Tuesday, July 21, 2009

கருப்பு பசு


அந்த கருப்பு பசுமாடு காலையில் அவிழ்த்து விட்டால் மாட்டினுடைய சொந்தகாரர் தேடிபிடித்து கட்டாமலே தான் எப்பொழுதும் படுத்திருக்கும் இடம் வந்து படுத்து விடும்.

மாட்டின் சொந்தகாரர் மாட்டை பத்தி கவலைபடமாட்டார்.
காலையில் கிளம்பும் மாடு எங்கு மேய்கிறதோ இரவானதும் வீடு திரும்பிவிடும்.

அது பசுமாடு மேய்ச்சலில் எங்கேயோ காளை மாட்டுடன் ஒன்று கலந்து தன்னுடைய கன்றை ஈன காத்திருந்தது. யாரோ போகிற போக்கில் யோவ் ..உம்மாடு ..செனைய்யா பாத்து நல்ல கவனிச்சின்னா ..நல்ல ஜாதி மாடு பால் கறவ வெளுத்துபுடுய்யா பாத்துக்கு என்று சொல்லிவிட்டு போக..

அதுவரையில் மாடு ஒன்று இருப்பது தெரியும். மாடு தண்ணி குடித்ததா வைக்கோல் தின்றதா என்றெல்லாம் அவர் கவலைபட்டது கிடையாது.

இந்த சேதி என்னிக்கு தெரிந்து கொண்டாரோ அன்றைக்கு இரவு மாட்டினுடைய வருகைக்காக காந்திருந்தார். அதுவரையில் அந்த பசுமாட்டை இவர் பிடித்தது கிடையாது. அன்று இரவு அவர் பிடிக்க போய் ஓட்டம் எடுத்தது பெரும் போராட்டம் நடத்தி நாலு தெருக்கள் தாண்டி போய் ஒரு சந்தினுள் வைத்து மாட்டை பிடித்தார்.

மறுநாளிலிருந்து காலையே மாட்டை குளிப்பாட்டி மஞ்சள் பொட்டுவைத்து கொட்டகையில் கட்டி மூன்று வேளையும் தண்ணி வைத்து வைக்கோல் போட்டு சிரத்தையுடன் கவனிக்க ஆரம்பித்தார்.

அவர் சிரத்தையெடுத்தால் அதில் பலன் இல்லாமல் செய்யமாட்டார் என்பது அவருக்கு அருகில் வசித்தவர்களுக்கு தெரியும்.

இவருடைய செய்கையை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தார்கள் நல்லநாளில் அந்த கருப்பு பசுமாடு கன்றை ஈன..

அதான என்னடா இவன் மாட்ட இந்த கவனிப்பு கவனிக்கிறானே பாத்த விசயம் இதுதானா..

அவர் அதனிடமிருந்து பெறும் பாலுக்காக மாட்டினுடைய வேலைகாரனாக இருந்து மாட்டிற்கு சேவை செய்து கொண்டிருந்தார்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails