Thursday, July 09, 2009

எதற்கும் மசிவதாக தெரியவில்லை அந்த மோடம்.


காலை வந்தவுடன் கம்ப்யூட்டரைமுடுக்கிவிட்டான். உயிர் பெற்றது கம்ப்யூட்டரில் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்தான்.
இன்டர் நெட் பயன் பாட்டிற்காக USB மோடம் இணைத்திருந்தான்.

காலையிலே தன்னுடைய முழுமையான ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கியிருந்தது அந்த மோடம். ஒரு தடவை இரண்டு தடவை பல முறை சரி செய்ய முயற்சித்தான். அது தன்னுடைய பணியை செவ்வனே செய்யதது.

இணையத்தில் முடிக்க வேண்டிய வேலைகள் ஒரு புறம் இருக்க முயற்சித்தும் முடியாமல் போனதால் அவன் மனதில் ஒரு கடுப்பு உருவாகி இருந்தது.

இதனால் அவனுடைய மற்ற வேலைகளில் கவனம் சிதற ஆரம்பித்து . தொடர்ச்சியாக பயன் பாட்டில் இருந்த ஒன்று பயன் பாடாமல் போனவுடன் அந்த சூழலை சமாளிக்க மனதில் ஏற்ப்பட்ட கடுப்புடன் என்ன செய்யலாம் என்று யோசித்தான்.

எரிச்சல் முதலில் வந்தது. தன்னுடைய கோபத்தை மோடத்தின் மேல் காட்டுவதாக நினைத்து கொண்டு அவனுக்குள்ளே திட்டி கொண்டான். எதற்கும் மசிவதாக தெரியவில்லை அந்த மோடம்.

2 comments:

ரவி said...

அவ்வ்வ்வ்வ்வ்

என்ன தான் சொல்லவரீங்க..

எதாவது மேடம் மசியலன்னா கஷ்டப்படலாம். மோடம் மசியலைன்னா பதிவு போடறது ?

http://thavaru.blogspot.com/ said...

சரியாக பயன்படும் ஒன்று சரியான நேரத்தில் பயன்படாமல் போனால் உண்டாகும் மனநிலை எப்படி இருக்கும்
என்பதை தான் சொல்ல வருகிறேன் செந்தழல் ரவி அவர்களே..

LinkWithin

Related Posts with Thumbnails