Wednesday, December 17, 2008

உள்ளங்கை சூடு

சாரல் காற்றுடன் குளிர் வித விதமான ஆடைகளில் தன்னை மறைத்து கொண்டு குளம் நோக்கி சிறுவர்கள்.

குளக்கரையில் ஆ.. ஊ.. டேய் ஓடி போய் குளிடா.. நிக்காதேடா.. என்று சொல்லும் சிறுவனை நோக்கி

டேய்.. நீ பர்ஸ்ட்.. நான் அப்புறம்..

ஏப்பா.. குளிருது.. டேய் தள்ளாத..அப்புறம் நான்…

ஒரு வழியாக குளித்து முடிந்து பக்தி பாடல்கள் பாட கோவில் நோக்கி சிறுவர்கள் பாடல்கள் பாடி முடித்ததும்

அவர் அவர் உள்ளங்கைகளில் சூடாக தரப்படும் வெண்பொங்கல் சூடு தாங்காமல்

ஊவ்..ஊபூ.. ஊதியப்படியே வலம் இடம் மாற்றி ஆறவைத்து உண்பார்கள்.

இடம் மாற்றி ஆறவைக்கையில் சிதறி போகும் வெண்பொங்கல் காக்கை குருவிகளின் உணவாக, சூடாக உண்ணப்படும் வெண்பொங்கல் வாயும் சூடு தாங்காமல் முழுங்கவும் முடியாமல் நாக்கினால் இடம் மாற்றி ஆறவைக்கும் அவஸ்தை நிதானமாய் லவகமாய் உருட்டி ஆறவைத்து வீணாகாமல் உண்ணப்படும் வெண்பொங்கல்.

அய்யோ இந்தா சூடு .. எனக்கு வேண்டாப்பா ..

டேய் ..நீ தின்னுறா.. என மற்றவர்களின் கையில் கொடுக்கப்படும் வெண்பொங்கல்.

தாங்கற அளவு எதுவாயிருந்தாலும் தாங்கிடலாம், தாங்க முடியாத போது எதுவாயிருந்தாலும் பலவிதமா திசை திரும்பிவிடும் வாய்ப்புகள் அதிகம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails