Thursday, May 13, 2010

முதிர்ந்த இலை

முதிர்ந்த இலைகள் கொட்டி கிடந்தன. அது உட்கார்ந்து வேலை செய்வதற்கான இடத்தை சுத்தம் செய்தது. 

எடத்த கூட்டி போட மாட்டேங்குறாங்க   நாம தான் கூட்டிகனும்?  என்று தனாய் பேசியப்படி கூட்டியது.

வாழ்க்கையில் பேரன் பேத்தி எடுத்து நல்லது கெட்டது வாழ்ந்து அனுபவித்துஇப்பவும் தன் கைஉழைப்பில் வாழ்ந்து கொண்டிருந்தது.

அந்த மரநிழலில் உட்கார்ந்து கீற்று பின்னுவதுதான் அது வேலை. கீற்று ஒன்றுக்கு கூலி ரூபாய் ஒன்று. நாளைக்கு அறுபது எழுபது கீற்றுகள் பின்னும்.

குத்துகாலிட்டு உட்கார்ந்து பின்ன ஆரம்பிக்கும் யாருடனும்  பேசாது யாரும் பேச இருக்கமாட்டர்கள் அந்தபகல் பொழுதில் அதுக்கு உதவி செய்யும் ஆளும் வேறு வேலை பார்த்து கொண்டிருந்தால் இது தனி தான். 

மனதில் தோன்றியவை சேதியாக வரும் பாட்டாக வரும்சிரிக்கும் அழவும் செய்யும். வேலையுடன் கூடிய தனிமைபொழுதுகள் இப்படிதான் கழியும்.

வேலை இல்லா நாட்களில் சுள்ளி பொறுக்கும் அதுவும் இல்லா நாட்களில் அறுப்புநாட்களில் களத்தில் விவசாயிகள் விட்டு சென்ற ஒன்று இரண்டுநெல்மணிகளை கல் மண் பிரித்து ஒன்று சேர்த்து அன்றைய செலவுக்கு தயார்செய்யும்.

யாரும் கிட்டே நெருங்கி பேசினால் வாய் நிறைய சிரிப்புதான்   பாட்டாக தான் பதில் வரும்.   பேசியவர்கள் சிரித்து மகிழ்வார்கள் பேசி முடிக்கும்வரை சிரித்தப்படியே இருக்குமாறு பேசும்.

வாழ்க்கை மரத்தில் பழுப்பாகி நிற்கும்  அந்த இலை   உதிர காத்துஇருக்கிறது. காற்றின் போக்கில் எந்த திசையிலும் அசைந்தப்படியே அதன் போக்கு.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails