Thursday, May 20, 2010

வாடகை

போரில் தோற்றுவிட்ட அவமானம் தன்னிலை மறக்க குடித்து கொண்டிருந்தார். போர் ஆரம்பித்த நாள் முதலாய் குடிக்க தொடங்கிநடக்க முடியாது தடுமாறி நடந்து ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்வது வாடிக்கையான கதையாகி விட்டிருந்தது.

பல லட்சங்கள் சில வீடுகளுக்கு அதிபதியானவர்.ஒரு சில வீடுகளை வாடகைக்கு குடியமர்த்தி காசு பார்த்து கொண்டிருந்தார். அதில் ஒரு வீட்டை மாதம் ரூ1800 வாடகைக்கு விட்டு மூன்று வருடங்கள் முடிந்து விட்ட நிலையில் இன்றுள்ள பொருளாதார வீக்கத்திற்கு தகுந்தாற் போல்  இவர் வாடகையை உயர்த்திரூ 3000 வேண்டுமென  குடியிருப்பவரிடம் கேட்க போருக்கான விதை  போடப்பட்டது.

குடியிருப்பவர் திடீரென ரூ 1200 உயர்த்தி கேட்டால் எப்படி கொடுக்கமுடியும் என்று கூற இல்லை  நீங்க ரூ 3000 தரலாம் என்று கூற போர் ஆரம்பம் ஆனது.

குடியிருப்பவர் வாடகையை மாதம் மாதம் மிக சரியாக கொடுத்து விடுவார். இவரை விட மனமில்லாது வீட்டின் உரிமையாளர் பேரம் பேச ஆரம்பித்தார்.

குடியிருந்தவருக்கு கொடுக்க விருப்பமில்லை.  வீட்டுகாரர் கொஞ்சம் முன்கோபகாரர் சரி  வீட்டைகாலி பண்ணிவிடுங்கள் என்று சொல்ல..

காலி பண்ணிவிடுகிறோம் ஆறுமாதம் அவகாசம் தாருங்கள் என்று குடியிருந்தவர் கேட்க..

உடனே காலி பண்ண வேண்டும் இல்லாவிடில் நீங்கள் காலி பண்ணும் வரையில் ரூ 3000 வாடகை தரவேண்டும் என்று வீட்டுகாரர் கூற அது தரமுடியாது குடியிருந்தவர் மறுத்தார்.

மாத முதல் தேதி வர பழைய வாடகையை  வாங்கவீட்டுகாரர்  மறுக்க வக்கீல் நோட்டீஸ் அனுப்பி கோர்ட்டில் பணத்தை கட்டிவிட்டார் குடியிருந்தவர்.

போர் உக்கிரம் அடைய ஆரம்பித்தது. வீட்டுகாரர் யார் யாரையோ  வைத்து பேசினார் கோபப்பட்டார் குடியிருந்தவரும் விடாது போர் செய்தார். இருவரின் மன அமைதியும் காணாமல் போனது.

வீட்டுகாரர் குடியிருப்பவருக்கு குறைத்து கொடுத்தால் ஆறு மாதத்திற்கும் ரூ7200 இவருக்குஇழப்பு. குடியிருப்பவர் கொடுத்தால் அதே தொகை  அவருக்கு இழப்பு.

எதிரியாகி கோர்ட் போலீஸ்  என்று இன்னமும் போர் நடந்து கொண்டிருக்கிறது.

இருவரும் ஆளக்கொரு ஆளாய் பிடித்து கொண்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள். இருபக்கமும் ஏச்சுகளும் பேச்சுகளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

வீட்டுகாரருக்கு தோற்றவிட்டதாய் நினைப்பு  யாரிடம் சொன்னாலும் அவர்தான் ஆறுமாதத்தில் காலி பண்ணிவிடுவதாக சொல்கிறாரே விட்டுகொடுங்கள்  என்று சொல்ல  ....  இவர் குடித்து கொண்டிருக்கிறார்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails