட்டக்க போய் பார்க்க சாம்சங்  டச் போனில் யாருக்கோ    கால் செய்து தொ டர்பு கிடைக்கிறதா என்பதை  ஆராய்ந்து கொண் டிருந்தார்.
யாகச்சாலை க்குள் இ ருந்த சிவாச்சாரியார்களில் ஒரு சிலரை தவிர   சிரிப்பும் பேச்சுமாய் அ க்கினி குண்டங்களில் எதை  எதையோ  ஊற்றி கொ ண்டிருந்தார்கள்.
கும்பாபிஷேகம் என்பது என்ன?
இ தையெல்லாம்  தாண்டி முள்ள மாரி  முடிச்ச அவிக்கி  சிவாச்சாரியார்களுக்கு  ஆளுயர மாலை  ப் போ ட்டு தாரை தப்பட்டை முழங்க யானை  முன் நடக்க கிராம  வீதிகளில் ஊ ர்வலம் வேறு.
உண்மையிலே இது கலியுகம் தாங்க….

Thursday, January 20, 2011

நடுத்தர வர்க்கம் திருநங்கைகள் நிலை மை


மண்டையை  அ ரித்தது பண   ச்சிந்தனை . நடுத்தர வர்க்கத்தின் விதியை   நொ ந்து கொண்டே  நடமாடும் வாழ்க்கை.

முன்னேற முடியாமல் கீழே இறங்கவும் முடியாமல்  தொ ங்கியப்படியே   அ வ சியம் வாழ வேண்டிய  வாழ்க்கை.
சமூகத்தில்  அ ருகில் உள்ளவர் அ க்கம் பக்கத்தில் உள்ளவர்களின் சொ ல்லுக்கு மதிப்பு கொ டுப்பவர்கள் நடுத்தரவ ர்க்கம்.
இன்றைய  எதார்த்தம்  கண்முன்னே  பண  த்தால் மட்டுமே  ஆ கவேண்டிய   காரியங்கள் வரிசை  கட்டி நிற்க …. பண  மே பிரதானம்…பண மே வாழ்வு  என்று   கூக்குரலிட்டே  ஓடி கொ ண்டிருக்கும் . பிறந்து 16  வருடம் கழித்து படிக்கப் போகும் பையனுக்காக  பிறந்து 25  வருடம் கழித்து வேறு வீடு செல்லும் பிள்ளை க்காக  தன் உடல் நலம் நினையாது பசி இருந்தும் பசி மறந்து காசு …காசு.. என்ற மந்திரமாய் தான் பட்டதை  தன் பிள்ளை கள் படகூடாது என்ற வை ராக்கியமாய் ஓடும்.
இருப்பவன்  இ ல்லாதவன் ஏதோ  ஒரு துருவம் சேர்ந்து விட்டால் பிரச்சனை  இல்லா வாழ்வு. இருப்பவன் என்று காட்டிக் கொ ள்ள முனைவ தும் நீ இ ல்லாதவன் என்று இருப்பவர்களால் உண்டாக்கப்படும் அ வமரியாதைகளும் நடுத்தர வர்க்கம் என்றுமே திருநங்கைகள் நிலை மை தான்.

என்மனவானில் ரதிஅவர்களின்  “பொருளியல்வாழ்வும் பொழுதுபோக்கும் - Work and Leisure - இறுதிப்பாகம்”  பதிவில் உண்டான   சில  சிந்தனைக ள்.


Monday, January 17, 2011

உலகபாரம்பரிய சின்னம் தாராசுரம் கோவில் பயணம்

சிற்பம்
12-ம் நூற்றாண்டில் இரண்டாம் ராசராசரால்  கட்டப்பட்ட   தமிழ்நாடு கும்பகோண  த்திற்கு அருகில் தாராசுரம் ஐராவதேஸ்வர ர் கோ யிலை    நோ க்கி  எங்களது  பொ ங்கல் பயண  ம்  அமைந்தது.


2004 ம் ஆண்டு உல க    பாரம்பரிய  சின்னமாக அறி விக்கப்பட   மத்திய அரசு இக்கோயிலை  கையில் எடுத்து பராம ரித்து வருகிறது.
சிதிலமடைந்த முகப்பு


நுழைவாயில்

வாயிலில் நந்தி சாமி

நுழைவாயில் கோபுரம்

உள்கோவில்

உள்கோபுரம்

மதில்மேல் நந்தி சாமி

சிற்பம்



நாங்கள் சென்றபொழுது கூட்டம்  அ வ்வள வாக  இ ல்லை  . வெளிநாட்டினார் வ ருகை  கணிசமாக  இருந்தது.

தனிமையில்....


சிற்பம்


சிற்பம்


கருவறையிலிருந்து நீர் வெளியேற...


சிங்க சிற்பம்


சாமி....!!!!???


ரசிப்பு


வருகை


விளையாட்டு


நேரம் நேரம் ஆ  க ஆக  கோ விலை   சுற்றியுள்ள புல்வெளிகளில்      திறந்தவெளி  வட்ட  கூட்டம் நடத்த  மக்கள்  கும்பல் கும்பலாக வர ஆ ரம்பித்தார்கள்.
சிறுவ ர்கள் சிறுமியர்களுக்கு சிறந்த விளை யாட்டு மைதானமாக  பயன்பட்டது.







Friday, January 14, 2011

விவசாயின் பொங்கல்

தாமதமாய்
திறக்கப்பட்ட
அணை    நீர்

காலம் தப்பிய
பருவ மழை

தள்ளிப்போன
பயிர் விளை ச்சல்

பக்கத்து வீட்டு
அரசாங்க வேலையாளிடம்
வாங்கிய கடன்

அடகுவை த்த
மனை வியின்
கல்மூக்குத்தி

எங்கள்  வீட்டில்
தை பொங்கல்
திரு விழா

-விவ சாயி-

சிறிய விஷயங்களில் இருந்துதான் ஏராளம் கற்றுக் கொள்ள முடியும்: எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். (பகிர்வு)

"பிரம்​மாண்​டங்​க​ளைப் பார்த்​துப் பார்த்து,​​ சிறிய விஷ​யங்​க​ளைக் கண்​டு​கொள்​வ​தில்லை;​ ஆனால்,​​ அந்​தச் சிறிய விஷ​யங்​க​ளில்​தான் ஏரா​ள​மாக கற்​றுக் கொள்ள முடி​கி​றது' என்​றார் எழுத்​தா​ளர் எஸ்.​ ராம​கி​ருஷ்​ணன்.​
​ ​
​ ​ "அமெ​ரிக்க எழுத்​தா​ளர் தோரோ நடப்​பது பற்றி மட்​டும் 100 பக்​கங்​க​ளைக் கொண்ட புத்​த​கம் ஒன்றை எழு​தி​யுள்​ளார்.​ பூமி​யு​டன் நேர​டி​யா​கத் தொடர்​புள்​ளவை கால்​கள் மட்​டுமே.​ பள்​ளிக் காலங்​க​ளில் விளை​யா​டு​வ​தைத் தவிர கால்​க​ளுக்கு இப்​போது வேறெந்த வேலை​யும் நாம் கொடுப்​ப​தில்லை.​ சோம்​பேறி ஆவ​தற்கு முதல் அறி​குறி கால்​க​ளுக்கு எந்த வேலை​யும் கொடுக்​கா​த​து​தான்.​
​ ​ சைபீ​ரிய பற​வை​கூட இந்​தி​யா​வுக்கு பறந்தே வரு​கி​றது.​ நாம் இங்​குள்ள தாஜ்​ம​கா​லைக்​கூட பார்க்​கச் செல்​வ​தில்லை.​ பய​ணம் செய்​வ​தி​லுள்ள அனு​ப​வம் வேறெ​தி​லும் கிடைக்​காது.​
​ ​ கல்​விக் கூடங்​க​ளில் பயி​லும் கல்வி மனித வாழ்க்​கைக்கு நேர​டி​யாக பயன்​பட்​ட​தில்லை.​ வகுப்​பறை,​​ பாடங்​கள்,​​ தண்​ட​னைக்​குள்​ளேயே நாம் முடங்​கி​வி​டு​கி​றோம்.​
​ ​ ரஷிய எழுத்​தா​ளர் ஆன்​டன் ஷெக்​காவோ தனது வீட்​டின் முன் இருந்த காலி​யி​டத்​தில் ஆசி​ரி​யர்​க​ளுக்​காக ஒரு முகாமை அமைக்​கப்​போ​வ​தா​கக் கூறி​னார்.​ ரஷிய ஆசி​ரி​யர்​கள் கம்​பீ​ரத்​து​டன் இருப்​ப​தில்லை;​ அவர்​க​ளைக் கண்​ட​றிய முடி​ய​வில்லை என அவர் குறிப்​பிட்​டார்.​
​ ​ கல்வி என்​பது ஊதி​யம் பெறும் வேலை என்​ப​தோடு ஆசி​ரி​யர்​கள் நின்​று​வி​டு​கி​றார்​கள்.​ பணி​யாற்​றும் ஊரின் வர​லாறு,​​ அந்த மக்​க​ளின் பண்​பாடு போன்​ற​வற்​றைத் தெரிந்து கொள்ள ஆசி​ரி​யர்​கள் முனைப்பு காட்​டு​வ​தில்லை என்​ப​தெல்​லாம் ஷெக்​கா​வோ​வின் வருத்​தங்​கள்.​
​ ​ நம் வகுப்​ப​றை​க​ளில்​தான் பேதங்​களே தொடங்​கு​கின்​றன.​ அடிமை முறையை ஒழித்து ஆயி​ரம் ஆண்​டு​க​ளா​கி​யும் தொலைக்​காட்​சி​கள் ஒரே நாளில் அடிமை முறையை நமக்​குக் கற்​றுக் கொடுத்து விடு​கின்​றன.​ வீடு​க​ளில் குழந்​தை​க​ளைப் பேசவே விடு​வ​தில்லை;​ தொலைக்​காட்​சி​கள்​தான் பேசிக் கொண்டே இருக்​கின்​றன.​
​ ​ நாம் பிரம்​மாண்​டங்​களை நோக்​கியே பார்க்​கி​றோம்.​ அத​னால்,​​ சிறிய சிறிய விஷ​யங்​களை கண்​டு​கொள்​வ​தில்லை.​ உண்​மை​யில் சிறிய விஷ​யங்​கள்​தான்,​​ நமக்கு நிறைய கற்​றுத் தரு​கின்​றன.​
​ ​ தன்​னை​விட 5 மடங்கு அதிக எடை கொண்​ட​வற்றை எறும்பு சுமக்​கி​றது.​ நாம் எறும்​பைக் கண்​ட​வு​டன் நசுக்​கிக் கொள்​கி​றோம்.​ அதில் நாம் சுகம் கொள்​கி​றோம்.​
​ ​ ஒரு கல்லை எடுத்​தால்,​​ அதை யார் மீதா​வது வீசிப் பார்க்​கத்​தான் நாம் முனை​கி​றோம்.​ அந்​தக் கல் பெரிய மலை​யின் ஒரு பகுதி என்​றுப் பார்ப்​ப​தில்லை.​ கொஞ்​சம் கொஞ்​ச​மாக இந்த உலகை நர​க​மாக மாற்றி வரு​கி​றோம்.​ மனி​தர்​கள் தங்​க​ளி​ட​முள்ள சில சொற்​களை,​​ சிந்​த​னை​களை,​​ செய்​கை​களை மாற்​றிக் கொள்ள முன்​வர வேண்​டும்' என்​றார் எஸ்.​ ராம​கி​ருஷ்​ணன்.​
​ ​

Wednesday, January 12, 2011

ஆ ப் சரக்கு ஆ றுபாக்கெட் பில்டர்



முகம் கறுத்து போ யிருந்தது. கண்களின் வெண்மை  முகத்தின் கருமையை கூட்டியது.

தூர வருகையில் உருவத்தை அனுமானிக்க முடியாது மன தில் பதியவைத்த  உருவம்   சிதைந்திருக்க அ ருகே வர  அ வனா …இவன்?
என்று  தோ ன்றிய  வினா வினை   புறந்தள்ள  முடிய வில்லை.

அ ப்பா அரசாங்க உத்யோக ம் நல்ல வள ர்ப்பு நல்லகுடும்ப சூழல்.
பையனை   பொறியிற் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க படித்தான்.

பாக்கெட் மணியும் அப்படி இப்படி  வீட்டில் வாங்கிய பணமும் குடியும் புகை யும் ஆயின . பால ப்பருவத்தை கடக்கும் குழந்தையைப் போ ல்  தத்தக்கா…பித்தக்கா… என்று நடந்து  படிப்பு முடித்தான்.

காடாறு மாதம் நாடாறு  மாதமாய்  தான் அவன் வாழ்க்கை . வெளியூர் ஆ றுமாதம் என்றால் உள்ளுரில் ஆ றுமாதம். செலவழிக்க குறை வில்லா த  குடும்பம் ஆகையால் செலவழிக்க கொ டுத்தார்கள்.

கடைசியாய் சொ ந்தத்தின்  ஆ தரவில்  மாதம்  ரூ 32000  சம்பளத்தில் வேலை யில் சேர   தினமும் ஆ ப் சரக்கு ஆ றுபாக்கெட் பில்டர்  கொ சுறு அ யிட்டம் சேர்த்து மாதம் இதற்கு மட்டுமே  ரூ 14000 செலவழித்தான்.

திருமண  ம் ஆ னது சென்னை யில் தனிக்குடித்தன காரனாய் மாற  வரதட்சனையாய் கார் . அதற்குள் தகுதி   தானா ய் வந்து ஒட்டி கொ ள்ள    வீட்டு நிர்வாகம் இவன் செலவு  தட்டு தடுமாறி  ஓடியது அ ப்பாவின் உதவியால்..

வாழ்க்கை  தான் எப்படி வேண்டுமானாலும் மாறுமே அதுபோல் எதிர்பாராது அப்பா  நோ ய்பட  தகுதியாய் வாழ்ந்த குடும்பம் தகுதியாய் வாழவே  கஷ்டப்பட்டது.

இந்த சம்பள ம் போதாது  இருந்த வேலை யை  விட்டு வேறுவேலை  தேட தேடிய  இடமெல்லாம் முன்பு வாங்கிய சம்பளத்தை  விட குறை வாய் சொல்ல  சுவரில் அடித்த பந்தாய் பழைய முகவரியின் கதவை  தட்டினான் .  இவன் விட்ட பணியை  வேறு ஆள் செவ்வனே  செய்ய    வேலை  தேடுகிறான்.

அடிப்படை   தேவைகள்   மனை வியின் நகையால் ஈடுசெய்யப்பட  வேலை தேடுகிறான் .  ஆ னால் வேலை ....

Monday, January 10, 2011

தொடுவானம்



பிடிப்படாத எல்லை
பார்க்கும்
கண்களின் பார்வை
முடிவு
தொ டுவானம்
நடந்து ஓடி
இடைவெளி குறையாது
நீண்டது இருப்பிடம்
நின்று பார்க்க
அதோ …
நம்பிய  மன து
நடந்த உ டல்
தொ டு வானம்
தூரமாகியது.

Saturday, January 08, 2011

நன்கொடையும் பிச்சையும்



கோவில் புண  ரமைக்கும் பணி அந்த கிராமத்தில் தொட ங்கியது. பெரிய தொகை  செலவாகும் நிகழ்வு அது. நிதி வேண்டி கை நீட்டப்பட்டது.  தனிமனிதன் கை நீட்டினால் அது பிச்சை   குழு  கை   நீட்டினால் அது நன்கொ டை.

அரசாங்க அ திகாரி யும் அலுவல ர்களும் கை நீட்டுவது அது கௌ  ரவ பிச்சை.
அதாங்க லஞ்சம். …

பொ துமக்கள் தாராள மாய் நிதி வழங்கும் பொ ருட்டு கவர்ச்சி அறிவிப்பு ஒ ன்றும் வெளியிடப்பட்டது. ரூ 10000   க்கு  மேல் நன்கொ டையாக தருபவர்களின் பெயர்கள் கல்வெட்டில்  பெய ர் பொ றிக்கப்படும் என்பது தான் அ றிவிப்பு.

ஊ  ரில் வாழும்பெரும் பண  க்காரர்கள் பிழை ப்புக்காய் வெளிநாடு சென்றவர்கள் தங்களால் இயன்றவரை   கொ டுத்து தங்களுடைய  பெயர்கள் கல்வெட்டில்வர நிச்சயப்படுத்தி கொ  ண்டார்கள்.

இ ப்படியாக  நிதி கொ டுத்தவர்களின் உறவினர்கள் அவர்களுக்குஅருகில் வாழும் சுற்றத்தார்களுடைய   குழந்தைகளின் கல்வி   பொ  ருளாதார இடர்பாட்டினால் கேள்வியாய் நிற்கும்.   ஏழ்மையினால்  மட்டுமே சமுதாயத்தில் விலை   போ  காத முதிர்கன்னிகள் நிறை யவே இருப்பார்கள்.

இதை விடவும் கொ டுமையாக  தன்னை   பெற்றவர்களுக்கும்   தன்னுடன் உடன்பிறந்த வர்களுக்கும் பயன்தராத  இந்தபணம் இது போ ன்ற கோ வில் காரியங்களுக்கு பயன்தரும்

 "கவிக்கோ' அப்துல் ரகுமான் அ வ ர்களின் கவிதை வரிகள் மிகவும்  சிந்தனை க்குரியது.


சகோதரா
எப்படி இருந்த நீ
எப்படி ஆகிவிட்டாய்
நீ நூல் பல கற்றபோது
நூலால் உயரும் பட்டம்போல்
உயர்ந்து கொண்டே சென்றாய்
உயர்த்திய நூலை
உலகியல் என்று அறுத்தாய்
விழுந்து கொண்டேயிருக்கிறாய்
மறுமைக் கல்வி
கற்றால் போதும்
இம்மைக் கல்வி
தேவையில்லை என்று
இம்மையை ஒதுக்கினாய்
இம்மை
உன்னை ஒதுக்கிவிட்டது
பெண்கள்
முழுக்க மறைக்கும்
முக்காடு போடவேண்டும்
என்பவனே!
அவர்களில் பலருக்கும்
மாற்றுடை இல்லை என்பதை
நீ அறிவாயா?
அவர்கள் ஆடையின் கிழிசலில்
உன் மார்க்கமும் கிழிந்திருக்கிறது
என்பதை உணர்வாயா?

Wednesday, January 05, 2011

மது மாணவர்களையும் அடிமையாக்கும்.


அவன்    அம்மா  பிள்ளை   . தனக்கு தெரியாதவர்கள் எதிரில் நின்றாலே  மௌ   ன ம்    தான் அவன் மொ  ழி.  .  விபரங்களுக்காக வினாக்கள் தொ டுத்தால் ஒரு சில  வார்த்தைகளில்  பதில்.

அ ந்த ஊ  ரில் பேர் வாங்கிய  ஆ ங்கிலபள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து கொ ண்டிருந்தான்.

இளமையின் துவக்கம் வெளிஉலகத் தொட ர்புகளுக்காய் வெளிவர அவன் வந்து சேர்ந்த இடம் குடியும் புகையும் உள்ள  நண் பர்கள் தான்.

வீட்டில் அவன் அமைதி பார்த்து  இவன்தான ய்யா பிள்ளை  என்று வியந்தவர்கள் உண்டு.

எப்பொழுதும் போல அன்றைக்கும் பள்ளி கிளம்பி நண் பர்களுடன் குடிக்க ஆ சைப்பட்டு மதுவை  தண்ணீர் குடிக்கும் பாட்டிலில் கொ ண்டு செல்ல   எப்படியோ  வகுப்பாசிரியை  தெரிந்து  பள்ளி முதுல்வருக்கு  விசயம் சொல்லப்பட்டது.

விசாரணை   யின் போ து கொ ஞ்சமும் பயம் கொ ள்ளாது டி.சி. கொடுங்கள் என்று மாண  வன் கேட்டது  பெற்றோ  ர்களுக்கு தெரிவிக்கப்பட ...

கெஞ்சிய  நிலை மையில் மன்னிப்பு கோ ரி பள்ளி முதல்வரிடம்  பத்தாம் வகுப்பு பொதுதேர்வு எழுதப்போகும் தன்னுடைய  பையனுக்காக நின்றுகொ  ண்டிருந்தார்கள்.

ஒரு சர்வே  முடிவு

இந்தியாவின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வசிக்கும் மாணவ-மாணவிகளில் சுமார் 45 சதவீதம் பேர் மது குடிப்பது “சர்வே” யில் தெரியவந்துள்ளது. இந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் பிளஸ்-2 படிப்பவர்கள் என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாகும்.

பிளஸ்-2 மாணவர்கள் எப்படி மதுவுக்கு அடிமை யானார்கள் என்பதற்கும் இந்த சர்வேயில் விடை கிடைத் துள்ளது. சமூக மாற்றங்களால் மாணவர்களிடம் ஏற்பட் டுள்ள அதிக பணப்புழக்கம், பெற்றோர்கள் கண்காணிப்பு குறைவது, படிப்பால் ஏற்படும் மன அழுத்தம், புதிய வகை கொண்டாட்டங்கள் போன்றவை மாணவர்களை குடிகாரர்கள் ஆக்கி விடுவதாக தெரியவந்துள்ளது.

15 முதல் 19 வயதுக்குள் தான் மாணவர்கள் குடிகாரர்களாக மனம் மாறுகிறார்களாம். பீர் மட்டும் குடிக்கலாம் தப்பு இல்லை என்ற தவறான வழிகாட்டுதல் மாணவர்களை மதுபான பழக்கத்தை உண் டாக்குகிறது.

என்ன காரணத்தை அடிப்படையாக வைத்து மாணவர்கள் மது குடிக்கி றார்கள் என்பதும் சர்வே மூலம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மன அழுத் தம் ஏற்பட்டு மனம் அப்செட்டாகும் போது மதுவை தேடிச் செல்வதாக 32 சதவீதம் இளைஞர்கள் கூறி உள்ளனர். தனிமை காரணமாக மது குடிப்பதாக 18 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

போர் அடிப்பதாக நினைத்தால் 15 சதவீதம் பேர் குடிக்கிறார்களாம். பிறந்த நாள் கொண்டாட்டம், புத்தாண்டு, கிறிஸ்துமஸ், காதலர் தினம் போன்ற சமயங்களில் மட்டும் மதுபானம் குடிப்பதாக 70 சதவீத இளைஞர்கள் கூறினார்கள்.

Monday, January 03, 2011

என் பேனா



எழுத தெரியா
என் பேனா கூட
எழுத புறப்பட்டது
வேகமாய் ஆ ரம்பித்து
விரைவில்
சோ ர்ந்து போ னது
புரிந்தது
ஆ ரம்ப வேகம்
அபாயம் என்று
உள்ளிருப்புகளை
அதிகமாக்கி
சோ ர்ந்து விழாது
மீண்டும் துவக்கம்
சீராய் வேகம்
எழுத்துகள்
வலிமையாகி
வெளியில் பேசாது
தன்னுள் தன்னை
போ ற்றி
எழுதியதுஎழுத 
தெரியா
என் பேனா  கூட….

Saturday, January 01, 2011

ரஞ்சிதாவும்- தி.மு.க வும்


கடந்த சில தினங்களாய் தினசரிகளில் வந்த    விளக்க பொதுகூட்டங்களும் மறுப்பு செய்தியும்தான் மன நெருடலாய்
உள்ளது.

ஒன்று 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊ  ழல் தொட ர்பான  தி்மு.க. வின் விளக்க பொதுகூட்டங்கள்?

என்றை க்கு மீடியாக்கள் விழித்துகொண்டு 2ஜி ஊ ழலுக்கும் - தி.மு.க  உள்ள தொடர்பை  அம்பலப்படுத்தியதோ   அன்றைக்கே  தொ டங்கியிருக்க வேண்டிய    தி.மு.க.  விள க்ககூட்டங்களில் தாமதம் ஏன் ?


இரண்டாவது நித்தி புகழ் ரஞ்சிதாவின் காலம் கடந்த மறுப்பு செய்தி.

உடனே மறுக்க வேண்டிய  விசயத்தில் தாமதம் ஏன்?

தினசரி படிக்கும் சாதாரண தமிழனின்  மன நெருடலாய்  என் மன நெருடல்.

உண்மை கள் அவர் அவர்களுக்கே சொந்தம்.

ஏமாற்றப்படுவர்களாய்   திருவாள ர் பொ துமக்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails