Wednesday, January 13, 2016

நாளையும் தொடரும் இந்தப் பரபரப்பு



பொங்கல் பண்டிகையின்
பரபரப்பு
கடைத்தெருவில்

குருடர்
பிச்சையெடுக்க
சிறுவன் வழிகாட்டி
மகனா என்று
தெரியவில்லை
காசு விழும்வரை
நிற்காத
டப்பாவின் குலுக்கல்

குச்சி ஊனி
கடந்து செல்லும்
பாட்டி

கரும்பையும்
வாழைத் தாரையும்
சுமந்து செல்லும்
கிராமத்துத்தலைகளும்
தோள்களும்

துணைக்குப் பிள்ளைகள்
பையில் மஞ்சள்கொத்தும்
பலசரக்கும்

இடுப்பில் கைப்பிள்ளை
கையில் ஒருபிள்ளை
இலக்கு நோக்கி
நடக்கும் பெண்மணி

மதிய பள்ளிக்கு
சிரித்தபடியே
சீருடையில் செல்லும்
சிறுவர்கள்

தலைவரிசை
வைக்க கரும்புகட்டு
ஏற்றிசெல்லும்
ஆட்டோகளும்
கார்களும்

நாளையும் தொடரும்

இந்தப் பரபரப்பு....

4 comments:

மாதேவி said...

கண்முன்னால் விரிகிறது காட்சிகள்.

இனிய பொங்கல் வாழ்த்துகள்.

மாதேவி said...

கண்முன்னால் விரிகிறது காட்சிகள்.

இனிய பொங்கல் வாழ்த்துகள்.

தவறு said...

வாங்க மாதேவி....தங்களுக்கும் இனிய தமிழர் திருநாட்வாழ்த்துகள்.

நிஷா said...

பொங்கல் வாழ்த்துகள்! பொங்கலோ போங்கல்!

LinkWithin

Related Posts with Thumbnails