Friday, November 19, 2010

பெற்றோர்களின் பாவம் பிள்ளைகள் தலையிலே..

கோடாலியை  வைத்து நெஞ்சை பிளந்து போட்டு விடலாம். ஆனால் பேச்சு…

பெற்றோர்களின் பாவம் பிள்ளைகள் தலையிலே..

ஆம்..அவர் அப்பா  வைத்துவிட்டு போன கடன் . கடன்காரர்களின் நெருக்குதல்  ஒரு நாள் செத்துப்போனார்.

வாடிக்கையாய்  கடன்காரர்களின் நெருக்குதல்   வீட்டில் பிரச்சனை  ஏற்படகூடா என்று நினைத்த கடைக்குட்டி பையன்.

நான் தர்றேங்க...

தந்தை இறந்தவுடன் குடி மாறி சென்றார்கள்.
பல வருடங்கள் ஆனது.

மூன்று பையன்கள் அதில்  இரு பையன்களிடம் அப்பாவின் கடனை  அடைக்க கூடிய முழு தகுதி இருந்தும்  யார் பட்ட கடனோ  என்கிற பாணி.

அன்று அவர் அப்பாவிடம்  பணம் கொடுத்து ஏமாந்த டீக்கடைக்காரர் பார்த்துவிட …

தண்ணி போட்டிருந்தார்.

யோவ்…என் பணத்த  ஏமாத்திட்டு போயிட்டீங்கிளா..
நீங்க நல்லா இருப்பீங்களா…என்று கேட்க ஆரம்பித்து.

யோவ்..முழுசா அய்யாயிரம் கொடுத்தேன்.

நான் போலீசுக்கு போறேன் சொன்னப்ப   நீ தர்றேன்னு சொன்னில்ல..

நாங்க என்ன வீட்டுல கூட்டி கொடுத்த சம்பாதிச்சும் கஷ்டப்பட்டு சம்பாதிச்சது…

என்றார் கடைக்குட்டி பையனிடம். தலைகுனிந்த வாறே  நின்றிருந்தார் அந்த பையன்.

அவர் பக்கத்து நின்றிருந்த நண்பர்களாலும் எதுவும் பேச இயலாது நின்றிருக்க.

அவரால் கத்த முடிந்த மட்டும்   கத்தி விட்டு சென்றார்.

அவர் பேச்சு  முள்ளாய் தைத்தது.

5 comments:

தமிழ் உதயம் said...

பாவம் ஒரு பக்கம். பழி ஒரு பக்கம்.

http://thavaru.blogspot.com/ said...

நிறைய பேருக்கு இந்த சூழல் தாங்க தமிழ்உதயம்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

கொடுமை..:((

http://thavaru.blogspot.com/ said...

செய்வதறியாது திகைத்த நண்பர்களில் நானும் ஒருவன் தான் பயணமும் எண்ணங்களும்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

என்ன செய்ய .
பொறுமையாய் இருந்து வாழ்ந்துகாட்டி கடனை அடைப்பதே நாம் அவர்களுக்கு செய்யும் தண்டனை..

LinkWithin

Related Posts with Thumbnails