Tuesday, July 07, 2009

வரதட்சணைக்கு முற்றுப்புள்ளி

கேரளா மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் கிராமத்தில் 40 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலாவனர்கள் முஸ்லீம்கள் . இந்த கிராமத்தில்வரதட்சணை கொடுமையால் பல பெண்கள் 30 வயதாகியும் திருமணமகாமல் இருப்பது கிராம பஞ்சாயத்து தலைவர் ஆர்யதன் சவுக்கத்துக்கு தெரிந்தது.

வரதட்சணை கொடு்க்க முடியாததால் 1300 அதிகமான பெண்கள் திருமணமாகாமல் இருப்பது தெரிந்தது. மேலும் பெண்களுக்கு வரதட்சணை கொடுத்தே 40 சதவிகதம் அதிகமான குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டது தெரிந்தது.

இந்த கொடுமையை முற்றிலும் ஒழிக்க தலைவர் ஒரு குழுவை அமைத்தார். வீடு வீடாக சென்று மக்களிடம் இந்த குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
வரதட்சணை கொடுமையால் பெண்கள் பாதிக்கபட்டதையும் எடுத்துரைத்து இனி வரதட்சணை வாங்கமாட்டோம் கொடுக்கவும் மாட்டோம் என்ற உறுதிமொழியை பெற்று கொண்டனர்.

வரதட்சணை கொடுமையை விளக்கும் தெரு கூத்துகள் திரைப்படங்கள் காட்டப்பட்டன. முதலில் பலனில்லை என்றாலும் 6 மாதத்தில் நல்ல பலன் கிடைத்துள்ளது. வரதட்சணை கிராமத்திலிருந்து காணாமல் போய்விட்டது.

1 comment:

Anonymous said...

பெண்களிடமிருந்து வரதட்சனை வாங்காமல் பெண்ணுக்கு மஹர்(பெண்கள் நிர்ணயம் பண்ணும்)தொகையை கொடுத்து மணமுடிக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் அடிப்படையில் ஒன்று .இஸ்லாத்தில் வரதட்சணை இல்லைனு நாங்கள் பெருமை பட்டுகொண்டாலும் பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த‌ அடிப்படையை கூட தெரியாமல் இருக்கிறார்கள் என்பது கவலைக்குரிய விஷயமா இருக்கிறது.

LinkWithin

Related Posts with Thumbnails