Tuesday, July 09, 2013

குற்றால சாரலும் சில குறிப்புகளும்


ஹான்னுட்டு… கண்கள் மேல்நோக்கியே பார்த்து கொண்டிருந்தது. 

கரும்பாறைக்களுக்கு நடுவே பட்டை வெள்ளைகோடாய்  நீர் விரைந்து பெரும்சப்தத்துடன் கீழிறிங்கியது.

காற்றில்அடித்த அருவியின்சாரல் துளிகள் சிறிதாய் முகம் நனைத்து   குளிரவைத்தது.

குளித்து குளிர்ந்தவர்கள் ஆ…..ஊ…சப்தங்கள் காதுகளை வந்தடைய தவறவில்லை.

கழுத்தில் தங்கசெயின் அணிந்தவரிடம் ”பல்லிடுக்கில் செயினை எடுத்து வைத்துகொள்ளுங்கள்”  என்று தங்கசெயின் அணியாதவர் அறிவுறுத்தினார்.

அருவிகளில் குளிக்கும் போது சோப்பு , ஷாம்பு பயன்படுத்தவேண்டாம் என வாசகம் எழுதப்பட்டிருந்தும். கடைகளில் விற்க அனுமதிக்கப்பட்டிருந்தது.  எச்சரிக்கை வாசகம் தேவையற்ற தாகவே இருக்க நிறையபேர் சேப்புநுரையால் ஷாம்பு  நுரையால் தன்னை  கழுவி  மற்றவர்களையும் கழுவினார்கள்.

குடித்த குடி சாப்பிட்ட அசைவ சாப்பாட்டினால் அருவியின் சுகம் என்னவென்று தெரியாமல் பலபேர் குளிக்க சில பேர்  அருவியின் குளியல் சுகம் அறிந்தார்கள்.

கடைதெருகளில் பொருட்கள் வாங்குவதைவிட அவர் அவர் ஊர்களில் வாங்குவது நன்மை என வியாபாரிகள் விலை ஏற்றிவைக்க பொருள் வாங்க பேரம் பேசுவது நல்லதாகப்பட்டது.

பனை நுங்கு  இளநீர் பழாப்பழம் நம்ம ஊரைவிட விலை அதிகம் தெரிந்தது.

நல்ல சூழலில் மழைமேகங்கள் பெய்து கொண்டே விரைந்து விட அடுத்த மழைமேகங்கள் வரும்வரை தன் பணியை செவ்வனே செய்யும் சூரியன்.

இரவுஅடிக்கும் காற்றில் குளிர்ந்து போகும் உடல் மனதுக்கு அமைதி கொடுத்து சூழலை ரசிக்க செய்யும்.

சுற்றியிருக்கும் மலைத்தொடர்களில் தவழும் மேகக்கூட்டங்கள் அழகை ரசித்தவாறே நடக்கும்தனிமை நன்று.

குழு குடும்பம் வீடுகள் விடுதிகளில் நிறைந்து இரண்டு மூன்று நாட்கள் தங்கி  அருவிகளில் ஆனந்த குளியல் குளிக்க குற்றாலம்  மக்கள் கூட்டத்தால் நிறைய வருபவர்களின் வாகனங்கள் குறைந்தபாடில்லை.


மழை முகடுகளில் பெய்த மழையால் அருவிகள்  ஆர்பரித்து கொட்டி கொண்டேயிருக்க மக்கள் நனைந்து கொண்டேயிருந்தார்கள்.

1 comment:

ஜோதிஜி said...

பத்தாண்டுகளுக்கு முன்னால் சென்றது. மீண்டும் ஒரு முறை செல்ல வேண்டும்.

LinkWithin

Related Posts with Thumbnails